Ad Widget

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள, தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான முதல் பாடசாலை தவணைக்கான முதற்கட்டப் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது. அத்துடன் இம்மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம்...

கார்த்திகைப் பூ இல்லை காந்தள் பூ : ஆசிரியர்களுக்கு “சப்றைஸ்” கொடுக்கவே செய்தோம் – பொலிஸாருக்கு மாணவர்கள் விளக்கம்

தெல்லிப்பழையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகைப் பூ மற்றும் இராணுவ வாகனத்தை ஒத்த அலங்காரங்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்தனர். விசாரணைக்காக மூன்று மாணவர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் விசாரணையில்...
Ad Widget

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல் !

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025″இற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமான http://www.facebook.com/president.fund மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான...

பாடசாலை புத்தகப் பையின் சுமையை குறைக்க நடவடிக்கை!

பாடசாலை புத்தகப் பையின் சுமையை குறைப்பதற்கு கல்வி அமைச்சால் புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பயிற்சிப் புத்தகங்களைத் தவிர, பாடசாலைக்கு கொண்டு வரப்படும் பாடப்புத்தகங்களை குறைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை புத்தகப் பையின் எடை காரணமாக, முதுகுத்...

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது. அதன்படி இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (01) அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு மாணவர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. இதன்படி, எந்தவொரு பாடசாலையிலும் பயிலும் மாணவர்கள் அதிக வெப்பநிலையின் போது வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் அல்லது...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அத்துடன் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மாணவர்களுக்கான இந்திய புலமைப்பரிசில் திட்டம்!

பல்வேறு நிலைகளில் உள்ள இலங்கையர்களுக்காக சுமார் 200 முழு நிதியுதவி புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்களை இந்தியா கோரியுள்ளது. மருத்துவம்,துணை மருத்துவத்துறை மற்றும் சட்டப் படிப்புகளை தவிர்ந்த, ஏனைய துறைகளுக்காக இந்த புலமைப்பரிசில்கள், இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஊடாக வழங்கப்படுகின்றன. இலங்கையர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில்கள் 2024-2025 கல்வி அமர்வுக்கானது என கொழும்பு இந்திய...

பாடசாலை விடுமுறையில் மாற்றம்!

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர விவசாய விஞ்ஞானப் பாட பரீட்சையின் 2 ஆம் பகுதி இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதலாம் பகுதி வினாத்தாளும் இரத்து...

A/L பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய விவசாய விஞ்ஞானம் பகுதி 1 மற்றும் 2, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் முன்னதாக வௌிப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடந்த 12ம் திகதி அந்த பாடத்தின் இரண்டாம்...

உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம்!

உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், "இந்த முறை ஒரு புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. அது கொரிய மொழி. அந்த பாடத்தை சேர்க்க, அட்டவணையில் சிறிய மாற்றங்களைச்...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது. இதன்படி மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் மாசி மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு பொருந்தும் என...

கிளிநொச்சியில் பாடசாலையின் பெயர் திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது: சுகாஷ்

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...

O/L பரீட்சையில் சித்தியடைந்த, சித்தியடையாத மாணவர்களுக்கான செய்தி!

கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர முகாமைத்துவம் தொடர்பான பணிப்பாளர் சமன் ரூபசிங்க தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 525 பாடசாலைகளில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், தொழிற்பயிற்சி நிலையத்தினால் வர்த்தமானி...

ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவனுக்கு சத்திர சிகிச்சை!

யாழில் ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான 4 ஆம் தர மாணவனின் நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் அப்பியாச கொப்பியில் ஒழுங்காக எழுதவில்லை என ஆசிரியை, மாணவனின் கையில் அடித்துள்ள நிலையிலேயே மாணவனின் விரல்...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!!

கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள்வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகளை இலங்கை பரீட்­சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த பரீட்­சை பெறு­பே­றுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்...

உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!!

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு இலக்கம் SC/FR/240/2023 தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வழக்கு இலக்கம் SC/FR/254/2023 மனுதாரர்களினால் மீள பெறப்பட்டது. அதன்படி, இலங்கைப் பரீட்சை திணைக்களம் இந்த...

இம்முறை புலமைப்பரிசில் பெறுபேறு வௌியீட்டில் மாற்றம்!

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (16) இரவு வௌியாகி இருந்தன. www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், அவர்களில் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளில் சித்தியடைந்துள்ளனர். அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்...

வடக்கில் ஊழியர் சேமலாப நிதியம் பெறும் பெற்றோர்களின் கவனத்திற்கு!

வடமாகாணத்தில் ஊழியர் சேமலாப நிதியம் பெறும் பெறுவோரது பிள்ளைகள் கடந்த 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி உயர்கல்வியை தொடரமுடியாது இருப்பின் அவர்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் கற்கை நெறியை தொடர ரூபாய் 25,000 வழங்கப்படும் என” வடமாகாண பிரதம செயலர் சமன்பந்துலசேன தெரிவித்துள்ளார். இன்று காலை சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில்,...

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இவ்வாறு வெளியிடப்பட உள்ளது. குறித்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறு பட்டியலிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து புலமை...

தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலாக பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts