வட்டுவாகல், கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு...

கனகராயன்குளத்தில் கப் ரக வாகனம் விபத்து!! இருவர் பலி!!

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்து இன்று (30) ஏ-9 வீதியின் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம்...
Ad Widget

ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை உயிரிழப்பு!

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றயதினம் குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தது. இதன்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த ஐந்து மாதக் குழந்தை சம்பவ...

7 மாதங்களாக ஆசிரியர் இல்லை ; பெற்றோர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர் கடந்த 7 மாதங்களாக இல்லாத நிலையில் பெற்றோர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடந்த ஏழு...

ஆரம்பமானது தேசிய நேர்மை வாரம்!!

“நேர்மையான கலாசாரம் – கிளீன் ஶ்ரீலங்கா” என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள *தேசிய நேர்மை வாரம் இன்று (27) முதல் ஜூலை 31 வரை* முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன....

அரசாங்க அதிபர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் !

கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக எல்நினோ காலநிலையை எதிர்கொள்வது தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போக நெற்ச்செய்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் பற்றி இங்கு...

மலசல கூடத்துடன் இணைந்த குளியறைக்குள் கோழி இறைச்சி விற்பனை!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப் பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட நாட்களாக இடம்பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் கதிரேசு வீதிக்கு திரும்பும் சந்தியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடை ஒன்றில் அக்கடைக்குரிய கோழிகள் மலசலகூடம் மற்றும் அதனுடன்...

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை!!

நாட்டின் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (13) திங்கட்கிழமை வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்' இன்றைய தினம் பகல் வேளையில் இந்த மாவட்டங்களின் சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும்...

கூட்டுறவுச் சங்கக் களஞ்சியசாலையை உடைத்து நெல்மூடைகளை நாசம் செய்த யானை!!

முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் 14ஆம் கட்டைப் பகுதியில் காட்டுயானைகளின் நடமாட்டம் மற்றும் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து காட்டுயானைகள் சேதம் விளைவித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நெல் மூடைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ஒரு அச்சநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும்கூட,...

ஏ9 வீதியில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு!!

கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது என கடந்த 30ஆம் திகதி மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக, இன்று வெள்ளிக்கிழமை (3) கிளிநொச்சி நகர்ப்பகுதியில் ரிப்பர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி...

முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கு புதிய நோயாளர் காவு வண்டி!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரச் சேவை, நோயாளர் போக்குவரத்து மற்றும் அவசரச் சிகிச்சைச் சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கான புதிய நோயாளர் காவு வண்டி (Ambulance) ஒன்று நேற்று முன்தினம் (30) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன...

பேருந்து ஊழியர்களுக்கு முறைப்பாடு இலக்கத்துடன் சீருடை!

வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (01) நடைபெற்றது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்....

பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

கடந்த 22 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில் பெருமாள் கணேசன் என்ற 64 வயதுடைய ஓய்வு பெற்ற அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரின் இறப்புக்கு நீதி...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் – அர்ச்சுனா

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் உறுதியளித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (23) அமர்வில் இடம்பெற்ற கரைவலை மீனவர்கள் பிரச்சனை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு...

பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த ஓய்வுபெற்ற அதிபர் மோட்டார் சைக்கிள் மோதி பலி!

கிளிநொச்சி, ஏ - 9 பிரதான வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் என்பவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு...

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்படட பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறி விழுந்த இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார். நேற்று மாலை (22) இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தர்மபுரம், பிரமந்தனாறு பகுதியில் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குறித்த...

அனுமதியின்றி வாகன பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் ; மோட்டார் சைக்கிள் பறிமுதல் ; பலருக்கு எதிராக வழக்கு!

வவுனியா நகரில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நடத்தப்பட்ட, அனுமதி பெறப்படாத வாகனப் பேரணி ஒன்றின்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பேரணியினர் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவர்களால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் பெரும் எண்ணிக்கையிலான...

சட்டவிரோத மணலுடன்பூநகரி பிரதேச சபை உழவு இயந்திரம் STF ஆல் கைப்பற்றப்பட்டது; சாரதி கைது

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு பூநகரி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியினையும் சட்டநடவடிக்கைக்காக நீதி மன்றில் முற்படுத்த பூநகரி பொலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஜெயபுரம் பகுதியிலிருந்து அனுமதியற்றவகையில் மணலுடன் பயணித்த உழவு இயந்திரத்தினை...

குழந்தை விற்பனை முயற்சி: தாய் உட்பட இருவர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட தாய் மற்றும் தந்தை எனக் கூறப்படும் ஆண் ஒருவரும் அப்பகுதி மக்களால் தருமபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மேலும் தெரியவருவதாது, யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியைச் சேர்ந்த...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கணக்காளர் உட்பட இருவர் கைது

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரையும் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் படுக்கை விரிப்புகளைச்...
Loading posts...

All posts loaded

No more posts