வடக்கு பட்டதாரிகளும் ஆர்ப்பாட்டம்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம், யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தமக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் உறுதியான பதில் வழங்கும் வரை காலவரைய​ரையின்றி இவர்கள் ஆர்ப்பாட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி என்று காட்டிக்கொள்ளும் அரசே எங்களின் நிலை என்ன?, மைத்திரியின் நல்லாட்சில் பட்டதாரிகளின் அவலம், பட்டதாரிகளின்...

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் தீ விபத்து

கிளிநொச்சி - புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கிடுகினால் வேயப்பட்ட தற்காலிகக் கொட்டகை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. பிரதேச மக்கள் மற்றும் பொலிசார் இணைந்து பிரதேச சபையின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். இருப்பினும், மின்னிணைப்புக்களற்ற வகுப்பறைத் தொகுதி எப்படி எரிந்தது? என்று இன்னமும் அறியப்படவில்லை. எவ்வாறாயினும், கிளிநொச்சியில்...
Ad Widget

சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு! பலி எண்ணிக்கை அதிகரிப்பு

களுத்துறை வடக்கு சிறைச்சாலை பஸ்ஸின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இதற்கமைய இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தால் காயமடைந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தேகநபர் ஒருவரும் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

எங்கே எமது பிள்ளைகள்; தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம்!

வவுனியாவில் காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்து வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கின்றது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் அருகில் காணாமல் ஆக்கப்பட்ட...

நாளை கிளிநொச்சியில் எழுச்சிப் பாடகர் சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வு!

யாழ்ப்பாணத்தில் நேற்று மறைந்த தமிழீழ எழுச்சிப் பாடகர், எஸ்.ஜீ. சாந்தனின் இறுதி வணக்க நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. அவரது இறுதிக் கிரியைகள் நாளை, கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் நாளை (28) முற்பகல் 11.00 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இறுதி வணக்க நிகழ்வில், கலைஞர்கள், கல்விச் சமூகத்தினர், வர்த்தகர்கள்,...

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி :கல்வி அமைச்சு கூடுதல் கவனம்

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது மாணவர்களின் நடத்தை சிறப்பானதாக இருக்க வேண்டும். இதுதொடர்பில் கல்வி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது. மாணவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, அரச சொத்துகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தினால் அத்தகைய விளையாட்டு விழாக்கள் நடத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்று சமிபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பௌத்த மத தலைவர்கள்...

நாட்டரிசி போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படக்காரணம் என்ன?

விவசாயிகள் கூடுதலான வருமானத்தைக் கருத்திற்கொண்டு, கீரி சம்பா போன்ற நெல் வகைகளை கூடுதலாக உற்பத்தி செய்ததனால் நாட்டரிசி போன்ற நெல் வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் நாட்டரிசி போன்ற நெல் வகைக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் குறித்து விபரிக்கையிலேயே நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதி பொது முகாமையாளர் சமன் பாலித பண்டார பிரதிப் பொது முகாமையாளர்...

கடலுக்குச் செல்பவர்களே அவதானம்!

திருகோணமலை – கொழும்பு கடற்பகுதியில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு ஆழ்கடல் பகுதிகளில் மேக மூட்டம் அதிகமாக இருப்பதோடு, காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கல்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ஆக்கிரமிப்புக்கெதிரான குறியீட்டுவடிவமான மாறியுள்ள கேப்பாபிலவு குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தழ ஒருமாதத்தை எட்டியுள்ளது. தமது கொள்கையில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் அந்த மக்கள் சுய எழுச்சியுடன் முன்னெடுத்துள்ள இந்த...

கவுதம் மேனன் அரவிந்த் சாமி புதிய கூட்டணி

கவுதம் மேனன் தற்போது தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் நடுவே விக்ரமை வைத்து ’துருவ நட்சத்திரம்’ என்கிற படத்தையும் இயக்கி வருகிறார். படங்களை இயக்குவதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் கவுதம் மேனன். அந்த வரிசையில், அரவிந்த்சாமி அடுத்ததாக நடிக்கவிருக்கவிருக்கும் ‘நரகாசுரன்’ என்ற படத்தை...

கடத்தல் வழக்கில் கைதான 4 குற்றவாளிகளை ஜெயிலில் அடையாளம் காட்டிய பாவனா

பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி திருச் சூரில் நடந்த படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பும்போது கடத்தப்பட்டார். ஓடும் காருக்குள் பாவனாவை அந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து அதனை செல்போனிலும் பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக பாவனா கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின், பிரபல ரவுடி...

நடிகர் தவக்களை மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தில் தவக்களை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து காமெடி நடிகராக பிரபலமானவர் சிட்டிபாபு என்ற தவக்களை. இவருக்கு வயது 42. இவர் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு பல்கலை மாணவர்களும் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நியாயம் வேண்டி கிளிநொச்சியில் ஏழாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நல்லாட்சியா நாடக ஆட்சியா?, எமது உறவுகள் எங்கே, என்ற பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் கிளிநொச்சி திரேசா ஆலய...

இலங்கையை காப்பாற்றும் நாடுகளின் தூதுவராலயங்களை முற்றுகையிடுவோம்: அனந்தி

ஈழத் தமிழர்கள் நிம்மதியற்று இன்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் காப்பாற்றிவரும் நாடுகளின் தூதுவராலயங்களை எதிர்வரும் கிழமைகளில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளனார். வடக்கு மக்களின் நில மீட்புப் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஆகியவற்றிற்கு ஆதரவாக...

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று! கண்டனப் பேரணி!

யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இவர்கள் மல்லாகம் பழம்பெரும் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலிகாமம் வடக்கில் தமது காணிகளை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், வலிகாகமம் வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணிகள்...

சாந்தன் உயிரிழந்தார்

ஈழத்தின் புகழ்பெற்ற பாடகரான சாந்தன் என அழைக்கப்படும் குணரத்னம் சாந்தலிங்கம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் 2.10க்கு உயிரிழந்துள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், திடீர் சுகவீனம் காரணமாக, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு

நெல்லியடி - புலவரோடை பகுதியில், அதிசக்தி வாய்ந்த 78 ரி.என்.ரி ரக வெடிபொருட்கள், இன்று (26) மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். புலவரோடை பகுதியில், சனிக்கிழமை (25) தென்னைகளுக்கு பசளை இடுவதற்காக நிலத்தை வெட்டிய போது, வெடிபொருட்கள் தென்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விசேட அதிரடிப்படையின் உதவியுடன், நெல்லியடி பொலிஸார், குறித்த வெடிபொருட்களை இன்று மீட்டுள்ளனர்....

யாழ் பல்கலையின் அடுத்த துணை வேந்தர் யார்?

யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவிற்கான தேர்தலில் விஞ்ஞானபீட பீடாதிபதி சிறிசற்குணராஜா 18 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் தெரிவாகியுள்ளார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அப் பல்கலைக்கழக முகாமைத்துவம் மற்றும் வணிகபீட பீடாதிபதி வேல்நம்பி, விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் சிறிசற்குணராஜா, பேராசிரியர் மிகுந்தன், பேராசிரியர் விக்னேஸ்வரன் மற்றும் பேராசிரியர்...

கர்ப்பிணிகளே அவதானம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இம் மாதம் 10ம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என, மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் மாவட்ட மருத்துவ துறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 காலப் பகுதியில் பத்து கர்ப்பிணிப் பெண்கள்...
Loading posts...

All posts loaded

No more posts