- Saturday
- August 1st, 2026
ஸ்ரீலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடமாகின்ற போதிலும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் இருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தெரிவித்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் நாளை வியாழக்கிழமை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கவலையளிக்கும்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கு அமைய விசேட அதிரடிப் படையினருக்கு நாவற்குழியில் 5 ஏக்கர் காணி தேசிய வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்டுள்ளது. நாவற்குழி 300 வீட்டுத்திட்டக் குடியிருப்புக்கு அருகில், கட லேரியை அண்டிய பகுதியில் விசேட அதிரடிப் படையினருக்கான முகாம் அமைக்கும் பணிகள் சில நாள்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக தேசிய...
"வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவற்றை மிகவும் கவனமாக அவதானித்து வருகின்றேன்."- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். "மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் கொள்கைகளுடன் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னை இணைத்து வருகின்றார்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள...
வடக்கு மக்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொடுத்து அவர்களை மீள்குடியேற்றவும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்களைப்போல உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டில் சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்தும் சமூக முறைமையை ஏற்படுத்துவதுடன், மூன்று ஆண்டுகளுக்குள் சிறந்த பொருளாதார சமூகத்தை உருவாக்கும் செயற்றிட்டத்தை முன்வைத்து, வரலாற்றில் இதுவரை இடம்பெறாத அபிவிருத்தியை இலங்கையில் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த...
நிலையான, ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய, நியாயமான, செயற்படுத்தப்படக்கூடிய ஓர் அரசியல் தீர்வை எட்டுவதன் அவசியத்தை முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளயருடனான சந்திப்பின் போது வலியுறுத்தினார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன். இலங்கை வந்துள்ள முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளயர் நேற்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை...
இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பொதுமக்களின் காணிகளை மீளக்கையளிப்பது குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தலைமையில் பலாலி இராணுவத் தலைமையகத்தில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்களும், முப்படைத் தளபதிகளும் பங்கேற்கவுள்ளனர். தேசிய பொங்கல் விழா எதிர்வரும் 15 ஆம்...
நாட்டில் இடம்பெற்ற போர் பாதிப்புக்களில் சிக்குண்டு முகாம்களில் வாழ்கின்ற 10 ஆயிரம் பேருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வீடுகளை கட்டுவதற்கான நிலங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு - கிழக்கில் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பெருமளவு நிலங்களை மக்களிடம் மீள ஒப்படைப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார். தென்பகுதி ஊடகம் ஒன்றுக்கு ஜனாதிபதி நேற்று வழங்கிய பேட்டியிலேயே...
2016 ம் ஆண்டில் எல் நினோ (கடும் வெப்பம்) சுழற்சியால், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பசியாலும், கடுமையான நோயாலும் பாதிக்கப்படுவார்கள் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. புவியின் சுழற்சி காரணமாக எல் நினோ (கடும் வெப்பம்), லா நினா...
யாழ். குடாநாடு கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் உள்ளதெனவும், யாழ்ப்பாண வாசிகள் அனைவரும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் கடல்நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம் நேரிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞானிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை தொடர்பில் தெளிவுபடுத்திய வட மாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், யாழ்ப்பாண மக்கள், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்வார்களாயின் மேற்கண்ட...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணவும் நல்லாட்சி அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் மலரும் இந்தப் புத்தாண்டை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நிலையான சமாதானத்தையும் புரிந்துணர்வையும் நிலைநாட்ட இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் முன்வரவேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மலரும் இந்தப் புதிய...
வலி.வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233 ஏக்கர் நிலமுமே இவ்வாறு மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. 25 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த மண்ணை இடம்பெயர்ந்திருந்த மக்கள் நேரில் சென்று ஆவலுடன் பார்வையிட்டனர்....
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும், வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களில்...
அளவெட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றிரவு துப்பாக்கி சகிதம் உள்நுழைந்த ஆயுதக்குழு பெரும் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது. அளவெட்டி ஜெயா பிறஸ் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு ஞாயிறு இரவு 7.30 மணியளவில் துப்பாக்கி , வாள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளுடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் ஐன்னல்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி ஆகியோர் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பது தொடர்பாக இறுதிப் போரில் இருந்து தப்பி வெளிநாட்டில் அடைக்கலமாகியுள்ள அந்த இயக்கத்தின் மூத்த தளபதி தயாமோகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டம் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கே...
வெசாக் மற்றும் சிங்கள வருடப் பிறப்பை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படுவது போன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில்...
வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார் என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பங்குபற்றலுடன் கடந்த சனியன்று 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பு அங்குரார்ப்பணம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். இது குழப்பத்துக்கே வழிவகுக்கும். எனினும், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். 'தமிழ் மக்கள் பேரவை' அமைப்பின் உருவாக்கத்துக்கு...
தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். பலவிதமான மக்கள் குழுக்களும், ஒன்றியங்களும், கட்சிகளும் சேர்ந்து நல்லை ஆதீனம் போன்ற மதாச்சாரியார்கள் உள்ளடங்கலாகத் தொடங்கியுள்ள ஒரு மக்கள் இயக்கம் அது என முதலமைச்சர் இன்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் இதற்கு தலைமை வகிக்க ஏற்பாட்டாளர்கள் குழு என்னை அழைத்தார்கள். உண்மையில் இணைத்தலைவராகத் தான் என்னை...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வன் தலைமையில் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான செய்திகள் வெள்ளிக்கிழைமை இரவு தெரியவந்திருந்தது எனினும் கூட்டவிபரங்கள் இரகசியமாகவே பேணப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெற்ற இரகசிய கூட்டத்திலேய இந்தக்...
Loading posts...
All posts loaded
No more posts
