Ad Widget

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் இன்றும் தொடர்கிறது : சிலரது உடல்நிலை மோசம்!!

பொதுமன்னிப்பு அளித்து தங்களை விடுதலை செய்யுமாறு கோரி மூன்றாவது முறையாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் போராட்டத்தை தொடச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு – மெகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 14 பேர் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 22ஆம் திகதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களில் சிலரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமையுடன் மூன்று நாட்கள் ஆகின்ற போதிலும் தங்களது விடுதலைக்காக குரல் கொடுப்போம் என்று கூறிவரும் அரசியல்வாதிகள் எவரும் இதுவரை சிறைச்சாலைக்கு வரவில்லை என்று தமிழ் அரசியல் கைதிகளி அங்கலாய்க்கின்றனர்.

எவ்வாறாயினும் தங்களது போராட்டம் விடுதலை என்ற செய்தி வரும்வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்ற அறைகூவலையும் அவர்கள் விடுத்துள்ளனர்.

இதேவேளை அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கடந்த 2015ஆம் ஆண்டு இரண்டு முறை தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அவர்களை சந்தித்து வழங்கிய வாக்குறுதியின் பின் போராட்டம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts