காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு பல்கலை மாணவர்களும் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நியாயம் வேண்டி கிளிநொச்சியில் ஏழாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நல்லாட்சியா நாடக ஆட்சியா?, எமது உறவுகள் எங்கே, என்ற பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் கிளிநொச்சி திரேசா ஆலய முன்றலில் இருந்து பேரணியை ஆரம்பித்தனர்.

குறித்த பேரணியானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கந்தசுவாமி ஆலயம் வரை சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தமது ஆதரவை வௌிப்படுத்தினர்.

Related Posts