சர்வதேச அவசர நிலை பிரகடனம்

உலகில் பல நாடுகளில் வெகு வேகமாக பரவி பரவும் ஸிகா வைரஸ் காரணமாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் பேர் ஆளாகியிருப்பதாக மதிப்பிடபட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO), ஸிகா வைரஸ் குறித்தும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

தமிழீழத்தை கைவிடவுள்ளோம் – சிறிதரன்

தமீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து...
Ad Widget

தவறை உணர்ந்த மஹிந்த

தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே, தனது மகன் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கண்டியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'பணச் சலவை சட்டத்தின் கீழேயே யோஷிதவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது....

விளக்கமறியலில் உள்ள தனது மகனைக் காணச் சென்ற மஹிந்த

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்க்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்றார். நேற்று பகல் அவர் அங்கு சென்றதாகவும் இவருடன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரும் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வலி வடக்கு மீள்குடியேற்றம் : இராணுவத்தையும் உள்ளடக்கிய குழு தகவல் சேகரிப்பில்

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள மக்களின் காணிகள் நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அவர்களின் காணிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்க தனியான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார். இந்தக் குழு ஒரு வாரத்துக்குள் தரவுகளை சேகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்படும் இதன் பின்னர் அவரது பணிப்புக்கு அமைய...

இரண்டு அறிக்கைகளும் தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதுடன் பழைய காயங்களை மீண்டும் கிளறியுள்ளன- சனல் 4 (காணொளி இணைப்பு)

இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன என சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்திருந்தார். யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இரண்டாவது காணமற்போனவர்கள்...

40ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்பது வெறும் மாயை – மக்ஷ்வல் பரணகம

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் வெறும் மாயையாகும் என்று காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் எப்போது நடைபெறும்...

மீள்குடியேற்றத்தினை அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது – வலி. வடக்கு மக்கள்

புதிய தரவுகள் சேகரிப்பு என்பது தமது மீள்குடியேற்றத்தை இழுத்தடிப்பு செய்வதற்கான நடவடிக்கை என வலி.வடக்கு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வலி.வடக்கின் மீள்குடியேற்றம் புதிய தரவுகள் சேகரிக்கும் ஆரம்ப கட்டத்துடன் நிற்பது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தினை தந்துள்ளதாக அந்தமக்கள் தெரிவிக்கின்றனர். வலி. வடக்கில் மக்களை மீளக்குடியேற்றும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட...

சுன்னாகம் நீர் பிரச்சினை : அனைத்து கட்சிகளிடம் ஹக்கீம் கோரிக்கை

சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பில் வெகுவிரைவில் தீர்வினை முன்வைப்பதற்கு நீர் வழங்கல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் இதற்கான ஒத்துழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார். கடந்தக்காலங்களில் இந்த பிரச்சினையினை ஒரு சிலர் அரசியல் சுயநலனின் அடிபடையில் கையாண்டமையே அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள்...

பெப்ரவரி 4ஆம் திகதி விடுவிக்காவிடின் போராட்டம் தொடரும்! – தமிழ் அரசியல் கைதிகள் அறிவிப்பு

"எதிர்வரும் பெப்ரவர் மாதம் 4ஆம் திகதி - இலங்கையின் சுதந்திர தினத்தன்று எம்மை விடுவிக்காவிடின் சிறைச்சாலைகளில் எமது விடுதலைக்கான போராட்டம் தொடரும்." - இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழ் அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு...

வடமாகாணத்தின் கல்வி நிலை மகிழ்ச்சியளிக்கிறது – ஜனாதிபதி

2015ஆம் ஆண்டு க.பொத உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 9 மாகாணங்களில் வட மாகாணம் முதலிடம் பெற்றுள்ளது. 25 மாவட்டங்களில் யாழ் மாவட்டமே முதலிடம் பெற்றுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (27) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் நடைபெற்ற சமுர்தி 'சிப்தொர' புலமை பரிசில் வழங்கல் நிகழ்வில்...

யாழில் ஏற்பட்ட திடீர் நில வெடிப்பு தொடர்பில் ஆய்வு! மக்கள் வெளியேற்றம்!!

யாழ். புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலத்தில் உண்டான திடீர் விரிசல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பினர் நேற்றய தினம் அப்பகுதியில் இவ் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கடமைப்பட்டுள்ளோம் – பிரதமர்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்துலதற்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது ஊடகவியலாளர் ரணில் விக்ரமசிங்கவிடம், அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

சம்பூர் சிறுவன் மரணம் : வெளியாகும் அதிர்ச்சி தகவல்!!

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் விதுர கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து வயிற்றில் பெரியகல் ஒன்று கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் இறந்த நிலையில் நேற்று அதிகாலை 12.10 மணியளவில் சடலமாக மீட்க்கப்பட்டு இருந்தார். கொடூர பாலியல் வன்புணர்வின் பின்னரே குறித்த சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. முன்னதாக சிறுவனை தேடிச் சென்ற...

யாழ்.பல்கலைக்கழகத்தில் பௌத்த கோயில் வேண்டும்- பௌத்த மாணவர்கள் ஒன்றியம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னால் ஒரு பௌத்த கோயில் வேண்டும் என கோரி துண்டுப்பிரசுரங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன. இது யாழ்.பல்கலைக்கழக பௌத்த மாணவர்கள் ஒன்றியத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என்றால் அரசியல்கைதிகளும் தண்டிக்கப்படவேண்டும் – சந்திரிகா

ஒற்றையாட்சியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல மாறாக தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக . தமது தீர்வு அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார். கடும்போக்காளர்கள் இன்னமும் இந்த நாட்டில்...

உயி­ருடன் இருக்­கின்­ற­னரா? இல்­லையா? 12 மாதங்­களில் தீர்­வு!!

காணா­மல்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் செயற்­பாட்­டுக்­கா­லத்தை இன்னும் 12 மாதங்­க­ளினால் அர­சாங்கம் நீடித்தால் 20 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட காணா­மல்­போனோர் தொடர்­பான முறைப்­பா­டு­க­ளுக்கு நாங்கள் நிச்­சயம் தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுப்போம். அதற்­கேற்­ற­வ­கையில் தேவை­யான திட்­டங்கள் எம்­மிடம் உள்­ளன என்று ஆணைக்­கு­ழுவின் தலை­வரும் ஓய்வு பெற்ற நீதி­ப­தி­யு­மான மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­வித்தார். நாங்கள் திரு­கோ­ண­ம­லையில் காணா­மல்­போனோர் குறித்து விசா­ரிக்கும்...

அச்சுவேலி பகுதியில் நிலவெடிப்பு அதிகரிப்பு

அச்சுவேலி நவக்கிரிப் பகுதியில், கடந்த 23ஆம் திகதி அதிகாலை, நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு, 1.5 சதமமீற்றர் அகலத்துக்கு விகாரமடைந்துள்ளது. மேலும், புதிதாக சில இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வெடிப்பு ஏற்பட்ட பகுதி சற்றுக் கீழிறங்கியுள்ளது. இந்த வெடிப்பு சுண்ணாம்புப் பாறைகளின் விரிசல்கள் காரணமாக ஏற்பட்டது என்றும், நிலநடுக்கத்தால் ஏற்படவில்லையெனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் யாழ் பல்கலைக்கழக...

கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கும்படி சட்டத் திருத்தம் அவசியம்!

இந்தியாவின் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளது போன்று, கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுட்காலச் சிறைத் தண்டனை வழங்கும் வகையில் இலங்கையின் தண்டனைச் சட்ட நடவடிக்கைக் கோவையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த முருகேசு சத்தியநாதன் என்பவரை உலக்கையால்...

படையினர் வசமுள்ள எல்லாக் காணிகளும் விடுவிக்கப்படாது! – பாதுகாப்புச் செயலாளர்

தேசிய பாதுகாப்பு நலனுக்கு தேவைப்படும் காணிகள் எவையும் வடக்கில் விடுவிக்கப்படாது. அதற்குப் பதிலாக உரிமையாளர்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் குழு ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...
Loading posts...

All posts loaded

No more posts