- Wednesday
- September 16th, 2026
பொன்னாலை வீதி கொத்தாத்துறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, ஞாயிற்றுக்கிழமை (17) உத்தரவிட்டார். வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயிலடியை சேர்ந்த பாலசுப்பிரமானியம் யோகேஸ்வரி (வயது 34)...
புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை தகவல்களை வெளியாகியுள்ளது. நேற்று மேலதிகமாக கைதான5 பேர்களில் ஒருவன் வேலணை பிரதேசசபையில் வேலை செய்கிறான். மற்றைய நால்வரும் கொழும்பில் வேலை செய்கிறார்கள். ஏற்கனவே கைதான மூவரில் ஒருவனும் கொழும்பில் இருந்து வந்திருந்தான். இவனுடன், இந்த நால்வரும் திட்டமிட்டு இந்த கொடூரத்தை...
புங்குடுதீவில் பாடசாலை மாணவி கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான லெனின் குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார்,ஜெயக்குமார், தவக்குமார்,ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 18...
புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த மாணவி, இனம்தெரியாத நபர்களினால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார் . இவர் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரக்கல்வி கற்கும் மாணவி ஆவார். இவர் நேற்றுக்காலை வல்லனில் உள்ள தனது வீட்டில் இருந்து, பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதேவேளை இச்சம்பவத்தின் கொலை சந்தேகநபர்களான புங்குடுதீவு வல்லனை...
யாழ்.புங்குடுதீவில் கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று காலை பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக...
13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 40 வயதுடைய சந்தேகநபர், மற்றும் சிறுமியை வாளால் வெட்டிக் காயப்படுத்திய சந்தேகநபருடைய இரண்டு மகன்கள் ஆகியோரை வியாழக்கிழமை (07) கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 13 வயதுச் சிறுமியின் பெற்றோர் திருமண நிகழ்வொன்றுக்கு கொழும்புக்குச் சென்றமையால் சிறுமியை தாவடி பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு...
பொலிஸாரை கத்தியால் குத்திய சந்தேக நபர் உட்பட மூவர் மூளாய் மாவடிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் குறித்த பகுதிக்கு நேற்று மாலை சென்றுள்ளனர். சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று அவரைக் கைதுசெய்யமுற்பட்டவேளை அவர் பொலிஸார் ஒருவரை கத்தியால் குத்திவிட்டுத்...
சுன்னாகத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் பெற்றோல் குண்டுகள், வாள்கள் மற்றும் கைக்கோடரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மோதல் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் நால்வரைக் கைது செய்தனர். ஏனையோர் தப்பியோடினர்....
நெல்லியடி போக்குவரத்துப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை வியாழக்கிழமை (23) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தனர். அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்றை வீதியில் கடமையில் இருந்த நெல்லியடி பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். அவ்விடத்துக்கு வந்த பிறிதொரு நபர் தனக்கு நெல்லியடி பொறுப்பதிகாரியை...
வலி.வடக்கில் மக்களின் மீள்குடியமர்வுக்கு விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் அழித்தது போக எஞ்சியிருப்பவற்றை களவாடும் நடிவடிக்கைகளில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு களவாடிய 25 பேரை நேற்றுப் புதன்கிழமை பொலிஸார் கைது செய்தனர். வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 9 கிராமசேவகர் பிரிவுகள் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டன. இப்பகுதி மக்கள் தங்கள் காணிகளை துப்புரவாக்கும் பணிகளில்...
இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர அழைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் மாத்திரம் 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரிவின் ஊடகப் பேச்சாளர், பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். போலி பேஸ்புக் கணக்கு குறித்தே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ஏனையவர்களின் கணக்குகளை முடக்கி தரவுகளை மாற்றியமை...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கும் நோக்கில் இனந்தெரியாத மர்ம நபர்கள் துரத்திச் சென்ற சம்பவம் தொடர்பில், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் மேற்படி ஊடகவியலாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (10) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் தூய நீருக்கான உறுதிமொழியை வேண்டி உண்ணாவிரதம் இருந்தவர்களை, வட...
தென்மராட்சி – மட்டுவில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட ´ஆவா´ குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அதே தினத்தில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் நேற்றய தினம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்...
சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள நொர்தன் பவர் நிறுவனத்தின் மின்வயர்களை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை, வியாழக்கிழமை(09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமைக்கு நொர்தன் பவர் நிறுவனத்தின் மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணம் எனக்கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் 11...
வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில்...
வேலணை பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை 30 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க உத்தரவிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில், வேலணை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு, களவு மற்றும் சட்டவிரோத...
யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நல்லூர்ப் பகுதியில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்து நால்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். பொதுச்சுகாதார பரிசோதகருடன் இணைந்து கடந்த 20ஆம் திகதி முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் யாழ். மாநகர சபை எல்லைக்குள் செய்யப்பட்டது. இதன்போது, டெங்கு பரவுக்கூடிய வகையில்...
ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமை நேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தில் நேற்று (23) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார்,...
மாதகல் மற்றும் மன்னார் கடற்பரப்புகளில் அத்துமீறிய தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களை தேடி நேற்று கடல் படை முன்னெடுத்த தீவிர தேடுதலில் சுமார் 40 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். மாதகல் கடல்...
நெல்லியடி பகுதியில் சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இந்தியப் பிரஜை சுற்றுலா விசாவில் இலங்கை வந்து துணி விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 31 வயதுடைய குறித்த சந்தேகநபர் பேதுருதுடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் குறித்த மேலதி விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading posts...
All posts loaded
No more posts
