காணிகள் விடுவிக்கப்படாது விட்டால் மக்கள் தொடர் போராட்டங்களுக்கு தள்ளப்படுவார்கள்: சுரேஷ்

இராணுவ வசம் உள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படாது விட்டால் வேறு வழி இன்றி மக்கள் தொடர் போராட்டங்களுக்கு தள்ளப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கோப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நேற்றய தினம் மாலை 4.30 மணியளவில் கோண்டாவில் சேவலங்கா நிறுவன...

மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்ய விசேட சுற்றுநிருபம்

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யும் வகையில் கல்வி அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக வெளிநபர்களும் குழுக்களும் அனுமதியின்றி பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை முன்னெடுப்பதற்கு சில குழுக்களும் நபர்களும் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கை...
Ad Widget

இலங்கை அணியின் முகாமையாளராக அசங்க குருசிங்க நியமனம்

இலங்கை கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கட் வீரர் அசங்க குருசிங்க இலங்கை அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் போது அவர் பங்கெடுத்திருந்தார். தற்போது அவர் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிராந்திய அணிகள்...

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஹர்த்தால்

கேப்பாபிலவு மக்களின் காணி உட்பட சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 08 ஆம் திகதி வடகிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் மக்கள் பேரவையினர் தீர்மானித்துள்ளனர். கேப்பாபிலவு தொடர்பாக கலந்துரையாடல், யாழ். கோண்டாவில் சேவாலங்கா மண்டபத்தில்,தமிழ் மக்கள் பேரவையினர் மற்றும் பொது அமைப்புக்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலின் போது, வடகிழக்கு...

பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது

மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட செந்தூரன், தனு போன்றவர்கள் மீண்டும் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தில் பரவலாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் தொடர்புபட்டிருந்த றொக்ஸ் ரீம் அங்கத்தவர்கள் யாழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 8 பேர் யாழ் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த 8...

மக்களின் கண்ணீர் வெள்ளத்துடன் இடம்பெற்ற புரட்சிப் பாடகர் சாந்தனின் இறுதிக்கிரியை

மறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகர் சாந்தனின் இறுதி நிகழ்வில் பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கிளிநொச்சி இரணைமடு பொது மயானத்தில் அக்கினியுடன் சங்கமமானது. ஈழத்து எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி சாந்தன் குணரட்னம் சாந்தலிங்கம் இறுதி நிகழ்வு இன்று அவரது கிளிநொச்சி விவேகானந்தநகர் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில் பொது...

SAITM துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான உண்மை வெளியானது!

மாலபே SAITM தனியார் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பொலிஸார் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. SAITM தனியார் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக போலியாக காட்டுவதற்கே மேற்படி துப்பாக்கி சூட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்...

பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்: இலங்கை அரசு உறுதி

மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் உறுதியாகவிருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 34வது அமர்வில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கருத்து கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “1948ம் ஆண்டு சுதந்திரத்தினைப் பெறுவதற்கு நாம் ஜாதி, மத, இன பேதங்களின்றி...

சிறைச்சாலை பேருந்துத் தாக்குதல், தமிழ் இளைஞர் ஒருவர் பலி!

கழுத்துறைப் பிரதேசத்தில் நேற்றைய தினம் சிறைச்சாலை பேருந்து மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரும் பலியாகியுள்ளார். குறித்த தாக்குதலில் கழுத்துறைச் சிறைச்சாலையில் பணிபுரிந்து வந்த மட்டக்களப்பு காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தரான 24 வயதுடைய தர்மீகன் சிவானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, குறித்த சம்பவத்தில் மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தரான தர்மரத்ன...

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு எடுத்துரைத்துள்ளார். மேலும், தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள 23 முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடிய...

மார்ச்சில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்?

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில், நாட்டின் பல பாகங்களிலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என, வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக நாளை முதல் 04ஆம் திகதி வரை நாட்டில், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக, வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும், பிற்பகல் 5.30 மணிக்குப் பின்னர், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை...

பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை கையளிப்பு

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு காணிகள் நாளை காலை 11.00 மணிக்கு கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணயிளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது, சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக நீடித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 20 நாட்களுக்கு மேலாக தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு ​கோரி...

யாழ் வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்கள் அடையாள வேலைநிறுத்தம்

யாழ் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் இன்று ஒருமணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 வருடமாக உள்ள பதவி உயர்வை 6 வருடமாக மாற்றுதல், தாதி பட்டதாரிகளுக்கு சுகாதார அமைச்சின் நிர்வாக பதவிகளை வழங்குதல், அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நண்பகல் 12 மணி தொடக்கம்...

கணிஷ்ட பிரிவு மாணவர்கள் துஷ்பிரயோகம்: சிரேஷ்ட மாணவர்கள் மூவர் கைது

கண்டி - குண்டசாலை பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் அதே பாடசாலையில் 11, 12 மற்றும் 13ம் தரத்தில் கல்வி பயில்பவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 24ம் திகதி குறித்த மூன்று மாணவர்களும், குண்டசாலை பகுதியிலுள்ள பாடசாலையில் வைத்து கணிஷ்ட பிரிவு மாணவர்கள்...

குடாநாட்டில் நோய் தொற்று அதிகரிப்பு !

யாழ் மாவட்டத்தில் திடீரென நோய் தொற்றுக்கள் பரவிவருவதாகவும் இதன் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதுடன் நோயாளிகளுக்கான எதுவித வசதியும் செய்து கொண்டுக்கபட வில்லை எனவும் நோயாளிகள் நோயாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர் மேலும், நோயாளி விடுதிகளில் கட்டில் வசதிகள் போதுமான அளவு காணப்படாமையினால் நோயாளிகள் நிலத்தில் தங்கி தங்களது சிகிச்சைகளை பெற...

கர்ப்பிணிப் பெண் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி...

கடுமையான நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்: சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடும் நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் செனட் பிரதிநிதிகள் குழுவை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோது இவ்விடயத்தைத்...

யாழில் வீதியில் மீண்டும் குழுக்கள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியிலுள்ள சுகாதார நிலையம் ஒன்றுக்கு அருகில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல் இடம்பெற்றதால் குறித்த பகுதியில் பதற்ற நிலை நிலவியது. குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் யாழ் குற்றத்தடுப்பு காவல் துறை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தின் போது அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டியொன்று சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அந்த...

சுமந்திரன் மீதான கொலை முயற்சி: சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரின் விளக்கமறியலையும், எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிக்க, கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று உத்தரவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டு, ஐவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
Loading posts...

All posts loaded

No more posts