கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்!

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை பாடசாலை பிரதான வாயிலை மறித்து இடம்பெற்றது. நேற்றைய தினம் பாடசாலை அதிபரை ஒரு தரப்பினர் தாக்க முற்பட்டதாகத் தெரிவித்து தமது பிள்ளைகள்,... Read more »

சுரேன் ராகவன் இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்தார்!

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளன கட்டடத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த காலம் தொட்டு இரணைமடு விவசாய சம்மேளனத்தினர்... Read more »

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம்!! – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை!

ஆலயத்திற்கு செல்வதோ பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்கள் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில்… வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்... Read more »

மாணவ குழுக்களிடையே மோதல் மாணவனின் கழுத்தில் வெட்டு!!

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (12) இடம்பெற்ற க.பொ. த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின் போது மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் மாணவன் ஒருவனின் கழுத்தும் வெட்டப்பட்டுள்ளதோடு, 20 க்கு மேற்பட்ட கதிரைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.... Read more »

குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் உடைக்கப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள, தமிழர்களின் பூரவீக குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் அண்மையில் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அப் பகுதி மக்களால் இதுதொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் நேற்று (வியாழக்கிழமை) குமுழமுனைப்... Read more »

காணாமல் போன இளைஞனும், பெண்ணும் சடலமாக மீட்பு !!

காணாமற்போயிருந்த இளைஞனும், பெண்ணும் 7 நாள்களின் பின் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது சடலங்கள் பரந்தன் ஓவிசியர் கடைச் சந்திக்கு அண்மையாகவுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றுக்குள் பழுதடைந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி குமரபுரத்தைச்... Read more »

வேலைவாய்ப்பைத் தேடும் இளையோருக்கான தொழில் சந்தை முல்லைத்தீவில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் உள்ள இளையோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் தொழில் சந்தை நாளை வியாழக்கிழமை (ஓகஸ்ட் 27) காலை 8.30 மணிக்கு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தத் தகவலை முல்லைத்தீவு மாவட்ட... Read more »

செஞ்சோலை படுகொலை நினைவுகூரல் நிகழ்வை நடத்தத் தடை!

செஞ்சோலை படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப் படையினர் நடத்திய தாக்குதலில்... Read more »

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் குறித்த நான்கு பேரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நால்வரும் மதுபோதையில் சுயேச்சைக் குழு வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு கற்களால்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் எழுமாறாக 100 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை – எவருக்கும் கோரோனா தொற்று இல்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் எழுமாறாக 100 பேரின் உயிரியல் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய 9 மாகாணங்களின் சுகாதாரத் திணைக்களங்களால் அடுத்த ஒரு வருடத்துக்கு... Read more »

யானையின் தாக்குதலுக்குள்ளான விரிவுரையாளர் யாழிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்!

கிளிநொச்சியில் அண்மையில் யானையின் தாக்குதலில் காயமடைந்த விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்சி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்க நேற்று (புதன்கிழமை) மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், பல்கலைக்கழக... Read more »

கிளிநொச்சி மக்களே அவதானம்! – பிராந்திய சுகாதாரத் திணைக்களம் வலியுறுத்து

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில் நுட்பபீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் கிளிநொச்சி வாழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட... Read more »

ஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தினை தொடர்ந்து... Read more »

டிப்பர் வாகனம் மோதியதில் 18 மாடுகள் உயிரிழப்பு!

கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்துள்ளன. கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விசுவமடு பகுதியில் இருந்து 35 வீதியூடாக வேகமாக வந்த டிப்பர் வாகனம் வீதியால்... Read more »

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டியது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டிய நிலையில நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. காணாமல்... Read more »

தடைகளையும் மீறி சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

சுதந்திரபுரம் படுகொலை 22ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸாரின் தடைகளையும் மீறி அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு விமானப்படை மற்றும் ஒருங்கிணைந்த எறிகணை தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.... Read more »

அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சியில் பாதிப்பு

அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த புயல் தாக்கத்தினால் பள்ளிக்குடாவில் ஒரு குடும்பத்தை... Read more »

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலித்தார் ரவிகரன்!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு தினமான இன்று (18)உயிர் நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்த்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டார். “எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக்... Read more »

கிளிநொச்சி அழகாபுரி பாடசாலையை விமானப்படையினர் பொறுப்பேற்றனர்!

கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படை முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப் படையினர் தற்காலிகமாக தங்குவதற்கு... Read more »

ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை- கிளி. அரசாங்க அதிபர்

ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள மக்கள் தமது தேவைகளுக்காக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க கிளிநொச்சி நகருக்கு பயணிக்க முடியும் என கிளிநொச்சியில்... Read more »