- Sunday
- September 21st, 2025

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறையினை வலியுறுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொது வேலைத்திட்டம் சம்பந்தமாக வெகுஜன அமைப்புகள் மக்கள் பிரதிநிதிகள் பல்கலைக்கழக சமூகம் ,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களிடையேயான கலந்துரையாடல் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் திருநெல்வேலியில் இன்று (2) மாலை இடம்பெற்றது. கலந்துகொண்டவர்களிடமிருந்து பெறப்பட்ட...

பெரும் எதிர்ப்பார்ப்பையும், வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படாவிட்டால், தனக்கு வழங்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதித் தலைவர் என்ற கௌரவப் பதவியை தூக்கி எறியப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற குழுக்களின்...

வடமாகாணக்கல்வி அமைச்சினால் யாழ் இந்து ஆரம்பபாடசாலை அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு அண்மையில் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டிருந்தது எனினும் தற்போது அதிபராக கடமையாற்றும் திரு.நா. மகேந்திரராஜா அண்மைய வருடங்களிலேயே அதிராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் கல்வி அமைச்சினால் அந்நியமனம் தவறானது என கருதி மீளவும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இவ்விளம்பரத்தினை ஆட்சேபித்து இந்து ஆரம்பபாடசாலை...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று (1.09.2015) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கௌரவ. இரா. சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவ சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் தமிழ்த் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் கௌரவ. செல்வம்...

இன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை காலை முன்னெடுத்திருந்தார். வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை...

இலங்கையின் இறுதிப்போரில் அடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. இந்த தொடர்ச்சியான போராட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகைளையும் பொதுஜன அமைப்புக்களையும் மக்களையும் இணந்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நாளை(2) முக்கிய கூட்டம் ஒன்றை அனைத்து தரப்பினருடனும் ஏற்பாடு செய்துள்ளனர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. எமது நிலைப்பாட்டை மீறி இலங்கையில் உள்ளக விசாரணை நடைபெற்றால் புலத்தில் வாழும் எம் சொந்தங்களையும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து சர்வதேச ரீதியில் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கொழும்பில் இன்று கூடிய அந்த அமைப்பைச் சேர்ந்த மூன்று கட்சிகள் தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன என பிபிசி தமிழ் செய்திகள் தெரிவிக்கின்றது . நடந்து முடிந்த பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசிய பட்டியல் இடங்களுக்கான...

ஏ-9 வீதியின் ஓமந்தை சோதனைச் சாவடி நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1997ஆம் ஆண்டு ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து செயற்பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள் பிரதான வீதி வழியாக நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைத்திரி பால சிறிசேன பதவியெற்ற பின்னர் பயணிகள் சோதனை தளர்த்தப்பட்டு...

நடந்து முடிந்த தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசு கட்சியே எதிர்க்கட்சிகளில் இப்போது கூடியளவு ஆசனங்களுள்ள அரசியல் கட்சியாக பாராளுமன்றத்தில் இருக்கின்றது. தேசிய இனப்பிரச்சினைத் தீர்வை எட்ட அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் உண்மையான உறுதி இருந்தால், தமிழ் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரை எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க...

இலங்கையில் போர்க்கால குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு நடக்கக்கூடிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் கூறுகின்றார்.கடந்த கால அனுபவங்களே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் பிபிசி தமிழோசையிடம் அவர் தெரிவித்தார். இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும்...

உள்ளக விசாரணை என்பது ஒரு சிலருக்கு தண்டனை கொடுப்பதுடன் முடிந்து விடும். தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டு வராது. ஆகவே இந்த விசாரணை சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற...

வடக்கு மாகாண சபையின் நிலைப்பாடு சர்வதேச விசாரணையே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யப்பானிய அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் மறிக்கோ யமமோடோ சீ.வீ.கே.சிவஞானம் அவர்களை வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போர்...

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயினும்...

அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசின் முதலாவது மீளக்குடியமர்வு நடவடிக்கையானது இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்ன அடம்பன் கிராமசேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ,தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் ஆதரவினை தெரிவித்துள்ளனர். அதேவேளை ஜேவிபி எதிர்க்கட்சியாகவே செயற்படும் என கூறியுள்ளது.இருப்பினும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு...

இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் கோருகின்றனரே எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில், 'காணியுடன் அதிக மக்கள் திருப்தியடைகிறார்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் தங்களது காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களை மீளக் குடியேற்றுவதே வடக்கு கிழக்கிலுள்ள...

திருத்தப்பட்ட புதிய கட்டமைப்பின் கீழ் நவம்பரில் 335 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிய வருகின்றது அது தொடர்பிலான அறிவித்தல் சனாதிபதியால் வெளியிடப்பட உள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 210 சபைகள் பதவிக்காலம் முடிந்துள்ளன மிகுதி ஒக்டோபர் 31ம்திகதி பதவிக்காலம் பூர்த்திசெய்கின்றன.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தெரிவுக்காக இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒன்று திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு முதல் இரண்டரை வருடம் என்றும் பின்னர் சாவகச்சேரி க.அருந்தவபாலனுக்கு இரண்டரை வருடம் எனவும் , மற்றையது திருகோணமலை திரு. க. துரைரெட்ணசிங்கம் அவர்களுக்கு என்றும் கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து வெளிவந்த இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன ....

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தீர்மானிக்கும் உயர்மட்ட கலந்துரையாடல் தற்பொழுது திருகோணமலையில் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரையான கலந்துரையாடல்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் வேட்பாளரான சாந்தி சிறிஸ்கந்தராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மற்றவரை தேர்வு செய்யும் கலந்துரையாடல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுபெரும்பாலும் கிழக்கு மாகாணத்திற்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கபப்டுகின்றது .

All posts loaded
No more posts