பில்லி, சூனியம் செய்தவர் விளக்கமறியலில்

பில்லி, சூனியம் வைப்பதாகக் கூறி பொதுமக்களிடம் பெருமளவு பணத்தை பெற்று வந்தவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை புதன்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார். பில்லி, சூனியம் மீது நம்பிக்கையுடையவர்கள் குறித்த நபரிடம் சென்றால் அவர்களிடமிருந்து சிறிய தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு மருந்து ஒன்றை வழங்குவதாகவும் அந்த...

மதுபானம் வழங்க மறுத்த அரசியல் கைதியின் மோட்டார் சைக்கிள், பணம் பொலிஸாரால் பறிமுதல்!

மதுபானம் வழங்காதால் அரசியல் கைதி ஒருவர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டு அவரது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று சாவகச்சேரி வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி வடக்கு, டச்சு வீதியில் வசித்த சுப்பிரமணியம் நிதிகேசன் என்பவர் வவுனியா தடுப்பு முகாமில் இருந்து மகளின் மருத்துவத் தேவைக்காக விடுமுறையில் வீடு வந்துள்ளார். முன்னாள் போராளியான அவர், 2014ஆம்...
Ad Widget

யாழ். பல்கலை மாணவன் தற்கொலை! : பகிடிவதை காரணமா??

யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் தனது வீட்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பருத்தித்துறை, புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. யாழ்.பல்கலைக்கழகத்தின் பெளதிக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்ற 21 வயதுடைய தவராசா குபேரன் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான...

மாணவர்கள் குடைபிடித்துக் கொண்டு பரீட்சை எழுதும் நிலை!

யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் பிற்பகல் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரையும் தொடர்ந்தது. நேற்றுக் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குடாநாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள்...

மதுபோதையில் பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை!!

உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியை மேற்கொண்ட பின்னர் வீட்டுக்குச் சென்றவர்கள், வீட்டிலிருந்த பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை பார்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற இந்த சம்பவத்தால், இரண்டு பெண்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடற்பயிற்சி கூடத்தில் செய்து பார்த்த உடற்பயிற்சியை, மதுபோதையில் வீட்டுக்குச் சென்று அங்குள்ள பெண்கள் மீது அதனைச்செய்து பார்த்தமையாலேயே...

11 அத்தியாவசிய பொருட்களில் 4 பொருட்கள் மாயம்

2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில், 11 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் வர்த்தமானி அறிவிப்பில், ஏழு பொருட்களின் பெயர் விவரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன என்று, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வரவு- செலவுத்திட்ட அறிக்கையின் பிரகாரம், பருப்பு, சமையல் எரிவாயு, நெத்தலி, கடலை, உருளைக்கிழங்கு, கட்டாக்...

அதிகாரிகளின் உணவில் இரும்புக்கம்பி

பாவனை அதிகாரசபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்புக்கம்பிகள் இருந்தமை வெள்ளிக்கிழமை (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பாவணை அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் இடம்பெற்றமை பாவனை அதிகார சபை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. யாழ். நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்ட...

தாடி வளர்த்ததால் குற்றமா? : தவராசாவின் மகனை தடுத்து வைத்து தாக்கிய பொலிஸ்!

தாடியுடன் வீதியில் நடந்து சென்ற இரு இளைஞர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரு இளைஞர்களுமே கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்- நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில்...

ஹொட்டலில் ரகசியக் கமரா: மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையின் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் அறைகளை வாடகைக்கு விடும் விடுதியொன்றில் ரகசியக் கமரா மூலம் அறைகளில் நடைபெறுபவற்றை பதிவு செய்து வந்த நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். பிளக் பொயிண்ட் இன் ஒரு துவாரத்திற்குள் ரகசியக் கமரா வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலில் உள்ள அறைகளில் சூட்சுமமான முறையில் அந்தரங்க விடயங்கள் பதிவு செய்யப்பட்டு அவை வேறொரு...

தேங்கி நின்ற வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்த இளைஞர்கள்

யாழ்ப்பாணம் சுதுமலை ஜே-129 கிராம சேவகர் பிரிவில் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வழிந்தோட முடியாத நிலையிலிருந்த நீரோடும் வாய்க்கால் ”நமக்காக நாம்” அமைப்பினரின் முயற்சியால் நேற்றுப் புதன்கிழமை (18-11-2015) காலை சீரமைக்கப்பட்டது. நீரோடும் வாய்க்காலில் இடப்பட்ட குப்பைகள், கழிவுகள் காரணமாகவும் பற்றைகள் சூழ்ந்திருந்தமையாலும் நீரோட்டம் தடைப்பட்டிருந்த சேர்.கொத்தலாவல திட்ட வாய்க்கால்...

நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றிய நிஜ ஹிரோ!!

லெபனானின் , பெய்ரூட்டில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 44 பேர் உயிரிழந்ததுடன் , சுமார் 200 பேர் வரை காயமடைந்தனர். இக் குண்டு வெடிப்புகளின் போது நபரொருவர் தனது உயிரை பறிகொடுத்து , பல நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அடெல் டேர்மோஸ் என்ற அந்நபர் சம்பவத்தின் போது தனது மகளுடன் சந்தைக்கு சென்றுள்ளார். இதன்போது ஒரு...

தென்மாரட்சியில் வீட்டுக்குள் புகுந்த முதலை

வெள்ளத்துடன் வந்த முதலை ஒன்று வீட்டினுள் புகுந்தது குடும்பத்தவர்களை அலற வைத்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்மாரட்சி, இராமவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக தென்மாரட்சி, இராமவில் பிரதேசத்தில் வெள்ளத்துடன் வந்த முதலை ஒன்று வீட்டினுள் புகுந்து குடும்பத்தவர்களை அலறவைத்துள்ளது. குடும்பத்தவர்கள் அதனை விரட்டிய நிலையில், அருகிலிருந்த கேணிக்குள் பாய்ந்துள்ளது முதலை.

மகனை கேட்டால் ஏளனமாக சிரிக்கின்றார்கள்! – ஒரு தாயின் கண்ணீர் கதை

எனது மகன் காணாமல் போய்விட்டார் என்று எழுதப்பட்ட கடிதத்தை தருவதற்கு, கிராம அலுவலகர் பின்நிற்கின்றார். என்னை அவமானப்படுத்துகின்றார். என்னை எப்போதும் ஏளனமாகவே அவர் கதைக்கின்றார் என்று காணாமல் போனவரின் தாயார் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன், வியாழக்கிழமை (12) அமைதியான முறையில்...

கெஹலிய ரம்புக்வெலவுக்கு யாழ்.நீதிமன்றம் பிடியாணை

யாழ்.மாவட்டத்தில் வைத்துக் கடத்தப்பட்டு காணாமல்போன லலித், குகன் வழக்கில் முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜே.வி.பி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற நிலையில் யாழ்.மாவட்டத்தில் அரசியல் பணியாற்றிய லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டுக் காணாமல்போயினர். இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெவல...

இனி தேநீரில் சீனி கலப்பது தடை!

தேனீர்  வழங்கும் போது,தேநீருக்குள் சீனியை கலக்காது,பிறிதொரு பாத்திரத்தில் சீனியை வைத்து தேவையான அளவு கலந்து கொள்ளும் விதத்தில்,ஹோட்டல்கள்,தேநீர்ச்சாலைகள்,சிற்றுண்டிண்டிச்சாலைகளில்  வழங்குவது அவசியம், என சுகாதார அமைச்சின் விசேட சுற்று நிருபம் அறிவித்துள்ளது. நாளை(14) உலக சிறுநீரக நோயாளர் தினத்தை முன்னிட்டு ,இவ்விசேட விதிகள் நடைமுறைப்படுத்த  உள்ளதாக ,சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மகிபால அவர்கள் தெரிவித்துள்ளார்.சுகாதார...

கன்னத்தில் கடித்து இளைஞர்கள் ரகளை

கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு அண்மையில் வீதியில் நடந்து சென்றவரை வழிமறித்த இருவர், அவரிடம் தீப்பெட்டி கேட்டபின்னர், அவரை கத்தியால் கீறி, கன்னத்தில் கடித்த சம்பவம் தீபாவளி தினத்தன்று நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ஐயாத்துரை ராஜசேகரம் (43) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 17 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இருவரே இவ்வாறு செய்துள்ளனர். இந்த...

பாடசாலை மாணவிகளுக்கு பேரூந்து நடத்துனர் செய்த கொடூரம்!!

பாடசாலை மாணவிகள் ஏழு பேர் நடத்துனரால் பேரூந்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். யாழிலிருந்து -திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வவுனியா பஸ் தரிப்பிடத்தில் தரித்து நின்றபோது பஸ்ஸின் உள்ளே ஏறிய மாணவிகள் 7 பேரே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்....

பாடசாலை ஆசிரியைகள் தொப்புள் தெரிய சேலை அணியக்கூடாது! -மேல்மாகாண முதலமைச்சர்

பாடசாலை ஆசிரியைகள்  தொப்புள் தெரிய சேலை அணியக்கூடாது என்ற விதியை கொண்டுவரப்போவதாக    மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய விடுத்திருந்த அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவிகள் அணியும் நடன ஆடையைக் கூட தொப்புள் தெரிவது போல அணிய அனுமதிக்கப்போவதில்லை என்று  முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தாம் அணியும் ஆடைகள்...

இணுவில் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு

இணுவில் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் இறுதிக்கிரியைகளை, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நடத்தியுள்ளனர். புலோலியூரைச் சேர்ந்த மேற்படி முதியவர், கடந்த 20 வருடங்களாக இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை, அடியவர் என புனைப்பெயர் கொண்டு...

குடிபோதையில் ஆசிரியர்கள் அட்டகாசம்: 6 பேர் கைது

வவுனியா வடக்கு, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் குடிபோதையில் ஆசிரியர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆறு ஆசிரியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி மகாவித்தியாலய விடுதியில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 6 பேர் குடிபோதையில் அப்பாடசாலையின் அதிபரின் அறையை உடைத்துள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் உள்ள வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர். இந்நிலையில் காலையில்...
Loading posts...

All posts loaded

No more posts