வடக்கு பட்டதாரிகளும் ஆர்ப்பாட்டம்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம், யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

தமக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் உறுதியான பதில் வழங்கும் வரை காலவரைய​ரையின்றி இவர்கள் ஆர்ப்பாட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி என்று காட்டிக்கொள்ளும் அரசே எங்களின் நிலை என்ன?, மைத்திரியின் நல்லாட்சில் பட்டதாரிகளின் அவலம், பட்டதாரிகளின் எதிர்காலத்தை வீணடிக்காதே, பட்டதாரிகளை இனியும் ஏமாற்றாதே என்ற பதாகைகளை இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேலையற்ற பட்டதாரிகள் கடந்த ஏழு நாட்களாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts