Ad Widget

பாட்டியை தாக்கிய பேரன்களுக்கு விசித்திர தண்டனை

ஆனைக்கோட்டை பகுதியில் தமது பாட்டியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரன்களையும் தலா 40 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடும்படி மல்லாகம் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா உத்தரவிட்டார்.

அத்துடன், மூன்று பேரன்களையும் பாட்டியிடம் மன்னிப்பு கேட்கும்படி நீதவான் கூற, பேரன்கள் மன்றில் வைத்து பாட்டியிடம் மன்னிப்பும் கேட்டனர்.

பாட்டிக்கும் தாய்க்கும் ஞாயிற்றுக்கிழமை (23) நிலவிய காணி பிணக்கு சண்டையில், தமது தாய்க்கு ஆதரவு வழங்கும் பொருட்டு மூன்று பேரன்களும் தமது பாட்டியைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான பாட்டி, மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் 15, 17, 18 வயதுடைய மூன்று பேரன்களும் திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சமூக சீர்திருத்தத்திற்கான சமூப்பணியில் மூவரையும் தலா 40 மணித்தியாலங்கள் ஈடுபடுத்துமாறு உத்தரவிட்டார்.

Related Posts