- Thursday
- August 20th, 2026
செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புவதென்பது பலமுக்கிய அரசாங்கங்களுக்கே பெரும் சவாலாக இருக்கும் நிலையில் இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தச் சாதனையைச் செய்திருப்பது உலகெங்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)
பட்டதாரிப் பயிலுநர்கள் 514பேர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(26.12.2012) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். (more…)
பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டி யது பெற்றோரின் கடமையாகும். அந்தப் பிள்ளைகள் தவறான வழியில் செல்வார்களேயானால் அதற்கான பொறுப்பில் இருந்து பெற்றோர் ஒருபோதும் விடுபட முடியாது. பிள்ளைகள் அவ்வாறு தவறான வழியில் சென்று சமூகவிரோதச் செயல்களில் ஈடு படும்போது சட்டத்தையும் ஒழுங்கையும் பாது காக்கும் அதிகாரிகள், (more…)
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக மாணவிகள் மீதான விசாரணைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். (more…)
பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அது மூடியே இருக்கட்டும் என யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் திரு இராசகுமாரனுக்கு பயங்கரவாத தடுப்புப்பொலிசார் நாளை வவுனியா விசாரணை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது. பல்கலைக்கழகத்தில் கடந்த 27 28 ம் திகதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின் எதிர்வரும் காலங்களில் மாவீரர் தினத்தினை (more…)
கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையிலேயே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது. (more…)
சம உரிமை இயக்கத்தின் போராட்டக்குழுவினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய ஒழுங்குபடுத்தப்பட்ட ஆர்ப்பாட்டமானது 18.12.2012 அன்று கொழும்பில் புறக்கோட்டை புகையிரதத்திற்கு முன்பாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பின்னராக முதன் முதலில் சிங்கள உழைக்கும் வர்க்கத் தோழர்களினால் சிறுபான்மை இனத்தவரின் உரிமைக்கான போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. (more…)
கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினங்கள் தொடர்பான வரவு - செலவுத்திட்டத்தின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரை பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த உரையில் சம்பந்தன் எம்.பி. உண்மையில் என்ன கூறியிருந்தார்..? அவரது முழு உரையின், வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு வருமாறு... (more…)
காரைநகர் கசூரினா கடற்கரையில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் இன்று தெரிவித்தனர்.புன்னாலைக்கட்டுவன் குப்பிளான் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் நிதர்சன் (வயது 21) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (more…)
அவசரகாலச்சட்டம் நாட்டில் இருந்து நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை என்பதற்கு யாழ்ப்பாணத்தில் அண்மை நாள்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் உதாரணங்கள் ஆகும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டால் மாத்திரமே அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் பெறமுடியும்.இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக சட்டவிரிவுரையாளர் கு.குருபரன் தெரிவித்தார். (more…)
இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தான் ஆட்சியைக்குறிவைக்கும் அரசியல் கூட்டமைப்புக்கள் உள்ளன .அவை நிரந்தரமானவையல்ல.தமது நலன்களை அடிப்படையாக வைத்து ஆட்சியில் பங்கெடுக்கவோ அல்லது தமது அரசியல் எதிர்காலத்தை வளப்படுத்தவே முயற்சித்து வருகின்றன. அந்தவகையில் தமிழ் தேசயிக்கூட்டமைப்பும் விதிவிலக்கல்ல. கொள்கைப்பிடிப்புள்ள முற்றிலும் நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் கூடிய கட்சிஅமைப்பு கட்டியமைக்கப்படவேண்டும் என்பதே இன்று பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. (more…)
கேட்டது தனிநாடு. கிடைத்தது தமிழ் நாட்டில் இவர்களுக்கு தனி வீடு.அப்பாவி மக்களுக்கு கிடைத்ததோ சுடு காடு! என கவித்தமிழில் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான...
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணையை விசாரிக்கவென நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழு தலைவர், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்துள்ளனர். (more…)
வடக்கிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ளுமாறு தாம் கோரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் பயங்கரவாத இயக்கம், அந்த இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைளினால் அழிவைத் தேடிக்கொண்டது.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் கவனத்திற் கொள்ளவில்லை. (more…)
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கோரப்பட்ட 9 மாணவர்களை விசாரணைக்கு பயங்கரவாத தடுப்பு பொலிசாரிடம் சற்றுமுன்னர் பெற்றோரால் பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் துறைத்தலைவர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.துணை வேந்தர் விடுமுறையில் உள்ளதால் பதில் துணைவேந்தராக கடமையாற்றுகின்ற பேராசிரியர் சத்தியசீலன் தலைமையிலான குழுவினர் மாணவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.. (more…)
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் மேலும் 10 மாணவர்களை விசாரணைக்கு ஒப்படைக்குமாறு பயங்கரவாத தடுப்பு பொலிசார் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரியவருகின்றது.இவர்களது பெயர்ப்பட்டியலை துணைவேந்தருக்கு அனுப்பியிரு்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச்சந்தியில் உள்ள கிட்டு பூங்காவை நவீனமுறையில் புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்காக முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்தக் கலந்துரையாடல் நேற்றையதினம்(04.12.2012) கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (more…)
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து நேற்றுக்காலை வவுனியா நீதவான் எலக்ஸ் ராஜாவின் பணப்பையினை பிக்பொக்கட் அடித்ததாக கூறப்படும் இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . (more…)
Loading posts...
All posts loaded
No more posts


