- Tuesday
- June 16th, 2026
மாலபே தனியார் வைத்திய கல்வி நிறுவனத்தினை அரசுடைமையாக்குமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தி, வடமாகாண வைத்தியர்கள், 1 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். எனினும், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறுகின்றன.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல குணரத்னவிற்கு இலங்கை இராணுவத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன இந்த பதவியுயர்வு குறித்து தெரிவித்தார். சீக்குகே பிரசன்ன இராணுவத்தின் வொரன்ட் அதிகாரி தரம் ஒன்றிலும்...
இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 16 ஆயிரத்து 500 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 பேர் மரணத்தை தழுவியுள்ளார்கள். இதே வேளை டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சோதனையிடுவதற்காக சுகாதார அமைச்சு 500 உதவியாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களுக்குரிய நியமனக் கடிதங்களை அமைச்சர் டொக்டர்...
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், யாழில் மாபெரும் பேரணி நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் இப்பேரணி ஆரம்பமானது. குறித்த பேரணியை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பங்குபற்றி ஆரம்பித்து வைத்தார். குறித்த பேரணி யாழ்....
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக காரில் நடமாடும் நூதனத் திருடர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து பணத்தை அபகரிப்பதாக வர்த்தகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக விலை உயர்ந்த காரில் நடமாடும் இரு...
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான வாய் பேச முடியாத சிறுவனுக்கு மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஏழு மாத கர்ப்பிணியான 27 வயதையுடைய ஞானசேகரன் ஹம்சிகா எனும் பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான 12...
வலி. விடக்கு அச்சுவேலியினூடாக தெல்லிப்பளைக்குச் செல்லும் பிரதான வீதியான வயாவிளான் – தோலகட்டி வீதியை விடுவிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வயாவிளான் – தோலகட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள இராணுவத்தின் காவலரணை அகற்றி, வீதியை திறந்துவிட வேண்டும் எனக் கோரியே இன்று காலை பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 4 ஆம்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் சென்ற மக்களுடன் ராணுவம் முரண்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 84 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இன்றைய தினம் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், பெரும்பாலான மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்...
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 54 ஏக்கர் காணிகளில், 42 ஏக்கர் காணிகள், இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், 42 ஏக்கர் காணியும் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...
கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர் விமானப்படையினர் வசமிருந்த பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் இன்று முற்பகல் திறந்துவிடப்பட்டதை அடுத்து, சொந்த காணிகளுக்குள் மக்கள்...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்று கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்வரும் 8ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி பன்னீர்செல்வம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென யாழ். அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று முதல், ஒருவார காலத்திற்கு மகளிர் தின வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்ற...
பொறுப்புக்கூறல், மனித உரிமை, பாதுகாப்பு மற்றும் மீள்கட்டமைப்பு விடயங்களில் இலங்கை உரியவகையில் செயற்படவில்லை என பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ்...
மாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக வடமாகாண வைத்தியர்கள் எதிர்வரும் 2 ம் திகதி வியாழக்கிழமை வடமாகாணத்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும் எனவும் அரச மருத்துவ...
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஏழு மாத கர்ப்பிணி பெண் மீதான படுகொலை வழக்கு விசாரணையில் உண்மையான குற்றவாளி இவரே என ஒருவரை குறித்து அவர் தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் ஊடகவியலாளர்கள் சிலருக்கு இனந்தெரியாத ஒருவரால் அனுப்பப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம்...
சில பொலிஸ் அதிகாரிகளின் கவனயீனக்குறைவினால், முழு பொலிஸ் சேவைக்கும் அவப்பெயர் உண்டாகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொரளையிலிருந்து தனது முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது குறித்த சாரதி வீதி விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 30 ஆம் திகதி ஆஜராகுமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவு பத்திரம்...
வட மகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் முழுமையான விபரங்களை அறிந்துகொள்வதற்காக அவர்களை இன்று புதன் கிழமை முதல் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அழைப்பினை வடக்கு மாகாண சபையின உறுப்பினர் கனகரட்னம் விந்தன் விடுத்துள்ளார். யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக காலவறையறையற்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டும் வரும் வேலையற்ற பட்டதாரிகளை நேற்று செவ்வாய்கிழமை...
சைட்டம் நிறுவனம் மற்றும் நெவில் பிரணாந்து வைத்தியசாலை என்பவற்றின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்த சமீர சேனாரத்னவை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளதாக சைட்டம் அறிவித்துள்ளது. சமீர சேனாரத்னவின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டும், அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு வசதியாகவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சைட்டம் முகாமைத்துவக் குழு...
முன்னாள் புலி உறுப்பினர்கள் தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள்புலி உறுப்பினர்கள் சிலர் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அண்மையில் இவ்வாறு முயற்சி மேற்கொண்ட புலி...
தன்னைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பவேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் கடுமையான சுகவீனமடைந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியமை தொடர்பாக தனது ஊடக இணைப்பாளர் ஊடாக குரல் பதிவொன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் இரத்த குழாய்களில் உள்ள அடைப்புக்கள் தொடர்பாக வைத்தியர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
