- Wednesday
- June 3rd, 2026
யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள யுவதியொருவரின் வீட்டுக்குச் சென்று வெள்ளை வானில் கடத்துவோம் என்று அச்சுறுத்தல் விடுத்த மூவரை, நேற்று புதன்கிழமை (27) காலை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதான மூவரும், 28, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனக்...
யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னால் ஒரு பௌத்த கோயில் வேண்டும் என கோரி துண்டுப்பிரசுரங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன. இது யாழ்.பல்கலைக்கழக பௌத்த மாணவர்கள் ஒன்றியத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் நிலவும் வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது எனக் கூறப்படுகின்றது. முல்லைத்தீவு - மல்லாவி - பாலையடியைச் சேர்ந்தவரின் சடலமே வீட்டின் வறுமையால் இவ்வாறு வைத்தியசாலையிலேயே காத்துக்கிடந்தது. காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்....
இங்கிலாந்தில் மாணவன் ஒருவன் ஆங்கில பாடத்தில் தவறாக எழுதிய ஒரு வார்த்தையால் பொலிசார் அம்மாணவனின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டுள்ளனர். இங்கிலாந்தின் Lancashire என்ற இடத்தில் உள்ள பள்ளியில் பயின்று வந்த 10 வயது மணவன், தனது ஆங்கில பாடத்தில் நான் மாடி வீட்டின் வசிக்கிறேன்(Terrace house) என்று எழுவதுதற்கு பதிலாக நான் தீவிரவாத வீட்டில் வசிக்கிறேன்...
தெல்லிப்பளை – அளவெட்டி வீட்டுத்திட்ட உதவியின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் உரியவர்கள் கடந்த பல வருடங்களாக மீள்க்குடியேறாமையால் அயலில் உள்ள கலவன் பாடசாலையும், அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களும் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகி வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அளவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள அளவெட்டி அருணோதயாக்...
அழகான பெண்போல பாவனை செய்து, இளைஞனொருவனைத் தன் வலைக்குள் வீழ்த்தி, அவரிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தை கறந்தவர் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்களின் ஊடாக அச்சுறுத்தி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் குழுவொன்று ஈடுபடுவதாக நீதவானின்...
பூநகரியில் 860 ஏக்கர் காணி போலி ஆவணங்கள் மூலம் சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதுடன் அக்காணிகளில் புதைக்கப்பட்ட சடலங்கள் புதையல் பூஜை என்ற போர்வையில் அகற்றப்பட்டுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது: பூநகரி- கெளதாரிமுனை - பரமன்கிராயில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 860 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு விற்பனை...
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலையிலுள்ள ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை சம்பந்தமாக ஊடகம் தவறான செய்திகளை பிரசுரிப்பதால் பொதுமக்கள் பலர் சஞ்சலங்களுக்கு உள்ளாகி வருவதாக மன்னார் ஆயர் இல்ல வட்டாரம் கவலை தெரிவிக்கின்றது. கடந்த வாரம் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை தனது 23 வருட ஆயர் பணியிலிருந்து ஓய்வு...
இறுதிக் கிரியைக்கு தயாராக இருந்த சடலத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த 48 வயதுடைய கார்த்திகேசு தவராசா என்பவரின் சடலமே இவ்வாறு மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வவுனாவில் கடையொன்றில் சிப்பந்தியாக கடமையாற்றியுள்ளார். இவர் கடந்த 10ஆம் திகதி...
கனகராயன்குளம் பகுதியில் விறகு வெட்டச் சென்ற விதவைப் பெண்கள் மீது வனஇலாக அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் கோடரிகளையும் பறித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனகராயன்குளம், மன்னகுளம் காட்டுப்பகுதிக்கு கடந்த சனிக்கிழமை மாலை 3 மணியளவில் போரின் போது தமது கணவன்மாரை பறிகொடுத்த நான்கு விதவைப் பெண்கள் தமது...
கோப்பாய் - இராசபாத வீதியிலுள்ள தோட்டப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் குதித்த காதலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய காதலன் பலியாகியுள்ளதோடு, அவரது 21 வயதான காதலி உயிர்தப்பியுள்ளார். திங்கட்கிழமை (11) மாலை வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், உறவினர்களால் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து...
காலி பிரதேச பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், ஆசிரியரை விக்கெட் பொல்லுகளால் தாக்கியுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப் பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியரான அவர், குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி தெரிவித்து விட்டு, வேறு பணிகளைச் செய்து கொண்டிருந்த வேளையே...
முல்லைத்தீவுப் பொலிஸாரின் அசண்டையீனத்தால் மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் போராளியின் சடலம் கடந்த நான்கு நாள்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. கடந்த 2ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...
முகப்புத்தகத்தால் ஏற்பட்ட காதலால் நபர் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர் இழந்த சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை (03) தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு இளைஞர் ஒருவர் முகப்பபுத்தகத்தில் நண்பராகியுள்ளார். தான் கனடாவில் இருப்பதாகக்கூறி அந்தப் பெண்ணுடன் கதைத்து பெண்ணைக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும்,தான்...
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளுக்கு இரும்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன. பஸ்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களிலிருந்து பஸ்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், இலங்கை போக்குவரத்துச்சபையின் வடபிராந்திய சேவைக்குச் சொந்தமான 57 பஸ்கள் மீது கல், போத்தல் மற்றும் இதர பொருட்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
பெண்ணின் அந்தரங்கப் படங்களை வைத்துக்கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு அப்பெண்ணை மிரட்டிய ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - வடமராட்சி - பருத்தித்துறையில் புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த பெண் தனது அந்தரங்கப் படங்களை தனது கைத்தொலைபேசியில் உள்ள 'வைபர்' மூலம் அதே பகுதியில் வசிக்கும்...
இந்நாட்டின் கலாசாரம், நாகரிக வளர்ச்சியைச் சீரழிக்கும் வகையில், வெளிநாட்டுப் பாடகர்களை வரவழைத்து அநாகரிகமான இசை நிகழ்ச்சிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். உள்ளாடைகளைக் களைந்தெறியும் நிகழ்ச்சிகளுக்கு, இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். நாடளாவிய ரீதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பொது அறிவு போட்டியில் வெற்றி...
நீண்ட விடுமுறை காலமாக கதிர்காமத்தில் என்றுமில்லாத அளவுக்கு யாத்திரிகர்கள் குவிந்துள்ளதையடுத்து அங்குள்ள வியாபாரிகள் தமது இஷ்டம்போல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளனர். சாதாரண அப்பம் 40 ரூபா (அரசாங்கம் நிர்ணயித்துள்ள உச்சபட்ச விலை 10 ரூபா) பிளேன்டீ 50 ரூபா, கருவாட்டுடன் கூடிய சாதாரண சாப்பாட்டுப் பார்சல் 250 ரூபா, ஓர் அங்குள உயரம்கொண்ட தயிருடனான...
இவை வித்தியாசமான சுவர்கள். தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் இவை. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையைச் செய்கிறது. இந்தச் சுவர்கள் தற்போது லண்டனில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தன்மீது படும் எந்த திரவத்தையும் திருப்பியடிக்கும் வகையான பிரத்யேக சுவர்ப்பூச்சு தான் இந்த சுவர்களின்...
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு வருகின்ற காதல் ஜோடிகள், ஆலய வளாகத்தில் உலாவித் திரிவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாக சபையால், இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது, ஆலயத்துக்கு வரும், காதல் ஜோடிகள் தரிசனம் செய்த பின்னர், திரும்பிச் செல்ல வேண்டும். அதனை விடுத்து ஆலய வளாகங்களில் அமர்ந்து பொழுதைப் போக்கக்கூடாது. புனிதமான இந்தப்...
Loading posts...
All posts loaded
No more posts
