- Saturday
- December 20th, 2025
யாழ். பல்கலையில் பகிடிவதைக்குட்பட்டு கல்வியை இழந்துள்ள மாணவன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அம் மாணவனை மீண்டும் கல்வி நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம் ஆகியவற்றிடம் வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் கிளிநொச்சியை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவனான மங்களதேவன் ஜெயக்குமார் என்பவர் பகிடிவதை...
உடுவில் மகளிர் கல்லூரி திருச் சபையின் கீழுள்ள பாடசாலை, அந்தப் பாடசாலையில் இடம்பெற்ற அதிபர் நியமனம் தொடர்பான விடயத்தை, வடமாகாண சபையில் விவாதிக்க முடியாது. அத்தகைய அதிகாரம் வடமாகாண சபைக்கு இல்லையென சில உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். கேசவன் சயந்தன், ஆயூப் அஸ்மின், சந்திரலிங்கம் சுகிர்தன், இமானுவல் ஆர்னோல்ட், அரியகுட்டி பரஞ்சோதி மற்றும் கந்தையா சர்வவேஸ்வரன்...
யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தமது அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்க வலியுறுத்தித் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டம் கடந்த-07 ஆம் திகதி திட்டமிட்டுக் குழப்பப்பட்டதுடன், இதன் போது மாணவிகள் மீது கல்லூரியை முகாமைத்துவம் செய்துவரும் தென்னிந்தியத் திருச்சபையின் தலைவர் டீ. எஸ். தியாகராஜாவிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் சில ஆசிரியர்கள்...
2015/2016 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள முடியும். 2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் மேலதிகமாக 10% ஆன மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உடுவில் மகளிர் கல்லூரியில் அண்மையில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகவும், அக் கல்லூரியில் பல ஒழுக்க சீர்கேடுகள் நடைபெற்று வருவதாக பெற்றோரினால் கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா நாளை 22.09.2016 நடைபெறவுள்ள சபை அமர்வின் போது ஓர் அவசர பிரேரணையைக் கொண்டுவரவுள்ளார். அப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது,...
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் கணக்கில் கொள்ளப்படாமல், மாணவர்கள் உயர்தர வகுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆசிரிய பயிற்சி கற்கை நெறிக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆசிரிய பயிற்சி கற்கை நெறிக்கான பயிற்சி மஹரகம, கண்டி, வெயாங்கொட, களுத்துறை, வவுனியா ஆகிய இடங்களிலுள்ள கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெறுகின்றன. பாடசாலைக் கல்வியை தரமான வகையில் மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சர்...
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியுள்ள நிலையில், 27,603 மாணவர்கள், இவ்வருடம், பல்கலைக்கழகத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி www.ugc.ac.lk அல்லது www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்தினூடாக மாணவர்கள் தமது வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ugc என...
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
போதையால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வடமாகாணத்தை மீட்டெடுத்து எம் உறவுகளை பாதுகாக்க அனைவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம திகதி ஒரு மணிநேர கவனயீர்ப்பில் ஈடுபடுவோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது. யாழப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எழுந்து நிற்போம்...
பிரபல பாடசாலைகளில் வைத்தியர்களின் பிள்ளைகளை உள்வாங்கும் சலுகை வழங்கப்பட்டிருப்பது போல, கல்வி துறைகளில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. கல்வித் துறைக்குள் பணியாற்றும் ஊழியர்களுக்கான சலுகைகளை கழித்து, வைத்தியர்களுக்கு மட்டும் அச் சலுகையை பெற்றுக் கொடுப்பது கவலையளிப்பதாக,...
உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபரின் நியமன விவகாரத்தில் அதிகளவு அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமது தரப்பில் இருந்து எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்கவில்லை என்பதை உண்மையான விடயம் எனவும் யாழ்ப்பாணத்திலுள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை...
உடுவில் மகளீர் கல்லுாரி தொடர்பாக பெற்றோர் சங்கம் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையின் முழு வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது. உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பாகவும், அதன் போது நடைபெற்றுள்ள நேர்மையற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் என்ற வகையிலும், பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு என்ற வகையிலும், கல்லூரிச் சமூகத்தின்...
அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராக போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் என்ன செய்தார்கள்? என யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச் சென்ற இடங்களைப் பார்க்கின்றபோது எனக்கு வெட்கமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா நேற்றைய...
கல்வியியல் கல்லுரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். இம்முறை பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உயர்தரத்தில் இரண்டு பாடங்களில் சித்தியடைந்த மாணவர்கள் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி பிரிவின்...
உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது. இந்நியமனத்தில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் எஸ்.தியாகராஜா தெரிவித்தார். உடுவில் மகளிர் கல்லூரி புதிய அதிபர் நியமனம் தொடர்பில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில்...
யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் பகிடி வதைக் கொடுமையினால் தனது பல்கலைக் கழக கல்வியினை இடை நிறுத்தி தினக் கூலிவேலைக்காக மாணவன் செல்லும் அவலம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பகுதியினைச் சேர்ந்த மாணவன் இந்த ஆண்டு முதலாம் ஆண்டில் ஆண்டில் இணைந்து கொண்டார் . இணைந்த நாட்கள் முதல் ஒரே பகிடிவதைக் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணத்தினால்...
'கடந்த 2009 ஆம் சிரானி மில்ஸை நீக்கும் போது, அவர் பக்கம் நியாயம் இருந்தமையால் அவர் சார்பாக போராட்டம் செய்தேன். ஆனால், தற்போது அவருக்கு 60 வயதாகின்றமையால்> அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற நியாயத்தின் அடிப்படையில் அவருக்கு எதிராக செயற்படுகின்றேன்' என உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் டேனியல் வசந்தன் (சாம்) தெரிவித்தார். கச்சேரி -...
“தென்னிந்திய திருச்சபைக்கு எதிரான வேறு சில கிறிஸ்தவ அமைப்புகள், சுமந்திரனின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழ் அரசியல்வாதிகள், உடுவில் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள், கல்லூரிக்கு எதிரானவர்கள், தமிழ் மக்களிடையே குழப்பங்கள் இருக்கின்றன என்று வெளிக்காட்ட நினைக்கும் பெரும்பான்மைமொழி ஊடகங்கள், தமிழர் அரசியலில் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆகியோரே, உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினைக்கு காரணம்” என வடமாகாண...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 பேருக்கு அடுத்த மாதம் 4ம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. 1046 தமிழ்மொழி ஆசிரியர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பான வைபவம் அலரிமாளிகையில் அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு இடம் பெறவிருப்பதாக கல்வி அமைச்சின் கல்வி சேவைகள் உள்ளக...
Loading posts...
All posts loaded
No more posts
