- Saturday
- July 12th, 2025

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவநகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளான தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் இவர்கள் இருவரும் கைதுசெய்து அழைத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்தக் கைது தொடர்பில் ஒட்டுசுட்டான் மற்றும் வவுனியா...

கல்வித் திணைக்களத்திற்கு ஓதுக்கப்பட்ட காணியை தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியை தனியாருக்கு வழங்கும் வகையில் நேற்று திங்கள் கிழமை நில அளவை மேற்கொள்ளும் முயற்சி பொது மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி உதயநகர் மேற்கில் கடந்த சில வருடங்களுக்கு முன் சுமார் நான்கு ஏக்கர் பொதுக் காணி கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்திற்கு...

வடக்கிற்கான பொருளாதார நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு முயற்சிக்கும் அரசியல்வாதிகள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாதுள்ள பொருளாதார சந்தை தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தாதது ஏன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கிற்கான பொருளாதார வர்த்தக மையத்தை வவுனியா – தாண்டிக்குளத்தில் அமைப்பதென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் குறித்த...

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மதவிவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதன் பின்னர்...

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் காணிகளை விடுவித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக காணிகளை அபகரித்துவருவதாக வடக்குமாகாண மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி டி.பாலமுரளி குற்றம்சாட்டியுள்ளார். ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் நடைபெற்ற உபகுழுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், வடக்கில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்கின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்று 18...

கிளிநொச்சியில் இருபதாயிரம் இளைஞர் ,யுவதிகள் வேலைவாய்ப்பு அற்ற நிலையில் இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்துள்ளார் மனிதவலு மற்றும் வேலைவாயப்பு திணைக்களத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் 30-06-2016 (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவினால் குறித்த நிலையம்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்கு முன்னர் எந்த பௌத்த விகாரையும் இருந்திருக்காத நிலையில் தற்போது, 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். மாவட்டத்திலுள்ள அரச காணிகள் மற்றும் அடாத்தாகப் பிடித்துள்ள தனியார் காணிகளிலேயே இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாங்குளம், வட்டுவாகல், ஒட்டுசுட்டான், கொக்கிளாய், மண்ணாகண்டல், சமளம்குளம், புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் மற்றும் கோப்பாபுலவு...

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களைத் தேடி, நேற்று வியாழக்கிழமை (30) காலை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித பலனுமும் இன்றி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. கிளிநொச்சி பொலிஸார், அப்பகுதி கிராம அலுவலர், சமாதான நீதிவான் ஆகியோர் முன்னிலையில், அப்பகுதியிலுள்ள இரண்டு இடங்களில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன....

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை, அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 04 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து...

வடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை (27) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள நிலையில், கிளிநொச்சி பகுதியிலுள்ள அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தனியார் பஸ்ஸூக்கு 60 சதவீதம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் 40 சதவீதம் என்ற விகிதாசார அடிப்படையில், கடந்த 3 வருடகால...

பல தசாப்தங்களாக குடியிருக்கும் காணியிலிருந்து தம்மை விரட்ட முற்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச செயலரிற்கு எதிராக குடும்பமொன்று கிளிநொச்சியில் போராட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டம் நேற்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் இடம்பெற்றது. கிளிநொச்சி – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த முத்தையா விஜயநாதன் என்ற குடும்பத்தவர், மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் முதிய...

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டான்கேணி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 2,156ஏக்கர் மகாவலி எல் வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்தால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், 1984ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக அம்மக்கள் இடம்பெயரும்போது அக்காணிகள் அனைத்தும் அவர்களுடையதாயிருந்தது. அதுமாத்திரமின்றி 1984ஆம் ஆண்டு அந்தக் காணிகளே...

முல்லைத்தீவு-பரந்தன் வீதியில், வட்டுவாகல் பாலத்தில் ஒரு ஆணின் சடலம் காணப்படுகின்றது. சிவப்பு, மற்றும் நீல நிற டீசேட்டும், நீல நிற சாரமும் அணிந்துள்ள குறித்த ஆண் விபத்து ஒன்றில் உயிரிழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் குறித்த ஆண் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் உந்துருளி நீரினுள் தூக்கி வீசப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

கிளிநொச்சியில், இளைஞர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவருடன் வைத்திருந்த, பாலியல் உறவினால் அந்த சிறுமி கர்பமாகி உள்ளதாக வைத்தியசாலைப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தி உள்ளன. கிளிநொச்சி கரடிபோக்கு சந்திக்கருகில் அமைந்துள்ள, யாழ் தினசரிப் பத்திரிகை ஒன்றின் மாவட்ட அலுவலகத்தின் பணியாளர் தங்கும் விடுதியில், இந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் இட்பெற்றுள்ளதாக, சிறுமியின் வாக்கு மூலத்தின் வாயிலாக...

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் இடைநிலை வகுப்புக்களின் முக்கிய பாடங்களான கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு தொடர்ந்தும் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிவருவதால், பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகுவது அதிகரித்து வருவதாக, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான பசுபதி அரியரட்ணம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போது, 'நான் வலயக் கல்விப் பணிப்பாளராக...

கடந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்ட போது அதில் பாரபட்சம் காட்டப்பட்டது, பெரும்பான்மை பாடசாலைகளுக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மை பாடசாலைகளுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது, ஆனால் இன்று நிலைமை அப்படி அல்ல அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது என, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எனவே எமது கல்வியின்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், தான் ஏன் கஞ்சா செடியை வளர்த்தேன்? என்பதற்கு விநோதமான காரணத்தை கிளிநொச்சி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (17) கூறினார். கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் வெள்ளிக்கிழமை (17) காலை கைது செய்தனர். மேற்படி நபர் 3...

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில், பஸ்ஸொன்று மோட்டார் சைக்கிளை பந்தாடியதில் அந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர், ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பஸ்ஸே, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் வசித்து வரும் 15 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, உத்தரவிட்டார். தாய், தந்தை இல்லாத இந்தச் சிறுமி, சிறுவர் இல்லமொன்றில் இருந்து அதன் பின்னர், அம்மம்மா மற்றும் மாமா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேற்படி இளைஞன்,...

போர் நடந்த காலகட்டத்தில் வட மாகாணத்தில் கல்வி நிலை முன்னேற்றம் கண்டிருந்து, எனினும் தற்போது கல்வி நிலை வீழ்ச்சி கண்டு வருகிறது என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பரந்தன் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். வட மாகாணத்தில் கல்வி நிலை வீழ்ச்சியடைவதானது...

All posts loaded
No more posts