- Thursday
- August 20th, 2026
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்காவிட்டால், அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என்று இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.நாளையதினம் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால், குறைந்தது ஒரு வருடத்துக்காவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடவேண்டி வரும் என்று தாம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். (more…)
இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன.இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)
12.5 கிலோகிராம் நிறையுடைய லிற்றோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை 150 ரூபாவினால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இத்தகவலை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. (more…)
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க, இந்த ஆண்டில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்த பாய ராஜபக்ஷ தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரி வித்துள்ளார். (more…)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். (more…)
இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான 22 இணையத்தளங்கள் பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் மூலம் உருக்குலைய செய்யப்பட்டுள்ளன.வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான இணையத்தளங்களே இவ்வாறு உருக்குலைய செய்யப்பட்டள்ளன. (more…)
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் கொடுத்து வந்த வலியுறுத்தல் காரணமாகவே அவரின் கணவரை ஜனாதிபதி தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தார் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். (more…)
ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத் நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை ரத்து செய்யுமாறு கோரி, பிரதம நீதியரசர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். (more…)
சினிமாத்துறையில் எப்போதுமே புதிய முயற்சிகளையும், புதிய விஞ்ஞான வளர்ச்சிகளையும் வரவேற்று ஆதரிப்பவர் கமல்ஹாசன். இவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் விஸ்வரூபம் AURO 3D என்ற புதிய ஒலியமைப்பில் உருவாகிவருகிறது. மேலும் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச் சேவை மூலம் ஒளிபரப்ப முயற்சி நடக்கிறது. படம் வெளியாகும் அதே நாளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளனர். (more…)
இலங்கையின் தலைமை நீதிபதியை குற்றஞ்சாட்டி பதவி நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் தொடர்பில், நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சிலர் நீதிமன்றத்தின் அறிவிப்பை ஏற்று தமது கருத்துக்களை தெரிவிக்கவுள்ளனர். (more…)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தேசிய மாணவர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துண்டுப் பிரசுர விநியோக நடவடிக்கையொன்று கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது. (more…)
அன்புள்ள…..உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது. (more…)
யாழ் பல்கலைச் சூழலில் இருந்து பொலிசார் அகன்றிருப்பதை இன்று காணக்கூடியதாக இருந்தது.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்களைத்தொடரந்து கடந்த ஒருமாத காலமாக தற்காலிக கூடாரம் அமைத்து பல்கலைக்கழக வாயிலில் பிரசன்னமாயிருந்த பொலிசார் இன்று காணப்படவில்லை. கூடாரங்கள் வெறுமையாக காட்சியளிக்கின்றன. (more…)
விடுதலைப்புலிகளின் இரண்டாம் பரம்பரை படையினரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாண படைகளின் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளார்.யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கு இந்தியாவில் போர்ப் பயிற்சி வழங்க தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான தியாகராசா துவாரகேஸ்வரன் (வயது41) மீது நேற்று சனிக்கிழமை நல்லூரில் வைத்து அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது தெரிந்ததே.இந்தத் தாக்குதல் சம்பவம் யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயிலின் முன்பாக நேற்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது. (more…)
தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இறுக்கமான உறவினைப் பேணுவதோடு, தமிழ் மக்களினதும், தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமைக்காக உழைப்பதற்காக உறுதிகொள்வதென்ற தீர்மானத்தினை எடுத்துக் கொள்ளவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி உறுதியளித்துள்ளார். (more…)
:சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய 11வது உலக தமிழ் இணைய மாநாட்டை துணைவேந்தர் ராமநாதன் தொடக்கி வைத்தார்.கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழின் பயன்பாடுகள், உலகில் தமிழும், தொழில் நுட்பமும் பல நாடுகளில் செய்துவரும் ஆராய்ச்சிகள் பயன்முறைகள் பலவற்றை உலக தமிழறிஞர்கள் கலந்தாய்வு செய்யவும், தமிழர்களிடையே பரப்பவும் (more…)
டில்லியில் ஓடும் பஸ்சில் வைத்து ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வந்த 23 வயது மருத்துவ மாணவி சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இன்று அதிகாலையில் உயிரிழிந்துள்ளார்.கடந்த 13 நாட்களாக மரணத்துடன் கடுமையாக போராடி வந்த மேற்படி மாணவி, இன்று அதிகாலை 2.15 மணியளவில்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
