- Thursday
- August 20th, 2026
இராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோகவனத்தில் அடைக்கப்பட்டாள். அவளைச் சுற்றி அசுரர் கூட்டம். கூடவே வேல், அம்பு, ஈட்டி என்ற ஆயுதங்களையும் அவர்கள் தரித்திருத்தனர். திரிசடை என்பாளைத் தவிர மற்றெல்லோரும் சீதையைப் பயமுறுத்துபவர்களே. (more…)
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற கலவரத்தினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. (more…)
யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலை இராணுவத்தினரே மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளதாக சரவணபவன் எம்.பி தெரிவித்தார். (more…)
தேசிய பிரச்சினைக்கு எதிர்வரும் 2014 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தினால் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (more…)
அரசகரும மொழிக் கொள்கையை உரியமுறையில் கடைப்பிடிக்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அரசகரும மொழிக்கொள்கையை மீறியுள்ள 75 அரச நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஏனைய அரச நிறுவனங்கள் பற்றிய தகவல்களை திரட்டிவருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர் ரணவக்க தெரிவித்துள்ளார். (more…)
யாழ் பல்கலைக்கழகத்தின் இணையத்தின் ஊடான தமிழ் மொழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டக்கற்கை நெறி புதிய பிரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி 28.12.2012 ஆகும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமானது முகாமைத்துவமாணிக் கற்கை நெறியை Bachelor of Business Management (BBM) நடாத்துகின்றது. (more…)
இலங்கையின் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில்...
யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ளக வலைப்பின்னல் ஊடான இணைய இணைப்பில் FaceBook மற்றும் Youtube சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் Youtube மாத்திரம் தடைசெய்யப்பட்டிருந்தது. இருப்பினும் FaceBook இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. (more…)
இலங்கையின் வடக்கே பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு அரசதரப்பு முன்வைத்த ஆட்சேபனையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. (more…)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் இரத்தினசிங்கம் செந்தூரன் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில், உயரம் பாய்தலில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகர், அல்பேர்ட் பார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றுள்ளார். (more…)
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் சேவையில் ஈடுபடும் பெருமளவான தனியார் சொகுசு பஸ்கள் நேற்று சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தனியார் பஸ் சாரதிகள் சிலர் நேற்று அதிகாலை வத்தளைப் பிரதேசத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிசோதகர்களினால் தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், இதனைக் கண்டித்தே சேவை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் யாழ். கொழும்பு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது, (more…)
நெடுந்தீவு குமுதினிப் படகு பணியாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினருடைய மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். இச் சம்வம் நேற்று காலை குறிகாட்டுவான் இறங்கு துறையில் இடம்பெற்றுள்ளது.நெடுந்தீவு 13 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எஸ்.பாலசிங்கம் (வயது 64) என்னும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான குமுதினிப் படகுக் பணியாளரே மேற்படிச் சம்பத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர் ஆவர். (more…)
வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைக்கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதன் அடிப்படையில் 27 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 43க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளா அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். (more…)
இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கணனிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கணனி பயிற்சி வழங்கப்பட வேண்டியது அவசியமானது என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற செயற்பாடுகளை செயற்திறனாக மேற்கொள்ள முடியும். கணனிப் பயிற்சிகளுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். (more…)
2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமாகியது. இதன் போது அடுத்த ஆண்டு நடைமுறைப்டுத்தப்படவுள்ள திட்டங்களை ஜனாதிபதி முன்வைத்தார். (more…)
இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டுபிடிப்பாளர் தேடல் -2012 எனும் கருப்பொருளைக் கொண்ட கண்காட்சியொன்று யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றது. யாழ். மாவட்டத்தில் இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டு பிடிப்பாளர் தேடல் - 2012 எனும் கருப்பொருளிலான கண்காட்சி யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் எலைற்றின் நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவன இயக்குனர்...
”வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் ஆட்சிப்பீடமேறும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் நாட்டில் சட்டங்களை அமுல்படுத்த முடியாத நிலை அரசுக்கு ஏற்படும். இந்த விடயத்தில் அரசுக்கு வடமாகாண சபை சிம்ம சொப்பனமாகத் திகழும். எனவே, வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவே கூடாது.''இவ்வாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...
போதிய தாதிய வளம் இன்றியே யாழ்.போதனா வைத்தியசாலை செயற்பட்டு வருவதாக பணிப்பாளர் டாக்டர் எஸ்.பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.இன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கை மற்றும் சர்வ மதக்குழுவிடமே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 1500 தாதியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது 450 தாதியர்களே பணியாற்றுகின்றனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts






