யாழ். பல்கலை துணைவேந்தர் – கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க சந்திப்பு!

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவிற்கும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று பலாலியில் நடைபெற்றதாக தெரியவருகின்றது.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் 4 பேருடைய விடுதலை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

சாரதிகளிடம் கொத்து ரொட்டியும் சாராயமும் கேட்கும் போக்குவரத்து பொலிஸார்!

ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்துபவர்களிடம் கொத்து ரொட்டியும் சாராயமும் வாங்கித் தருமாறு யாழ். குடாவில் பொலிஸார் கேட்பதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் பெரும்பாலும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது.. (more…)
Ad Widget

ஒருமணி நேரப் பணிப் பகிஷ்கரிப்பிற்கு த.தே.கூட்டமைப்பின் இளைஞர் அணி அழைப்பு

கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும், தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் நாளை நடத்தவுள்ள சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று த.தே.கூட்டமைப்பு இளைஞர் அணி அழைப்பு விடுக்கிறது. நாளை பகல் 11.00 மணி முதல் 12.00 மணிவரையான ஒரு மணி நேரத்தில்...

பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்

இனப் பிரச்சினைக்கான தீர்வை அரசு முன் வைக்காதவரை இந்த நாட்டில் அமைதியும் நிம்மதியும் ஏற்படப் போவதில்லையயன்பது நிறுத்திட்டமான உண்மை. விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றி என்பது தற்காலிகமான ஒரு விடயம். இனப் பிரச்சினைக்கான தீர்வென்பது விடுதலைப் புலிகளுடன் மட்டும் தொடர்புபட்டதாயின் விடுதலைப் புலிகளை தோற்கடித்ததோடு அந்தப் பிரச்சினை நின்று போய் இருக்கும். (more…)

அனைத்து பீட மாணவர்களும் காலவரையறையின்றி வகுப்புப் புறக்கணிப்பு

கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யும் வரை கால வரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் நேற்றைய தினமும் இன்றும் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களான தர்ஷானந், தர்ஷன், ஜெகத்மேனன், சொலமன் ஆகியோரை விடுதலை செய்யும் வரை அனைத்து பீட மாணவர்களும் கால...

பிரச்சினைகள் தீர்க்கப்படக்கூடாது என்பதில் சில விஷமிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.- டக்ளஸ் கோரிக்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 27ம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள...

படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரிகச் செயல்! -வலம்புரி ஆசிரியர் தலையங்கம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரிகச் செயல்.இத்தகைய செயல்களில் படைத்தரப்பினர் ஈடுபடுவதை அவர்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் அனுமதிக்கலாகாது.ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற, அதனைத் தடை செய்கின்ற அதிகாரம் பொலிஸாருக்கு உண்டென்பதை மறுப்பது எமது நோக்கமல்ல. (more…)

மாணவர் விடுதலையில் சர்வதேச அழுத்தம் தேவை: கஜேந்திரகுமார்

கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை விடயத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் தலையிட வேண்டுமென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்ததுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று தெரிவித்தார். (more…)

மாணவர்களை விடுதலை செய்யாவிடில் பகிஷ்கரிப்பை தொடர தீர்மானம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....

பல்கலை மாணவர் கைது தொடர்பில் ஜேவிபி, முன்னிலை சோஷலிச கட்சியினரிடம் மனோ கணேசன் கோரிக்கை!

பரமலிங்கம் தர்ஷானந், கணேஷமூர்த்தி சுதர்ஷன், கனகசபாபதி ஜெயன், சண்முகம் சொலமன் உள்ளிட்டயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.மாவீரர் தினத்தை கொண்டாடினார்கள் அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள் என்பதே இவர்கள் மீது சுமத்தப்படும் பிரதான குற்றச்சாட்டு ஆகும். இது தொடர்பிலேயே கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் வன்முறை பதட்டநிலை நிலவியது. (more…)

எதிர்க்கட்சிக்கு எதிராக உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ‘றெமீடியஸ்’ -யாழ் மாநகரசபையில் சம்பவம்!

அடுத்தடுத்த ஆண்டில் இந்த விளக்கீட்டுத்தினத்தில் மாவீரர்தினம் அமையாது. வேறு ஒரு தினத்தில் அமையப்போவது நிச்சயம். அந்த நேரத்தில் தனது வீட்டில் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந் நிகழ்வை இதய சுத்தியுடன் அனுஷ்டிப்பார்களா? என யாழ் மாநகரசபை எதிர்க்கட்சித்தலைவர் மு.றெமிடியஸ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட கண்டனப் பிரேரணை மீது எதிர்க்கட்சித்தலைவர்...

தம்பி ‘டீ’ இன்னும் வரல – நையாண்டிப் புலவர்

-நன்றி நியு யப்னா இணையம் - தமிழீழம் எமக்கு வேண்டும். இன்னும் ஆயிரம் சிவகுமார்கள் இந்த பூமியில் எழுவார்கள் என அந்த நேரம் எங்கட அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையக்கரசியார் சொன்னார். கடைசியில் அமிர்தலிங்கம் உசுப்பேற்றி விட்டு அந்த உசுப்பேற்றல் புயலில் சிக்குப்பட்டு மரக்கொப்பில் இருந்து மரம் தறிச்சது போல தான் தோண்டிய குழியில் மூடுப்பட்டு உயிரிழந்தார்....

மாணவர்கள் இருவர் பொலிஸாரால் விசாரணை- பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி தெரிவித்தார்."கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் இருமாணவர்களின் பெயர் விவரங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. (more…)

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியச் செயலாளர் நள்ளிரவில் கைது

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான ப.தர்ஷானந் (வயது24) நேற்று நள்ளிரவு கோப்பாய் பொலிஸாரால் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று அவரது தாயார் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது: "நள்ளிரவு ஒரு மணியளவில் பொலிஸ் சீருடையில் வந்த நால்வர் வீட்டின் கதவைத் தட்டினர். பின்னர் தர்ஷானந்தின் அடையாள அட்டையை வாங்கிப் பரிசீலித்துவிட்டு "வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக...

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அடையாள போராட்டத்தில்

நீங்கள் அடிப்பது ; நாங்கள் ஓடுவது இதுதான் எங்கள் தலைவிதியா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்; மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரியச் செயல். இத்தகைய செயல்களில் படைத்தரப்பினர் ஈடுபடுவதை அவர்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் அனுமதிக்கலாகாது. ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற-அதனைத் தடை செய்கின்ற அதிகாரம் பொலிஸாருக்கு உண்டென்பதை மறுப்பது எமது நோக்கமல்ல. (more…)

பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சுன்னாகம் உப மின் நிலைய நிர்மாணப் பணிகள் துரித கதியில்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 3554 மில்லியன் ரூபா செலவில்அமைக்கப்பட்டு வரும் சுன்னாகம் உப மின் நிலைய நிர்மாணப் பணிகள் துரித கதியில் நடைபெற்றறு வருகின்றது.நாடு பூராகவும் லக்சபானா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் கிளிநொச்சியிலும் சுன்னாகத்திலும் உப மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் பிரகாரம் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட உப மின் நிலையம் தற்போது செயற்பட்டு...

கடந்த காலத்திற்கு செல்ல அரசாங்கம் அழைப்பு விடுக்கின்றதா?: மனோ கணேசன்

வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இலங்கை அரசாங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மூலம் மீண்டும் கடந்த காலத்திற்கு அழைப்பு விடுக்கின்றதா என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.வடக்கில் நடைபெற்றுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், (more…)

யாழ் பல்கலை மனிதவுரிமை மீறல் – (மேலும் செய்திகள்)

யாழ். பல்கலைக்கழகச் சூழலில் நேற்றுக் காலை ( 28.11.2012 ) படையினரும் பொலிஸாரும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களை கலைத்துக் கலைத்து மிலேச்சத்தனமாகத் தாக்கி அட்டகாசம் புரிந்தனர்.இந்த அராஜகத்தால் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts