- Sunday
- July 5th, 2026
போருக்கு பின்னர் முதன் முதலாக யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச ஆய்வு மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.இன்று நாளையும் நடைபெறும் இம்மாட்டில் இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்கின்றனர்.இச்சர்வதேச ஆய்வு மாநாட்டிற்கான ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் யாழ்.ரில்கே விடுதியில் நடைபெற்றது. (more…)
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென்ற மு.காவின் முடிவை நான் வரவேற்கிறேன். அது ஒரு நல்ல முடிவு. அரசால் ஏமாற்றப்படுவதற்கு முன்னர் ஹக்கீம் ஏமாறாமல் வெளியேறியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். இவ்வாறு நேற்று கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். (more…)
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை நெல்லியடி பஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் புலிக்கொடியை ஏந்தியவாறு பஸ் நிலையத்தை வட்டமிட்டுச் சென்றுள்ளனர். (more…)
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பில் தாக்கல் செய்தது.இந்த வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதி செயலாளர் நாயகமுமான கி.துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கே.கருணாகரம் ஆகியோர் தாக்கல் செய்தனர். (more…)
‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்று மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரின் ஒலிவாங்கியினை பறித்தகாவல்துறையினர்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் பாடலைப் பாடிய பாடகர் சுகுமாரிடமிருந்து சிறிலங்கா காவல்துறையினர் ஒலிவாங்கியைப் பறித்தெடுத்தனர். இதனால் இசைக்குழு நிகழ்வைக் கண்டுகளித்த பார்வையாளர்களிடையே பெரும் பதட்டமும் விரக்தியும் ஏற்பட்டது....
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான நிமலரூபனின் கொலை மற்றும் வடக்கில் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கண்டித்து நெல்லியடியில் இன்று நடக்கும் கவனஈர்ப்புப் போராட்டத்துக்கு தடை விதிக்க பருத்தித்துறை நீதிவான் மன்று மறுத்து விட்டது. அதேநேரம் போராட்டத்துக்குப் போதிய பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியது. (more…)
யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் வீடுகள் மீது இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் அம்மன் கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும், காண்டீபன் ஆகியோரின் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன. (more…)
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளை பல்கலைக்கு வெளியே நடாத்துவதற்கு பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.அதனடிப்படையில், போருக்குப் பின்னரான அபிவிருத்தி என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ளதாகவும் மற்றய அமர்வுகள் திட்டமிட்டபடி பல்கலைக்கழகத்திலேயே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ். மாநாகர முதல்வரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பளர் அங்கஜனுக்கு எதிரான வழங்கு திங்கட்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. (more…)
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக்குச் செல்லும் பிரதான வீதியோரங்களில் நடைபாதை வியாபாரிகளின் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனால் பொதுமக்க்ள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.நடைபாதை பகுதியில் அமர்ந்திருந்து பெருமளவான தென்பகுதி வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பொது மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். (more…)
வடமாகாண ஆளுநரும், யாழ். மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக அவசர அவசரமாக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார். (more…)
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கான அங்கீகாரத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இரண்டாவது தடவையாக இன்று வழங்கியுள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஆரம்பமானது. இதன்போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. (more…)
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியலை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (16)தாக்கல் செய்தது. கல்வி நிபுணத்துவ ஆலோசகர் சி. தண்டாயுதபாணி முதன்மை வேட்பாளராக போட்டியிடுகிறார்.திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு: (more…)
சமூக சேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக யாழ். மாவட்ட முன்னாள் செயலாளர் இமெல்டா சுகுமார் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிதாக நியமிக்கப்பட்ட 17 அமைச்சுக்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் இவருக்கும் நியமன கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது. (more…)
வடக்கு, கிழக்கில் உள்ள காணிகளின் விவரங்களை அதன் உரிமையாளர்கள் பதிவுசெய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் விதத்தில் விடுக்கப்பட்ட சுற்று நிருபத்தை விலக்கிக்கொள்வதாக அரசு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்துமூலம் உறுதியளித்தது. (more…)
இந்தியாவை சேர்ந்த கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், CSE, SoftView நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும் கணினி வரைகலை நிபுணரும் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆர்வலரும் பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆன்ரோ பீற்றர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இறக்கும்போது இவருக்கு வயது 45. (more…)
யாழ். வேம்படி மகளிர் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி வேணுகா சண்முகரத்தினம், அதிபர் தராதரத்திலிருந்து அரச சேவையைத் தொடர்ந்து செய்வதற்கு அனுமதி வழங்குவதாகவும், அதற்கு இடையூறாகச் செயற்படின், ஆணைக்குழுவின் கட்டளைகளை நிறைவேற்றத் தவறியமைக்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுக் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி றாஜினி முத்துக்குமாரனுக்கு அரசசேவைகள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது....
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் இடையிலான ஒரு நாள் துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 433 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யூனியன் கல்லூரி அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. (more…)
நீதிமன்றத்தை அவமதித்து, நீதிமன்ற கட்டளையைக் கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிரான வழக்கு இன்று புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு விசாரணையின் போது சிவாஜிலிங்கம் சார்பாக என்.சிறிகாந்தா, எம்.றெமிடியஸ், என்.திருநாவுக்கரசு, வி.ரி. சிவலிங்கம், கே.பி.எஸ். வரதராஜா, ஏ. ராஜரெட்ணம், சர்மினி விக்னேஸ்வரன், எஸ். செலற்றின்,...
Loading posts...
All posts loaded
No more posts
