அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு

நெல்லியடி – புலவரோடை பகுதியில், அதிசக்தி வாய்ந்த 78 ரி.என்.ரி ரக வெடிபொருட்கள், இன்று (26) மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

புலவரோடை பகுதியில், சனிக்கிழமை (25) தென்னைகளுக்கு பசளை இடுவதற்காக நிலத்தை வெட்டிய போது, வெடிபொருட்கள் தென்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விசேட அதிரடிப்படையின் உதவியுடன், நெல்லியடி பொலிஸார், குறித்த வெடிபொருட்களை இன்று மீட்டுள்ளனர்.

இப்பகுதியில் கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வெடிபொருட்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts