Ad Widget

மே முதல் “ஸ்மார்ட்” ஆள் அடையாள அட்டை

உத்தேச இலத்திரனியல் ஆள்அடையாள அட்டை விநியோகிக்கப்படும் வரையில் அடுத்த மே மாதம் முதல் ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1972 ஆம் ஆண்டு முதல் விநியோகிக்கப்பட்டு வரும் பழைய “லெமினேடின்” அடையாள அட்டை இந்த ஸ்மார்ட் அட்டையுடன் செல்லுபடியற்றதாக மாறுவதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

15 வயதை நிறைவு செய்த இளைஞர், யுவதிகள் என்போருக்காவும் மாற்றம் செய்தல், காணாமல் போதல் காரணங்களுக்காக அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும் இந்த ஸ்மார்ட் அடையாள அட்டை புதிதாக விநியோகிக்கப்படும் எனவும் குணதிலக்க கூறியுள்ளார்.

பழைய முறைமையின் கீழ் கடந்த 45 வருடங்களாக முன்னெடுத்து வரும் நடைமுறையிலுள்ள அடையாள அட்டையில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமாகவுள்ளதாகவும், அந்த பழைய முறைமை சமகாலத்துக்கு பொருத்தமற்றது எனவும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.

Related Posts