- Monday
- June 15th, 2026
தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மேக் இன் இந்தியா தயாரிப்புகளுக்கு அங்கீகாரமும் சில சலுகைகளும் வழங்கி வருகிறது. அதாவது இந்திய மனித உழைப்பையும், இந்திய தொழில்நுட்பத்தையும் கொண்டு மட்டும் உருவாகும் பொருட்களுக்கு மேக் இன் இந்தியா அந்தஸ்து வழங்கப்படும். தற்போது சூப்பர் ரஜினி நடிக்கும் 2.ஓ படம் மேக் இன் இந்தியா அந்தஸ்தை பெறுகிறது....
நிலக்கண்ணி வெடிகளை இல்லாததொழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டத்துக்கு பிரித்தானியா 2010ஆம் ஆண்டு முதல் நிதி உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு...
வடக்கிலுள்ள தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் கோரியதாகவும் தமிழ் பெண்களிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்...
புலம்பெயர் நாடுகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களிடம் கப்பம் கோரும் நடவடிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தொிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்...
முல்லைத்தீவு கேப்பாபுலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஷெலீல் ஷெட்டி தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த குழுவினர் மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளையும் பார்வையிட்டனர். முல்லைத்தீவில் - கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று முப்பத்து ஆறாவது நாளாக...
இலங்கைக்கு நேராக சூரியன் காணப்படுவதினால் நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றுமுதல் வெப்பம் அதிகளவில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 12.13லிருந்து ஹம்பாந்தோட்டை , கட்டுதம்பே , நாகியாதெனிய மற்றும் மலிதுவ ஆகிய இடங்களில் நேராக சூரியன் காணப்படும். நாடெங்கிலும் 30 செல்சியசிற்கும் அதிகமாக வெப்பநிலை நிலவும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த...
"யாழ். மாவட்டத்தில் மலிந்திருந்த, போதைப்பொருள் மற்றும் வன்முறைகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன" என்று, யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (04) நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கஞ்சா உள்ளிட்ட பாரிய போதைப்பொருட்களைக் கடத்தல்களை...
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் டொக்டர் நார்பெர்ட் லாமெர்ட்டுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே...
முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு...
வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களிடமிருந்து அறவிடப்படும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை 2 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம், நாடாளுமன்றத்தில் நேற்று(04) செவ்வாய்க்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச்...
பளைப் பிரதேசசெயலக பிரிவிலுள்ள முல்லையடி கிராம மக்கள் தமது கிராமத்தில் ´நுளம்புகள் அற்ற கிராமம்´ என்ற முன்னுதாரணமான செயற்திட்டத்தினை நேற்று முன்தினம் (03.04.2017) ஆரம்பித்துள்ளனர். இச்செயற்திட்டத்தின் மூலம் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தத்தமது வீடுகள் மற்றும் அயல்பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் தமது கிராமத்தினை நுளம்புகள் அற்ற கிராமமாக மாற்றவுள்ளனர். முல்லையடியில் தத்தமது வீட்டையும்...
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 20 க்கு 20 போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை பெற்றது. இதன்படி, இலங்கை அணி 156 என்ற ஓட்ட இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நிலையில் 18.5 ஓவர்கள்...
இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிருத்தி அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, அச் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மார்ச் 31 ஆம் திகதி நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக மாலதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரி மாலதி நிஷாந்தனிற்கு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நிரந்தர வேலை...
வவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா சந்தை வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி இரண்டு தொலைபேசிகள் திருடப்பட்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா தீர்க்கப்படாத...
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்துப் பட்டதாரிகளையும் ஒன்றிணைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகும் பேரணி, யாழ்.நகர் நோக்கிச் சென்று அங்கிருந்து கண்டி வீதி வழியாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை அடையும் என்றும், வடக்கு...
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போதைய தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது நியமனம் தொடர்பான அறிவுறுத்தல்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் இன்று இது பற்றிய உத்தியோக பூர்வ அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களின் போது படுகாயமடைந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கு இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே கருத்து முரண்பாடு...
போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துகளுக்கு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் உரிய பதில் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை குறித்து அரச தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துகள்...
இயக்குனர் மணிரத்னம் இயக்கி நடிகர் கார்த்தி, புதுமுக நடிகை அதிதிராவ் ஆகியோர் நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ என்ற சினிமாபடம் வருகிற 7-ந் தேதி வெளியாகிறது. இதில் நடித்துள்ள கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி அதிதிராவ் ஆகியோர் கோவை புரூக் பீல்டில் உள்ள வணிக வளாகத்தில் ரசிகர்கள் முன்பு தோன்றினார்கள். அப்போது ரசிகர்கள் அவர்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சி...
Loading posts...
All posts loaded
No more posts
