- Monday
- June 15th, 2026
வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, அஜித்தை வைத்து மூன்றாவது முறையாக இயக்கும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அஜித்தின் சிக்ஸ் பேக்கை பார்த்து அவருடைய ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து விவேகம் படத்தில் அஜித்தின் கெட்டப்பை வெளிப்படுத்துவது போல் புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் விவேகம் படம் பற்றி தொடர்ந்து...
போகன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. தற்போது இவர், டிக் டிக் டிக் மற்றும் வனமகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வனமகன் படத்தில், சாயீஷா சைகல் என்பவர் நடிக்கிறார். இவர், ஏற்கனவே, தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள்,...
நடிகர் கமலின் சகோதரர் சந்திரஹாசன் சமீபத்தில் லண்டனில் காலமானார். அவருக்கு இரங்கல் கூட்டம் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது ரஜினி பேசும்போது, கமலை பெற்ற சீனிவாசன், அவரை வளர்த்த சாருஹாசன், அவரை ஆளாக்கிய சந்திஹாசன் என கமலுக்கு மூன்று தந்தைகள். நான் சந்திரஹாசனை இரண்டொரு முறைதான் சந்தித்திருக்கிறேன். ஆனாலும், அவரைப் பற்றி நிறைய...
சுகாதார பிரச்சினை காரணமாக கட்டார் மக்களை இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என கட்டார் வெளிநாட்டு தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர்கள் தங்கள் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கையில் புகழ்மிக்க சுற்றுலா தளங்களாக கண்டி உட்பட மலையகத்தில் வேகமாக பரவும் H1N1 தொற்று காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ்...
எமது நாட்டில் காணப்படும் பாதுகாப்பற்ற நிலையை கருத்திற்கொண்டு, அவுஸ்ரேலியாவிடம் புகலிடம் கோரும் வட. மாகாண மக்களை மனிதாபிமானத்துடன் அணுகுமாறு அவுஸ்ரேலிய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியரவன்ரி-வெல்ஸ் உள்ளிட்ட குழுவினருக்கும், வட. மாகாண முதலமைச்சரின் செயலாளர்கள் குழுவினருக்கும் இடையிலான...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் புதிய வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் முதலாவது சந்தேக நபர் ஊர்காவற்துறை பொலிஸ்நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தரான கோபி என்பவர், தம்மை பழிவாங்கும் நோக்குடன்...
தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் இணைந்து விசப் போத்தலுடன் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டார். குறித்த பிரச்சினைக்கு ஒரு வார காலத்திற்குள் சரியான முடிவு வழங்கப்படும் என மாவட்ட செயலக அதிகாரியால் உறுதிமொழி வழங்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. வவுனியா தோணிக்கல்...
கடந்த வருடத்தையும் விட இந்த வருடம் டெங்கு நோயினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மும்மடங்கில் அதிகரித்துள்ளன. இந்த தகவலை சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் மருத்துவர் பிரீலா சமரவீர வெளியிட்டுள்ளார். உயிரிழப்புக்களைப் போலவும், இந்த நோயினால் பீடிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்தை விடவும் இந்த வருட முதல்...
மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை, ஆயுள் தண்டனை வரை குறைக்குமாறு, நாடாளுமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்புத் தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கை மற்றும் சட்டக்காரணங்களைத் தேடியறியும் சிறப்புப் படையணியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலாவது அறிக்கையிலேயே மேற்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, நாடாளுமன்றத்தில் 04ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. சிறைச்சாலைகளில்...
இலங்கையில் படுகொலைக் கலாசாரம், 1954ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது” என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவஞானம் சிறிதரன், “தமிழீழத்தைக் கண்களால் காண்பதே தங்களின் கடைசி ஆசையாகும் என்று நீதிமன்றத்தில் கூறியமையால், சிறைக்குள்ளேயே கண்கள் பிடுங்கியெடுக்கப்பட்ட நிலை அன்று காணப்பட்டது” என்றும் கூறினார். “கடந்த காலத்தில் தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட...
சாவகச்சேரி - அல்லாரைப் பகுதியில், வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவருக்கே காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது சாவகச்சேரி பொலிஸ்சார் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காயமடைந்தவரின் உறவினர்கள்...
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வேலையற்ற பட்டதாரிகளுடன் இணைந்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட பேரணி, யாழ். மாவட்ட செயலகம் வரை சென்றுள்ளது. இதன்போது, ‘மத்திய அரசே!...
யாழ்.பல்கலைக்கழகத்தில் 353 நிரந்தர விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே உயர்கல்வி அமைச்சர் இவ்விடயத்தைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”யாழ்.பல்கலைக்கழகத்தில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே...
உயர் பாதுகாப்பு வலயத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் பிடித்து வைத்துள்ளார்கள். அந்த காணிகளை விடுவித்தால் தான் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் மக்களுடைய காணிகளை தம்மால் விடுவிக்கமுடியும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான சிவில் பாதுகாப்பு கூட்டம் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொலிஸார்...
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, ஒருவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மாத்தறை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ம் ஆண்டு மார்ச் 18ம் திகதியளவில் அகுருஸ்ஸ - எல்லவெல பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர், ரியூசன் வகுப்பறையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார். இதனையடுத்து, கணித...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகநபரை பிணையில் விடுவிப்பதற்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது....
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி வந்தும் உரிய நிவாரணங்கள் கிடைக்கப்பெறவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக வடக்கின் பல்வேறு...
தமிழ் ஹீரோக்கள் எல்லாம் இப்போது தமிழோடு நிறுத்திக் கொள்ளாமல் இன்னொரு மொழி மார்க்கெட்டிலும் கவனம் செலுத்துகிறார்கள். சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் ஆண்டனி ஆகியோர் தெலுங்கு பக்கமும் கவனம் செலுத்தி தங்கள் படங்களை ரிலீஸ் செய்கிறார்கள். ஆனால் விஜய் தெலுங்கு மட்டும் அல்லாது கேரள பக்கமும் தன் படங்களுக்கு மார்க்கெட் உருவாக்கி இருக்கிறார். விஜய்யின் தமிழ்...
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இளையராஜா தன் பாடலை பாடக்கூடாது என்று கூறிவிட்டாலும் தான் பாடிய மற்ற பாடல்களின் மூலம் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதனை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் முன்னின்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் வாஷிங்டனில் தங்கியிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்...
Loading posts...
All posts loaded
No more posts
