Ad Widget

சுகாதார சீர்கேடான முறையில் ஐஸ்கிறீம் விற்றவருக்கு அபராதம்

சுகாதார சீர்கேடான முறையில் ஐஸ்கிறீம் விற்பனை செய்த ஐஸ்கிறீம் நிறுவன உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாவும், விற்பனையாளருக்கு 2 ஆயிரம் ரூபாவும் அபராதம் விதிக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார்.

மல்லாகம், கோணப்புலம் நலன்புரி முகாம் பகுதியில் வான் ஒன்றில் விற்கப்பட்ட ஐஸ்கிறீம்களை பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது, குறித்த ஐஸ்கிறீம் சுகாதார நடைமுறைகளுக்கு ஒவ்வாத வகையில் உற்பத்தி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், ஐஸ்கிறீம் விற்பனை செய்தவர், சுகாதார வைத்தியதிகாரி பிரிவால் வழங்கப்படும் மருத்துவ சான்றிதழை பெற்றிருக்கவில்லை.

இதனையடுத்து, உற்பத்தி நிலையத்தின் உரிமையாளர் மற்றும் விற்பனையாளருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு திங்கட்கிழமை (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related Posts