Ad Widget

பேஸ்புக்கில் அவதூறு ஏற்படுத்திய இருவர் கைது

முகப்புத்தகத்தில் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, இரு பெண்களுக்கு அவதூறு ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில், குடும்பஸ்தர் ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் சனிக்கிழமை (06) கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கரவெட்டி கிழக்கு பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரை, வரணியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்கும்படி முகப்புத்தகத்தினூடாக வற்புறுத்தி வந்துள்ளார். குறித்த யுவதி...

சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது தடுக்கப்படல் வேண்டும் – சூசையானந்தன்

சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது சட்டபூர்வமாக தடுக்கப்பட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார். சிறுவர் தொழிலாளர்கள் பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சிறுவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கடற்றொழில் மிகவும் கடினமான ஒரு தொழில். சிறுவர்கள்...
Ad Widget

தாலிக்கொடி திருடியவர் கைது

தொண்டு நிறுவன ஊழியர் எனக்கூறி சேந்தாங்குளத்தை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி அப்பெண்ணின் கைப்பைக்குள் இருந்த தாலிக்கொடியை திருடிய சந்தேகநபரை ஞாயிற்றுக்கிழமை (30) கைதுசெய்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி சில்வா திங்கட்கிழமை (01) தெரிவித்தார். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இளவாலை சேந்தாங்குளம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் வீடு ஒன்று கட்டிக்கொண்டு,...

வீட்டில் கொள்ளையடிக்க முற்பட்டவர்கள் கைது

யாழ்.கல்வியங்காட்டு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முற்பட்ட இரண்டு சந்தேகநபர்களை சனிக்கிழமை (29) மாலை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில், வீட்டிலிருந்தவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கொழும்புக்கு பணியொன்றின் நிமித்தம் சென்றிருந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை (29) மாலை வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடிக்கும்...

யாழ்: சொகுசு பஸ்சில் இருந்து கேரள கஞ்சா மீட்பு

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு தனியார் பஸ் ஒன்றினுள் இரண்டு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள் என்றால் குற்றச் செயல்கள் இடம்பெறாது; கைதான இளைஞன் வாக்குமூலம்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக விடுதலைப்புலிகள் மீண்டும் வருவார்கள் என்ற துண்டுப் பிரசுரத்தை ஒட்டியதாக யாழ். புத்தூர், மீசாலை சந்தி பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞன் கூறியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார். மாவீரர் தினத்தை நினைவுகூறும் வகையில் விடுதலைப்புலிகளை ஆதரித்த துண்டுபிரசுரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீரசிங்கம் சுலக்ஸன்...

ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளரை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதன் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம்...

பெண்ணின் கூந்தலை கத்தரித்தவர் கைது

தொண்டைமானாறு, ஊறணி பகுதியிலுள்ள பெண்ணின் கூந்தலை கத்தரித்தவர் என்ற சந்தேகத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (28) கைது செய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பெண்ணின் வீட்டுக்குள் கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி இரவு நுழைந்த சிலர், வீட்டிலிருந்த பெண்ணை பலவந்தமாக மடக்கி பிடித்து கூந்தலை கத்தரித்தனர். பெண்ணின்...

புத்தளத்தைச் சேர்ந்த மூவர் வெடி மருந்துகளுடன் யாழ்ப்பாணத்தில் கைது!

புத்தளம் பகுதியைச் சேர்ந்த மூவரை, அதி சக்திவாய்ந்த வெடி மருந்துகளுடன் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வைத்துத் தாம் கைதுசெய்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை கச்சேரிப் பகுதியில்வைத்து இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று தெரிவித்தார். ஓட்டோ...

சுகாதார சீர்கேடான முறையில் ஐஸ்கிறீம் விற்றவருக்கு அபராதம்

சுகாதார சீர்கேடான முறையில் ஐஸ்கிறீம் விற்பனை செய்த ஐஸ்கிறீம் நிறுவன உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாவும், விற்பனையாளருக்கு 2 ஆயிரம் ரூபாவும் அபராதம் விதிக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார். (more…)

பாட்டியை தாக்கிய பேரன்களுக்கு விசித்திர தண்டனை

ஆனைக்கோட்டை பகுதியில் தமது பாட்டியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரன்களையும் தலா 40 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடும்படி மல்லாகம் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா உத்தரவிட்டார். (more…)

காணாமல் போனவர் சந்தேகத்தில் கைது

யாழ்ப்பாண பகுதியில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் நபரை, வெள்ளிக்கிழமை (21) திருட்டு சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார், சனிக்கிழமை (22) தெரிவித்தனர். (more…)

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட நால்வர் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது. (more…)

குருக்களின் மனைவியை கட்டிவைத்தவர்கள் கைது

புன்னாலைகட்டுவன், ஈவினை பகுதியில் குருக்கள் ஒருவரின் மனைவியை கட்டிவைத்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்ற மூன்று சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். (more…)

81 கிலோ கஞ்சாப் பொதிகள் பண்டத்தரிப்பில் மீட்பு

பண்டத்தரிப்பு பகுதியில் கார் ஒன்றில் இருந்து 81 கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சாவினை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர். (more…)

டெங்கு நுளம்புகளுக்கு இடங்கொடுத்தவர்களுக்கு எதிராக வழக்கு

டெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். பொலிஸார், சனிக்கிழமை (15) தெரிவித்தனர். (more…)

யாழில் வைத்தியரைத் தாக்கி கொள்ளையிட்ட இருவர் கைது

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

சிகரெட் இல்லையென கடைக்காரருடன் சண்டையிட்ட இருவர் கைது

திருநெல்வேலி சந்தைக்கு அருகிலுள்ள கடையில் சிகரெட் இல்லையென கடைக்காரருடன் முரண்பட்டு அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கடனுக்கு கள் கொடுக்க மறுத்தவரின் கையை முறித்தவர் கைது

ஆவரங்கால் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணையில் கடனுக்கு கள் கொடுக்க மறுத்த தவறணை பணியாளரின் கையை அடித்து முறித்தவரை புதன்கிழமை (12) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் வியாழக்கிழமை (13) தெரிவித்தனர். (more…)

போதையில் குழப்பம் விளைவித்தவருக்கு விநோத தண்டனை

இளவாலை பகுதியில் மதுபோதையில் வீதியால் சென்று வருபவர்களுடன் அநாகரீகமாக நடந்துகொண்ட ஒருவரை, நீதிமன்ற வளாகத்தில் சமூதாய வேலையுடன் கூடிய சமூதாய சீர்திருத்த பணியை 150 (more…)
Loading posts...

All posts loaded

No more posts