விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் யாழ். வைத்தியசாலையில் உயிரிழப்பு

30கிலோகிராம் கஞ்சா கடத்தியக் குற்றச்சாட்டில், கடந்த 18மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். தொண்டமனாறு வல்வெட்டித்துறை பகுதியினைச் சேர்ந்த 61 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு 30கிலோகிராம் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் மேற்படி நபர், சாவகச்சேரி...

சிறைச்சாலையில் திருநங்கைகள் இருவர் அடித்துக் கொலை!

பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் இருவர், சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் கண்முன்னே சாக்கில் கட்டிவைத்து தடிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வது சவுதி அரேபியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர், சவுதி அரேபிய தலைநகரான ரியாதுக்குச் சென்றுள்ளனர். அங்கே பொது இடங்களில்...
Ad Widget

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு ; ஒருவர் வைத்தியசாலையில்

இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எந்தவொரு அதிகாரிகளும் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடாத நிலையில் ஈழதமிழர்கள் நான்காவது நாளாகவும் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில்...

அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு மற்றும் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களை கைதுசெய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து ​இரண்டு றோலர் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறினர்.

நூதனத்திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

வேலணை பகுதியில் உள்ள கடைக்குச் சென்று, ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து அலைபேசி மீள் நிரப்பு அட்டையினை வாங்கிவிட்டு, இரண்டாயிரம் ரூபாய் கொடுத்ததாகக்கூறி மிகுதி பணத்தினை தருமாறு வர்த்தகரை அச்சுறுத்திய இருவர், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வேலணை பகுதியில் உள்ள கடைக்கு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஆயிரம்...

கட்டுப்பாட்டு விலைக்கும் குறைவாக அரிசியை பெற்றுக் கொள்ளலாம்!

அரிசிக்கு நியமிக்கப்பட்ட உயர்ந்தபட்ட சில்லறை விலைக்கும் மூன்று ரூபா குறைவாக சதோசவில் அரிசி விற்கப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகள் சதோச களஞ்சியசாலைகளில் தேவையான அளவு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி நகர மற்றும் சன நெரிசலுள்ள பகுதிகளில் அரிசி விற்பனை செய்ய நடவடிக்கை...

15 பல்கலை மாணவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி நீதவான் முன்னிலையில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி குறித்த 15 மாணவர்களும் பேராதனை பொலிஸாரால் கைதுசெய்யபட்டனர். பின்னர் அவர்களை இன்று வரை (2ம் திகதி) விளக்கமறியலில்...

உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் நெருங்கியத் தொடர்பு : எச்சரிக்கும் ஆராய்ச்சியாளார்கள்

உடல் பருமன் மற்றும் புற்றுநோய்க்கு இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை பிரிட்டன் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உடல் பருமனாக இருப்பதால் வயிறு, குடல், கல்லீரல், மார்பகம் மற்றும் கர்பப்பை உள்பட பல உறுப்புகளில் பதினோரு வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து காணப்படுவதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆரோக்கியமான எடையை கடைபிடிப்பதன் மூலம் ஒருவர் புற்றுநோய்...

குழந்தைகள் மீதான வன்கொடுமை : வத்திகானின் செயல்பாடு வெட்கக்கேடானது

வத்திகானில் குழந்தைகள் மீதான வன்கொடுமையை கண்காணிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். ஆணையத்தின் உறுப்பினரும், முன்பு, மதகுரு ஒருவரின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருமான மேரி காலின்ஸ் என்பவர், வத்திகானின் அதிகாரத்துவம் ஆணையத்தின் பணிகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். வத்திகானின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று அவர் வர்ணித்துள்ளார். வன்கொடுமைகளை சமாளிக்க கத்தோலிக்க...

தமிழ்நாட்டில் பெப்ஸி, கோக் விற்பனை நிறுத்தம்

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களான பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இந்த விற்பனை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, பல வாரங்களுக்கு முன்பிருந்தே, இந்த விற்பனை நிறுத்தம் தொடர்பாக, தனது சங்க உறுப்பினர்களுக்கு...

செயிட் அல் ஹூஸைனுடன் மங்கள சமரவீர பேச்சுவார்ததை

ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூஸைனுடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பேச்சுவார்ததை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தொடர் கடந்த 27ஆம் திகதி...

அனைத்து நீதிமன்றங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு

நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் கொழும்பு கல்கிசை நீதிமன்றில் இருந்து சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி இரண்டும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக, சுமார் மூன்று மணிநேரம்...

விஜய்யுடன் மோதுகிறார் எஸ்.ஜே.சூர்யா

இசை படத்தின் தோல்வி காரணமாக இப்போதைக்கு படம் இயக்கப்போவதில்லை என்ற முடிவில் இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதேசமயம், தற்போது நடிப்பில் முழுக்கவனத்தை செலுத்தி வரும் அவர், இறைவி படத்தை அடுத்து செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அதையடுத்து மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சம்பவாமி யுகே யுகே படத்தில் வில்லனாக நடித்து வருபவர்,...

தனுசுக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் புதிய மனு

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில்...

நானும் பாலியல் கொடுமைக்கு ஆளானேன்: காதல் சந்தியா

கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி அவர் துணிச்சலாக புகார் கொடுத்ததை தொடர்ந்து இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதைப்போல பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு...

சிறைச்சாலைகளை மூடி பாடசாலைகளைத் திறக்க வேண்டும்

சிறைச்சாலைகளை மூடிவிட்டு பாடசாலைகளைத் திறக்கும் ஒரு நாடு உருவாகவேண்டுமென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் வைத்தியசாலைகள் குறைந்து சுகதேகியான மக்கள் அதிகமாக வாழும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமெனவும், கேகாலை புனித மரியாள் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உலகில் மனித சமூகத்தின் பயணத்திற்குத் தடையாகவுள்ள முக்கிய அம்சம் நல்ல...

வடக்கில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது

பட்டப்படிப்பை நிறைவு செய்த தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று நான்காவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு பேராட்டம் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள்...

எழிலன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆகசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 30 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை முல்லைத்தீவு...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த வாள்வெட்டுக் கும்பல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளால் பல்கலைக்கழக மாணவர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைகழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களில் ஒருவர் தனக்கு தெரிந்த பல்கலைகழகம் சாராத வேறு சிலரை தமக்கு சார்பாக அழைத்துவந்துள்ளார். இதன்படி நேற்றையதினம் மாலை குறித்த பல்கலைகழக மாணவன் மது...

சிறீலங்காவின் 45 ஆவது பிரதம நீதியரசராக பிரசாத் டெப் பதவிப் பிரமாணம்!

சிறீலங்காவின் 45ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாத் டெப் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசரான கே.ஸ்ரீபவன் ஓய்வுபெற்றதையடுத்து, அரசியலமைப்பு சபையால் ஏகமனதான பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டார். புதிய பிரதம நீதியரசருக்கு ஜனாததிபதி மைத்திரிபால சிறிசேன...
Loading posts...

All posts loaded

No more posts