- Saturday
- August 1st, 2026
நேற்று பிற்பகல் அளவில் நாடுபூராகவும் தடைப்பட்ட மின் வழங்கள் நடவடிக்கைகள் தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேவேளை, பியகம பகுதியிலுள்ள பிரதான ட்ரான்ஸ்போமரில் ஏற்பட்ட சேதமமே இவ்வாறு திடீர் மின் தடை ஏற்படக் காரணம் என தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எந்தவித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படாது முழுக்க முழுக்க சந்தேகத்தின் அடிப்படையில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தனை இளைஞர்களையும் விடுவிக்கும் முயற்சிகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தாமதமின்றி கைவிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு...
வலி. வடக்கு மக்கள் தமக்கு சொந்தமான நிலத்தையே கேட்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்பை நிச்சயமாக நிறைவேற்றுவோம். 6 மாதங்களுக்குள் சொந்த நிலங்களில் குடியமர்த்துவேன் என நான் உறுதியளித்தேன். 3 மாதங்களில் ஒரு தொகுதி நிலத்தை விடுவித்துள்ளேன். மீதமிருக்கும் 3 மாதங்களில் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். இவ்வாறு உறுதியளித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று சனிக்கிழமை...
வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் ஜனாதிபதி முன்னிலையில் மேடையில் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அதிகாரத் தொனியிலான வார்த்தைகளால் இருவரையும் அடக்கினார். இந்த சுவாரஸ்யமான சம்பவம் நேற்று சனிக்கிழமை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயக் காணி விடுவிப்பு நிகழ்வின் மேடையில் இடம்பெற்றது. காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியை மக்களிடம்...
இன்று முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூபா 7.20 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டில் மீண்டுமொரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக முக்கியமான தகவல்களை அக்குவேறு ஆணி வேறாக தோலுரித்துக்காட்டி...
யாழ். காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் என்பன இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுவிக்கப்படவுள்ளன என்று யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மூன்று மணி நேரப் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் வரவுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் கோப்பாய்...
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவபீட தமிழ் மாணவர்கள் 9 பேர் நேற்றிரவு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் கடும் காயங்களுடன் நிலாவெளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 50 இற்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மைத் தாக்கினர் என்று தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர். திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், கல்முனையைச் சேர்ந்த ஒரு மாணவனும்,...
எனக்கும் அப்பாவை கட்டிப்பிடிச்சுக் கொண்டு பைக்கில இருந்து பள்ளிக் கூடம் போக ஆசையாக இருக்குது மாமா ஆனா…. அப்படி நடக்குமா? என தனது பெரும் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள் அருள்பிரகாஸ் றஜிதா தரம் நான்கில் கல்வி கற்கும் ஒன்பது வயது மாணவி. கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்துவரும் றஜிதாவின் அப்பா அருள்பிரகாஸ் வயது 44 கடந்த எட்டு வருடங்களாக...
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் இன்று வெள்ளிக்கிழமை பகல் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர். இந்த தகவலை தமிழ் அரசியல் கைதி உறுதிப்படுத்தினார். மிகவிரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் சார்பாக நீதின்றத்தில் இன்று முன்னிலையான...
உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் 13 தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் சிறைச்சாலையினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் இதன்போது, குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என்பதால் அவர்களுக்கு எதிராக...
கடந்த காலங்களில், அனைத்துத் தரப்பினரும் எம்மை ஏமாற்றிவிட்டனர். அதனால், இனியும் எவரிடத்திலும் நாம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், எமது இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை' என்று கொழும்பு மெகசின் சிறைச்சாலையில், உண்ணாநிலைப் போராட்டமொன்றை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு போராட்டம் நடத்திவரும் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக,...
தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிவரை அந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக...
ஆசைப்பேச்சுக்களுக்கு மயங்கியோ அல்லது பயமுறுத்தல்களுக்குப் பயந்தோ தமது பூர்வீக காணிகளை இராணுவ தேவைகளுக்கு விற்க வேண்டாம் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போர் முடிவுற்று பல ஆண்டுகளான பின்பும் நாட்டில் சமாதானம்...
இறுதிக்கட்டப் போர் முழுமையாக முடிவடைவதற்கு முன்னரே போர் முடிவடைந்துவிட்டது என்ற அறிவிப்பை மஹிந்த ராஜபக்ஷ விடுத்தார் என்றும், 2009 மே 19ஆம் திகதிகூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை என்றும் இறுதிக்கட்டப் போருக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார். அத்துடன், இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது...
ஆனையிறவு இராணுவ முகாம் மீது ஓயாத அலைகள் 3 அணிகளில் இணைந்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் சந்தேகநபரான விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ஒருவரை, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22, 23ம் திகதிகளில் ஆனையிறவு...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக்கூறும் அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும் அவரது சடலத்துக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எந்தத் தகவலையும் இதுவரையும் வெளியிடவில்லை' என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது....
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், அவர்களது உண்ணாவிரதப் பேராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் கிளிநொச்சியில் சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 8.10 அளவில் ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ன. இதற்கமைய கிளிநொச்சி திரேசம்மா தேவாலயத்தில் இந்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி, நகர் பிள்ளையார் கோவில்...
கீரிமலை பகுதியில் காணி சுவீகரிப்பிற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட நிலையில் யாழ். திருவடிநிலை பகுதியில் காணி அளவீடுகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் – திருவடிநிலை பகுதியில் இந்த நடவடிக்கை...
இலங்கையில் நடந்த போரின் போது, புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் பொதுமக்களுக்கு உரியதை, அவர்களிடமே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போரின்போது, போர் வலயப் பகுதிகளிலிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட நகைகள் குறித்து, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு...
Loading posts...
All posts loaded
No more posts
