Ad Widget

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி :கல்வி அமைச்சு கூடுதல் கவனம்

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது மாணவர்களின் நடத்தை சிறப்பானதாக இருக்க வேண்டும். இதுதொடர்பில் கல்வி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது.

மாணவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, அரச சொத்துகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தினால் அத்தகைய விளையாட்டு விழாக்கள் நடத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்று சமிபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பௌத்த மத தலைவர்கள் யோசனை முன்வைத்தனர்.

மாணவர்கள் ஒழுக்க விழுமியத்தை பேணி பாடசாலை கல்வியையும் அது சார்ந்த விடயங்களையும் சிறந்த முறையில் கடைபிடிக்கப்படுவதன் அவசியத்தை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதுவிடயம் தொடர்பாக தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சின் தேசிய பாடசாலை விவகார பணிப்பாளர் பி.எம்.ஜலபெரும தெரிவித்தார்.

பாடசாலை வளாகத்திற்குள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் முழுமையான பொறுப்பை கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த விடயங்களுக்கு அப்பாலுள்ள சம்பவங்கள் குறித்து பொலிஸார் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வர் என்றும் தேசிய பாடசாலை விவகார பணிப்பாளர் பி.எம்.ஜலபெரும சுட்டிக்காட்டினார்.

Related Posts