யாழ். பெரியபுலம் வித்தியாலத்துக்கு புதிய அதிபர் நியமனம்

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக நடராஜா பரமேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார். முன்னர் யாழ். மானிப்பாய் இந்துக்கல்லூரி யாழ். இந்துக் கல்லூரிகளின் உப அதிபராக .செயற்பட்ருந்தார். புதிய அதிபருக்கு மாணவர்கள், பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.

உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியரது வீட்டின்மீது கல்வீச்சு

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் மாற்றம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவரது வீட்டின்மீது விசமிகளால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியில் அமைந்துள்ள ஆசிரியர் சாம் என்பவரது வீட்டின் மீதே, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு...
Ad Widget

சுன்னாகம் பொலிஸாரின் அசமந்தம் ; மனித உரிமை ஆணைக்குழு விளக்கம் கோரல்

யாழ்ப்பாணம் உடுவில் மகளீர் கல்லூரியில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது சுன்னாகம் பொலிசாரின் அசமந்தப் போக்கு மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தினால் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி முதல் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்களால்...

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீதான தாக்குதலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை நன்கு அவதானித்து வந்துள்ளோம். இப்பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்ட போது அப்பாடசாலையின் மாணவிகள் சிலரால் ஜனநாயக ரீதியாகவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது முன்னெடுக்கப்பட்ட நோக்கம் சரியாகவோ அல்லது தவறாக இருந்தாலும் கூட அம்மாணவிகள் மேற்கொண்ட ஜனநாயக ரீதியான செயற்பாட்டை மாணவிகள்...

வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்

வடக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றிய போலி ஆசிரியர்கள் 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து ஆசிரியர்களாக இணைந்துகொண்டுள்ளமை கண்டறியப்பட்டதாலேயே அவர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். மேற்படி ஆசிரியர்களின் சேவையை நிரந்தரமாக்குவதற்காக ஆவணங்களை பரிசீலணை செய்தபோதே இவர்களின் ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை...

சுன்னாக பொலிசாருக்கு எதிராக , சுன்னாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

சுன்னாக பொலிசாருக்கு எதிராக சுன்னாக பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலளர்கள் இருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அது தொடர்பில் தெரியவருவதாவது , உடுவில் மகளீர் கல்லூரியில் அதிபர் மாற்றத்திற்கு எதிராக கடந்த 3ம் திகதி தொடக்கம் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றய தினம் பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீள ஆராம்பமானது. அதன் போது...

உடுவில் மகளிர் கல்லூரிப் பிரச்சினை முடிவுக்கு வந்தது

உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த 3 ஆம் திகதி முதல் மாணவிகள் மற்றும் நிர்வாகத்துக்கும் இடையில் நிலவிய முரண்பாடு, இன்று (08) முடிவுக்கு வந்ததுள்ளது. 'நான் விட்டுக்கொடுக்கிறேன், எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக எனது அனைத்துக் கடமைகளையும் ஒப்படைப்படை க்கிறேன்' என முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் அறிவித்ததையடுத்து, பிரச்சினை முடிவுக்கு வந்தது. திங்கட்கிழமை (12) விடுமுறை...

உடுவில் மகளிர் கல்லூரி அரச பாடசாலையாக சுவீகரிக்கப்படும்

நிர்வாகம் சுமூகமான தீர்வினை எடுக்காவிடின் உடுவில் மகளிர் கல்லூரியை அரச பாடசாலையாக சுவீகரிப்பதற்கு வடமாகாண சபை அரசாங்கத்திடம் கோரும் நிலை ஏற்படுமென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்கள் கடந்த 4 நாட்களாக முன்னாள் அதிபரை மாற்றுவதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமாகாண...

உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட உடுவில் மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்அனுமதி!

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், நேற்று செவ்வாய்க்கிழமை (06) முதல், உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உணவு தவிர்ப்பில்...

உடுவில் மாணவிகள் உண்ணாவிரதம்

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், இன்று செவ்வாய்க்கிழமை (06) முதல், உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 'அதிபரை பாடசாலையில்...

பொலிஸாரை விட பாடசாலைகளே இலஞ்சம் வாங்குவதில் முன்னிலையில்!

நாட்டில் இலஞ்சம் வாங்குவதில் பொலிஸாரை விட கல்வித்துறை முன்னிலை வகிப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. கடந்த காலங்களில் பொலிஸ்துறை மீதே இலஞ்சம் தொடர்பில் அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதும் அது தற்போது குறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு அதிகம் இடம்பெறும் நிறுவனங்களில்இதனை ஒழிப்பதற்கு இலஞ்ச...

உலகில் தடைசெய்யப்பட்ட உடற்பயிற்சி முறைகள் இலங்கைப் பாடசாலைகளில்!

உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ள உடற்பயிற்சி முறைகள் இலங்கைப் பாடசாலைகளில் பயன்படுத்தப்படுவதாக விளையாட்டு விஞ்ஞானம் தொடர்பிலான நிபுணத்துவ மருத்துவர் அசங்க விஜேரட்ன தெரிவித்துள்ளார். அமெரிக்க விளையாட்டு விஞ்ஞான கல்லூரி, பிரிட்டன் விளையாட்டு விஞ்ஞான கல்லூரி மற்றும் இராணுவ உடற்பயிற்சி முறையிலிருந்து நீக்கப்பட வேண்டுமென 108 உடற்பயிற்சி வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த உடற்...

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி அறிவித்தல்

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளியிடப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குறித்த அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியுமென கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி 17 பாடநெறிகளுக்கு 4000 மாணவர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அராஜகம் : தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் தாக்குதல்!!

யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் மாணவர் பொது மண்டபத்தில் உள்ள அறை ஒன்று முஸ்லீம் மாணவர்கள் தொழுகை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (5) வழமை போன்று அவ்வறைக்கு...

தேசிய தமிழ் மொழி தினம் ஒக்டோபர் 23 கண்டியில்

தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையில் தமிழ் மொழி சம்பந்தமான போட்டிகள் வலய, மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசிய தமிழ்...

வத்தளை தமிழ் பாடசாலைக்கு எதிர்ப்பு!! இராதாகிருஸ்ணன் கண்டனம்

வத்தளை - ஒலியாமுல்ல பிரதேசத்தில் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க எடுத்த முயற்சியை நான் பாராட்டுகின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கான அடிகல் இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நாட்டப்பட்டது என சுட்டிக்காட்டிய அவர், இதற்கு அப் பிரதேசத்தில் உள்ள பெருபான்மை இன மக்கள்...

வடமாகாண ஆளூநர் கூறியது பொய் என வடமாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே அண்மையில் கிளிநொச்சியில் கருத்து தெரிவிக்கும் போது வடமாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்து இருந்தார். இக் கருத்து தொடர்பில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கும் போது, வடமாகாண கல்வி அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியே 4 ஆயிரம்...

யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு புதன் விடுமுறை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நல்லூர் தேர்த்திருவிழா எதிர்வரும் புதன்கிழமை (31) இடம்பெறவுள்ளமையினால் அன்றைய தினம் யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பதில் பாடசாலை 3 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் இதற்கமைய 3 ஆம் தவணைக்கான பாடசாலைகள் 1 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என வடமாகண கல்வி...

பேராதனை மாணவர்கள் 10 பேருக்கு வகுப்புத் தடை

பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை பீடத்தின் 10 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி குறித்த 10 பேருக்கும் இரு வாரங்களுக்கு இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 22ம் திகதி...

9 வயதில் இணையத்தளம் வடிவமைத்த மாணவி!

தனது 9 வது வயதில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்தது இந்நாட்டின் இளம் இணையத்தள வடிவமைப்பாளராக சாதனை புரிந்துள்ள கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் வைஷின்யா பிரேமானந் நேற்று (23) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இவர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான BCS (Bachelor of Computer...
Loading posts...

All posts loaded

No more posts