ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்பட்டது!சோதனைகள் முற்றாக நிறுத்தம்

ஏ-9 வீதியின் ஓமந்தை சோதனைச் சாவடி நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1997ஆம் ஆண்டு ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து செயற்பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள் பிரதான வீதி வழியாக நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைத்திரி பால சிறிசேன பதவியெற்ற பின்னர் பயணிகள் சோதனை  தளர்த்தப்பட்டு...

தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத்தலைவரை எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கவேண்டும்! -தமிழரசுக்கட்சி கோரிக்கை!

நடந்து முடிந்த தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசு கட்சியே எதிர்க்கட்சிகளில் இப்போது கூடியளவு ஆசனங்களுள்ள அரசியல் கட்சியாக பாராளுமன்றத்தில் இருக்கின்றது. தேசிய இனப்பிரச்சினைத் தீர்வை எட்ட அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் உண்மையான உறுதி இருந்தால், தமிழ் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரை எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க...
Ad Widget

உள்ளக விசாரணையில் ‘கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை’ – வழக்கறிஞர் கே.எஸ். இரட்ணவேல்

இலங்கையில் போர்க்கால குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு நடக்கக்கூடிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் கூறுகின்றார்.கடந்த கால அனுபவங்களே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் பிபிசி தமிழோசையிடம் அவர் தெரிவித்தார். இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும்...

விசாரணை ஐநா மட்டத்தில் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும்

உள்ளக விசாரணை என்பது ஒரு சிலருக்கு தண்டனை கொடுப்பதுடன் முடிந்து விடும். தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டு வராது. ஆகவே இந்த விசாரணை சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற...

சர்வதேச விசாரணையே வடக்கு மாகாணசபையின் நிலைப்பாடு! – ஜப்பானிய இராஜதந்திரியிடம் சிவிகே

வடக்கு மாகாண சபையின் நிலைப்பாடு சர்வதேச விசாரணையே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யப்பானிய அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் மறிக்கோ யமமோடோ சீ.வீ.கே.சிவஞானம் அவர்களை வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போர்...

கூட்டமைப்பு ”ஈபிஆர்எல்எப்” “புளொட்” அமைப்புக்களை புறக்கணித்தது! நிஸா பிஸ்வால் சந்திப்பில் உறுதியானது!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயினும்...

கூட்டமைப்பிற்கும் உலங்கு வானூர்தி வசதி!டக்ளஸ்சை மிஞ்சிய சம்பந்தன்!

அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசின் முதலாவது மீளக்குடியமர்வு நடவடிக்கையானது இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்ன அடம்பன் கிராமசேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து...

தொண்டமான், டக்ளஸ்,சம்பந்தன் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும்  ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ,தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர்  சம்பந்தன் ஆகியோர் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் ஆதரவினை தெரிவித்துள்ளனர். அதேவேளை ஜேவிபி எதிர்க்கட்சியாகவே செயற்படும் என கூறியுள்ளது.இருப்பினும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு...

காணியுடன் அதிக மக்கள் திருப்தியடைகிறார்கள் என நினைக்கிறேன் : ரணில்

இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தினை  வெளிப்படுத்தியுள்ளார். மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் கோருகின்றனரே எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில், 'காணியுடன் அதிக மக்கள் திருப்தியடைகிறார்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் தங்களது காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களை மீளக் குடியேற்றுவதே வடக்கு கிழக்கிலுள்ள...

திருத்தப்பட்ட புதிய கட்டமைப்பின் கீழ் நவம்பரில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்!

திருத்தப்பட்ட புதிய கட்டமைப்பின் கீழ் நவம்பரில் 335 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிய வருகின்றது அது தொடர்பிலான அறிவித்தல் சனாதிபதியால் வெளியிடப்பட உள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 210 சபைகள் பதவிக்காலம் முடிந்துள்ளன மிகுதி ஒக்டோபர் 31ம்திகதி பதவிக்காலம் பூர்த்திசெய்கின்றன.

கூட்டமைப்பு தேசியப்பட்டியல் இடங்களை பிரிச்சு வழங்க முடிவு! சுரேசுக்கு இல்லை?

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தெரிவுக்காக இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒன்று திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு முதல் இரண்டரை வருடம் என்றும் பின்னர் சாவகச்சேரி க.அருந்தவபாலனுக்கு இரண்டரை வருடம் எனவும் , மற்றையது திருகோணமலை திரு. க. துரைரெட்ணசிங்கம் அவர்களுக்கு என்றும் கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து வெளிவந்த இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன ....

கூட்டமைப்பு தேசியப்பட்டியல் உறுப்பினர்களில் ஒன்று முடிவாகியது மற்றது விவாதத்தில்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தீர்மானிக்கும் உயர்மட்ட கலந்துரையாடல் தற்பொழுது திருகோணமலையில் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரையான கலந்துரையாடல்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் வேட்பாளரான சாந்தி சிறிஸ்கந்தராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மற்றவரை தேர்வு செய்யும் கலந்துரையாடல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுபெரும்பாலும் கிழக்கு மாகாணத்திற்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கபப்டுகின்றது .

எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன்?

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும்  இணைந்து இணக்கப்பாட்டு அரசு ஒன்றினை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது . அதன்போது அமைச்சரவை இருபுறமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.எதிர்க்கட்சிக்குரிய அந்தஸ்தினை 3வது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள...

தேசியப்பட்டியலி்ல் அங்கஜன் பாராளுமன்ற உறுப்பினராகின்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில்  வடமாகாணசபையின் உறுப்பினரும் இந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரான அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினராகின்றார். சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜிதமுனி சொய்சா, எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க...

தமிழ்த்தேசம் என்கின்ற இலட்சியப் பாதையில் இருந்து நாம் விலகப்போவதில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

இன்று புதன்கிழமை(19.8.2015) மதியம் யாழ்.ஊடக மையத்தில் தமிழ் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்   எமது கட்சியின் கொள்கையை ஏற்று வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியினைக் கூறிக்கொள்ளுகின்றோம். எமது கொள்கையினை முன்னெடுத்துச் செல்லும் எமது செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும். கடந்த காலங்களில்...

கூட்டமைப்பு கொள்கை ரீதியில் உடன்பட்டால் இணைந்து செயற்பட தயார் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசியக்கூட்டமைப்பு   தேர்தல் விஞ்ஞாபனத்தினில் தெரிவித்தது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டி தீர்வினை நோக்கி பயணிக்குமானால் அதற்கு ஆதரவளிக்கவும் அவ்விடயத்தினில்  கொள்கை ரீதியில் உடன்பட்டால் இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. தேர்தலில் செயற்பட்ட தமது ஆதரவாளர்கள் மற்றும் வாக்களித்த மக்களிற்கான நன்றி தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று யாழ்.ஊடக...

புதிய அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்குமா?

இலங்கையில் ஐக்கியத் தேசியக் கட்சித் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெற்றிருந்தாலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போதிய இடங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த இடங்களில் ஆட்சி அமைக்க தேவைப்படும் குறைந்தபட்ச எண்ணிக்கை 113. ஆனால் ஐ.தே.க. தலைமையிலான கூட்டணிக்கு 106 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்நிலையில் தமிழ்த் தேசியக்...

பாராளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள்

இலங்கை பாராளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகிவிட்டது இதன்படி  கட்சிகள் பெற்ற ஆசனங்கள் வருமாறு ஐக்கியதேசியக்கட்சி( 45.66 %)  - 106 ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பு (42.38%) - 95 தமிழரசுக்கட்சி (4.62%)- 16 மக்கள் விடுதலை முன்னணி (4.87%) - 6 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(0.40%) -1 ஈழமக்கள் ஜனநாயக கட்சி (0.30%)  - 1

தேசியபட்டியலில் கூட்டமைப்புக்கு 2 இடங்கள் மொத்தம் 16 பராளுமன்ற இடங்கள்.

நடந்து முடிந்த  பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுடன் 16 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது யாழ் மாவட்ட உறுப்பினர்கள் (5) 1. சி.சிறீதரன் (72058) 2. மாவை.சேனாதிராசா (58782) 3. த. சித்தார்த்தன் (53740) 4. எம்.ஏ. சுமந்திரன் (58043) 5. ஈ.சரவணபவான் (43289) வன்னி மாவட்ட உறுப்பினர்கள்(4) 1.சாள்ஸ் நிமலநாதன்...

சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவில் இருந்து 25 அங்கத்தவர்கள் ஜனாதிபதியால் நீக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பையடுத்து தேசியப்பட்டியலுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை கட்சியின் பொதுச்செயலாளர்களே தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கின்ற நிலையில் ஜனாதிபதியின் நடவடிக்கை தமக்கு நெருக்கமானவர்களை தேசியப்பட்டியல் மூலம் நியமிக்க வழிகோலிலுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் மத்திய குழுவிலிருந்து 25 அங்கத்தவர்களை பதவிநீக்கம் செய்துள்ளார். மத்திய குழுவிலிருந்து...
Loading posts...

All posts loaded

No more posts