- Monday
- June 15th, 2026
இலங்கையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்துறையில் 2 இலட்சத்து 60ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாகி வருவதாக யாழ் கிறீன் கிறாஸ் ஹொட்டேலின் முகாமையாளரும், விருந்தோம்பல் முகாமைத்துவத்துறை விரிவுரையாளருமான கார்த்திகன் தெரிவித்தார். சிகரம் அக்கடமி விருந்தோம்பல் முகாமைத்துவப் பிரிவி்ன் ஏற்பாட்டில் யாழ் ஞானம்ஸ் ஹொட்டேலில் கடந்த மார்ச் 31ம் திகதி நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவலை...
வடக்கு மாகாணசபையில் கடந்த வியாழக்கிழமை பெரும் குழப்பம் ஏற்பட்டது. அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்கள் திடீர் என ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் அவர்கள் அவையைக் கொண்டு நடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த கமலேஸ்வரன் இதனையடுத்து வடக்கு மாகாணசபை...
நடிகர் அரவிந்த்சாமி தன் மீது கோபமாக இருப்பதாக இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். மணிரத்னத்தின் தளபதி படம் மூலம் நடிகர் ஆனவர் அரவிந்த்சாமி. மணிரத்னத்தின் ரோஜா படம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. சில காலம் சினிமாவில் இருந்து தள்ளி இருந்த அரவிந்த் சாமி மணிரத்னத்தின் கடல் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். மோகன்...
தெறி படத்தை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் விஜய்-61. விஜய் உடன் சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்கள் தவிர எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி தயாரிக்கிறார். இப்படத்தின்...
நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான நம்ம அணியினர் அபார வெற்றி பெற்றனர். குறிப்பாக அந்த அணி சார்பில் போட்டியிட்ட தலைவர் விஷால் 476 வாக்குகள் பெற்று, 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபது 20 போட்டித் தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை பங்களாதேஷ் அணி சமநிலைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது 20 போட்டித் தொடர் இலங்கை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இந்தியாவில்...
ஹெரோயின் என சந்தேகிக்கத் தக்கதான பெருந்தொகைப் போதைப் பொருட்களுடன் வடக்கு கடற்பகுதியில் ஆறு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் நிறை 13.5 கிலோ கிராம் எனவும் இதன் பெறுமதி 13 கோடி ரூபா எனவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அடுத்த கட்ட விசாரணைக்காக...
உத்தேச இலத்திரனியல் ஆள்அடையாள அட்டை விநியோகிக்கப்படும் வரையில் அடுத்த மே மாதம் முதல் ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1972 ஆம் ஆண்டு முதல் விநியோகிக்கப்பட்டு வரும் பழைய “லெமினேடின்” அடையாள அட்டை இந்த ஸ்மார்ட் அட்டையுடன் செல்லுபடியற்றதாக மாறுவதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்....
வடக்கு மாகாணத்திலுள்ள விசேட தேவையுடையோருக்கான புனர்வாழ்வு செயல் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தின இணக்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இரத்த வங்கி திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கி சுகாதார அமைச்சர் டாக்டர்...
இலங்கையர் உட்பட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் மத்திய தரைக்கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் லிபியாவின் சப்பிரதா நகரில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 480 சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற இரு படகுகளே ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்டதாகவும், அவர்களுள் சிறுவயது குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது....
திருமண வீட்டில் இரவு வேளை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 37 பவுண் தங்க நகைகள் மற்றும் 2 இலட்ச ரூபாய் ரொக்க பணமும் களவாடி சென்றுள்ளனர்.. யாழ். புன்னாலைக் கட்டுவான் வடக்கில் வசிக்கும் ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை குறித்த வீட்டில்...
வட மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரதும் வரவைப் பதிவு செய்வதற்குப் பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பத்தில் இருந்து நேரக்கணிப்பு இயந்திரத்தை கட்டாயம் பயன்படுத்துமாறு, வடமாகான கல்விப் பண்பாட்டலுவல்கள். விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளாளர் இ.இரவீந்திரன் அறிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதில் கூறுவதற்கு, ஒருமாத கால அவகாசம் தனக்கு தருமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் கோரிக்கை விடுத்தார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், 38ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புபோராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் வடக்குக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள, சுகாதார அமைச்சர்...
உள்ளூர்ச் சந்தையில் தேங்காயின் விலை, என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் தேங்காய் ஒன்றின் விலை, 90 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. எனினும், ஹெக்டர்கொப்பேகடுவ விவசாயம் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் விடுத்துள்ள புள்ளிவிவரத்தின் பிரகாரம், பெரிய தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. சிறிய தேங்காய் ஒன்றின்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இருவரை, எரித்துப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. புலி உறுப்பினர்கள் இருவரும், 1997ஆம் ஆண்டே எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனர். திருகோணமலையில் நடைபெறும் யொவுன்புர நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த போதே ஆலய வழிப்பாட்டில் கலந்துகொண்டனர். அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும் பங்கேற்றிருந்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர்...
தமிழகத்தில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த இலங்கை அகதியின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. ஹெலி காப்டர் மூலம் அவரது இதயத்தை சென்னை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கிருபாகரன்(22). டிப்ளமோ படித்துள்ள அவர், புதுச்சேரியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை...
வட மாகாண முதலமைசரால் நேற்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன. வட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அதே போல தங்களுடைய காணிகளை விடுவிப்பது பற்றி இடம்பெயர்ந்து வாழ்வோர் என்னுடன் தொடர்புகொண்டார்கள். மேலும் வேலையற்ற பட்டதாரிகளும்...
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகள் ஸ்ரீலங்காவிலும் பிரவேசிக்கும் அபாயம் காணப்படுவதாக அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்கு நாடுகள் மீது தாக்குதலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா போன்ற அமைதி நிலைவும் நாடுகளில் பிரவேசித்து திட்டங்களைத் தீட்டும் முயற்சியில்...
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு வகுப்புத் தடையை எதிர்க்கொண்டிருந்த மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததையடுத்து, நிர்வாக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மாணவர்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்தே இம் மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும்...
Loading posts...
All posts loaded
No more posts
