- Sunday
- July 13th, 2025

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 5 வயதுச் சிறுவனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 15ஆம் திகதி காணாமற்போன காந்தரூபன் தர்சன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிணற்றில் சிறுவனின் சடலம் இருப்பதாக, சனிக்கிழமை (16) இரவு பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்தே, சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்புடைய...

வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (15.07.2016) திறந்துவைத்துள்ளார். போசாக்கான பாரம்பரிய உணவுகளை நுகரும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு விவசாய அமைச்சு மாவட்டம் தோறும் அம்மாச்சி என்ற பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவகங்களை...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தங்களது வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'அண்மைக் காலமாக, புனர்வாழ்வு பெற்றுவந்த போராளிகள், மரணத்தை தழுவி வருகின்றனர். இது...

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் தனது மகனை கடந்த ஒருவருடமாக பாடசாலைக்கு அனுப்பாத தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் 14 நாள் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மாவட்டச் செயலகம், சிறுவர் நன்நடத்தை அலுவலகம், பிரதேச செயலகம், நீதிமன்றம் என்பன இணைந்து தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பாடசாலை நாட்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை...

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனுடன் தவறாக நடந்ததாகவும், தாக்கியதாகவுமான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பபில் மேலும் தெரியவருவதாவது தரம் பத்தில் கல்வி பயிலும்...

வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜ கோபுர அடிக்கல் நாட்டு விழா நேற்று வியாழ்கிழமை 14-07-2016 நடைபெற்றது. காலை விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் அடிக்கல் நாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்...

முல்லைத்தீவிலுள்ள இலங்கை இராணுவம், கொழும்பு ரொட்டரி கழகத்துடன் இணைந்து முல்லைத் தீவு பிராந்தியத்தில் கால்களை இழந்த பொதுமக்களுக்கு தலா 15,000.00 ரூபா பெறுமதியான செயற்கை கால்களை வழங்கி வைத்தது. இச் செயற்றிட்டம் கொழும்பு கெபிடல் சிட்டி ரொட்டரி கழகத்தின் அனுசரனையுடன் கொழும்பு அசரன சரண சங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக இராணுவ செய்தி ஊடகம் தெரிவிக்கிறது. நந்திக்கடல்...

வட்டுவாகலில் சரணடைந்தோர் விவரத்துக்குப் பதிலாக புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கொண்டு வந்த முல்லைத்தீவு 58ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தனவை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் கோபமடைந்து ஏசினார். இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) உள்ளிட்ட 05 பேரின் உறவினர்கள் தாக்கல்...

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக இராணுவ...

புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் மனைவிக்கு தீ மூட்டி தானும் தீ முட்டிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை (12) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சௌந்தராஜா உதயராஜா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். மனைவி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இவர்கள் இருவரும், 3 மாதங்களுக்கு முன்னர்...

இறுதி யுத்தத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டனர் எனக் கூறுவதில் எந்தவித உண்மையுமில்லையெனவும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லையெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இராணுவத்தினர் பொதுமக்களை இலக்குவைத்து பயங்கரவாதிகளைக் கொல்லும் நடவடிக்கையில் ஈடுபடவில்லையெனவும் பொதுமக்களைக் காப்பாற்றியே பிரச்சனைக்குத்...

சமீபத்திய காலமாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னால் போராளிகளின் மரணங்கள் மீதமிருக்கும் போராளிகளின் மனதிலும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது இந்த வரிசையில் முன்னால் போராளியும் பொட்டம்மானின் சாரதியாக இருந்த சசிகுமார்(ராகுலன்) என்பவரும் காலமாகியுள்ளார் தொடரும் இந்த மரணங்களில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன? என்பது விடையில்லா புதிராக உள்ளது போராளிகள் புனர்வாழ்வளிக்கப்படும்போது இராணுவத்தினரால் திட்டமிட்டு ஏதேனும் விஷமருந்துக்கள்...

பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் 15 வயது மாணவி ஒருவர் குடும்பமாக வாழ்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களை இனங்கண்டு மீண்டும் அவர்களைப் பாடசாலைகளில் இணைக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி நீதவான் பணிப்புக்கமைய செயற்படுத்தப்படுகின்றது. மலையாளபுரம், பாரதிபுரம், பொன்னகர், கிராமங்களில் சில நாட்களாக திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன....

வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் போது, வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் தாக்கிய சம்பவம், மாங்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (12), குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை வகுப்பு ரீதியாக பார்வையிட்டுக் கொண்டுச் சென்ற அதிபர், கற்றல் நடவடிக்கைகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த வகுப்பறையொன்றுக்குள் சென்றுள்ளார். இதன்போது அங்கு மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியரே,...

கிளிநொச்சி தா்மபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாா் சிகிச்சை நிலையம் நேற்று கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அதிகாரிகளினால சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிகிச்சை நிலையத்தில் சிறுமி ஒருவருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது எனும் குற்றச்சாட்டிற்கு அமையவே சீல் வைக்கப்பட்டதாக தா்மபுரம் பொலீஸ் தெரிவித்துள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சோ்ந்த 14...

வன்னி இறுதி யுத்தத்தில் அழிந்து போயுள்ள வாகனங்களுக்கான இழப்பீட்டை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக காப்புறுதி செய்யப்பட்ட வாகனங்கள் பல, முள்ளிவாய்க்கால் வரை சென்றிருந்த நிலையில், உரிமையாளர்களால் கைவிடப்பட்டிருந்ததுடன், அவர்களும் முற்றாக வெளியேறியிருந்தனர். பின்னர், அவை அனைத்துமே காணாமலும் எரியுண்டு அழிந்தும் போயிருந்தன. இந்நிலையில், தமது வாகனங்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் கொடுப்பனவுகளை...

வடமாகாணத்தில் 2018ஆம் ஆண்டில் இராணுவம் இருக்காது என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அது நடக்குமானால் இராணுவம் போகும் போது, விகாரைகளையும் கொண்டு செல்ல வேண்டும்' என, வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'முல்லைத்தீவு மாவட்டமானது, பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். போர் காலத்துக்கு முன்பு...

கடந்த வியாழக்கிழமை ஒட்டுசுட்டான் சிவநகர் பகுதியில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளித் தம்பதிகளுக்கு வவுனியா நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது. வவுனியா நீதிமன்றத்தின் நீதிபதி லெனின்குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிபதியால் பிணை அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த புதன்கிழமை இவர்கள் இருவரையும் வவுனியா காவல்துறையினர் கைதுசெய்யவில்லையென ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த போதிலும் நேற்றயதினம் அவர்களே இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில்...

“வடமாகாண சபைக்கு சொந்தமான பல சுற்றுலா மையங்களை இரானுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்” என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். வடமாகாண சுற்றுலா மையம் நேற்று மாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “2010ஆம் ஆண்டு போர் முடிந்துவிட்ட...

போலியான விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்வதற்கு முயன்ற வடக்கைச் சேர்ந்த இளைஞனை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 36 வயதான சந்தேகநபர், கிளிநொச்சி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று அறியமுடிகின்றது. சந்தேகநபர், ஓமான் விமான சேவைக்கு உரிய விமானத்தில், மஸ்கட் ஊடாக இத்தாலிக்கு செல்லும் நோக்கிலேயே விமான...

All posts loaded
No more posts