யாழ் பல்கலையின் அடுத்த துணை வேந்தர் யார்?

யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவிற்கான தேர்தலில் விஞ்ஞானபீட பீடாதிபதி சிறிசற்குணராஜா 18 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் தெரிவாகியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அப் பல்கலைக்கழக முகாமைத்துவம் மற்றும் வணிகபீட பீடாதிபதி வேல்நம்பி, விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் சிறிசற்குணராஜா, பேராசிரியர் மிகுந்தன், பேராசிரியர் விக்னேஸ்வரன் மற்றும் பேராசிரியர் வைத்திய கலாநிதி ரவிராஜ் உள்ளிட்டவர்கள் போட்டியிட்டார்கள்.

குறித்த ஐவரில் பேராசிரியர் சிறிசற்குணராஜா 18 வாக்குகளையும், விக்னேஸ்வரன் 12 வாக்குகளையும், வேல்நம்பி, மிகுந்தன் 9 மற்றும் ரவிராஜ் ஆகியோர் தலா 09 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இந்தநிலையில் சம வாக்குகளைப் பெற்ற மூன்று பேராசிரியர்களுக்கும் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் பேராசிரியர் வேல்நம்பி 14 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதற்கமைய முதல் மூன்று அதி கூடிய வாக்குகளைப் பெற்றவர்களின் பெயர்கள் செனட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, செனட் சபையின் ஊடாக, மூவரின் பெயர்களும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவர்களில் ஜனாதிபதி தெரிவு செய்யும் நபரே யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts