Ad Widget

செயிட் அல் ஹூஸைனுடன் மங்கள சமரவீர பேச்சுவார்ததை

ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூஸைனுடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பேச்சுவார்ததை நடத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தொடர் கடந்த 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டபோது உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹூஸைன், இலங்கை தொடர்பாக எந்தக் கருத்துக்களையும் பிரஸ்தாபிக்க வில்லை.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான விரிவான அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Related Posts