- Sunday
- June 14th, 2026
சிங்ஹலே அமைப்பானது, சிவனொளிபாதமலையில், புத்தர் சிலை வைப்பதற்கு எடுத்த முயற்சி, நல்லதண்ணிப் பொலிஸாரின் தலையீட்டையடுத்து, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் நேற்று, பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், நல்லதண்ணி நகரிலிருந்து சினொளிபாத மலை வீதிவரை, பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. நேற்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிங்ஹலே அமைப்பின் யாத்திரிகர்கள், சிவனொளிபாத மலையில், புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிகளை...
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது...
தந்தை செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தந்தை...
கடும் வெப்பநிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பாடசாலைகளின் அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கல்வி அமைச்சு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது. இதற்கமைய, பாடசாலை மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை குறைப்பது மற்றும் மாணவர்கள் அதிகமாக தண்ணீர்...
36 வயதினிலே படத்திற்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளிவர உள்ள மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய ஜோதிகா “பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், ஒரு படத்தில் நாயகனுக்கு 4 நாயகிகள் வைக்காதீர்கள், நாயகன் பின்னால் நாயகி சென்று ஐ லவ் யூ சொல்வது போன்ற காட்சிகளை நிறுத்துங்கள்,” என திரைப்பட...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய படப்பிடிப்பில் வடிவேலு, விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை ராஜஸ்தான், சென்னை என ரொம்பவும் வெப்பமான...
சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ்...
பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்படவர்களின் உறவுகளும் , இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்த மக்களும்,தமது கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் தமது கோரிக்கைகளை வெளியுலகுக்கு வெளிபடுத்தவும் , வடக்கு கிழக்கெங்கும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். மக்கள் அணிதிரள்வுப்போராட்டங்கள் , எமக்கான நீதிக்கான ஒரு காத்திரமான செயன்முறை , என்பதில் தமிழ் மக்கள் பேரவை ஆழமான நம்பிக்கை...
வடக்கு கிழக்கில் பொதுமக்களால் கடந்த சில மாதங்களாக பல காரணங்களை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற தொடர் போராட்டங்களினை அரசு கவனத்தில் எடுக்கவில்லை. எனவே அரசின் கவனத்தையும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்குமுகமாக 27-04-2017 வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய முழு அடைப்புக்கு போராடும் மக்களிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களின் கோரிக்கைக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினராகிய நாமும் எமது...
கடந்த மூன்று தசாப்பதங்களாக தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டு வந்த இனவழிப்பு யுத்த காலத்திலும், 2009 யுத்த முடிவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் உறவினர்களால் கையளிக்கப்பட்ட பின்னரும் காணாமல் போகச் செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் யுத்தம் முடிந்து 8 ஆண்டுகள்...
வடக்கு கிழக்கு பிரதேசத்தில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்கம் தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்தார். வவுனியா மற்றும் கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைக்கு அமைவாக வர்த்தக சங்க நிர்வாக கூட்டம் நேற்ற (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோதே இதனைத் தெரிவித்தார்....
எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலிற்கு ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தினை பலமடையச் செய்யுமாறு, கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்தராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார். நேற்றயதினம் (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் எங்களுடைய...
வெளிநாட்டு முகவர் ஒருவரினால் புலம்பெயர்ந்து சென்ற முன்னாள் போராளி ஒருவர் உட்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் ஈரான் எல்லைப்பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்லும் நோக்கில் முல்லைத்தீவு செம்மலை மற்றும் உடுப்புக்குளம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புறப்பட்டிருக்கின்றனர். வெவ்வேறு...
மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். “திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மந்துவில் பகுதியினை சேர்ந்த நந்தகுமார் லிங்கேஸ்வரன் (வயது 24), மற்றும் அதே பகுதியினை...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திலகரட்ண டில்ஷானைக் கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (25) இரத்துச் செய்தது. தனது முந்தைய மனைவியான நிலங்கா விதாங்கிக்கு மாதாந்தப் பராமரிப்புப் பணமாக 20,000 ரூபாயையும் தனது மகனுக்கான காப்புறுதிப் பணத்தையும் டில்ஷான் செலுத்தி வந்தார். அந்தத் தொகையைச் செலுத்தாமை காரணமாக,...
நாட்டில் நிலவுகின்ற ஆகக்கூடிய வெப்பம் காரணமாக, ‘வெப்ப அதிர்ச்சி’ ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், ஆகையால், பிள்ளைகளை தண்ணீரில் விளையாட விடுமாறும் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். வெப்ப அதிர்ச்சி நிலைமையை இல்லாமற்செய்வதற்கு, தண்ணீரைக் கூடுதலாகக் குடிக்கவும் உடலை தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் வைத்தியர் அறிவுரை கூறியுள்ளார். விசேடமாக, சின்னப்...
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வழமையான வெப்ப நிலையை விட அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வெப்ப நிலை அதிகரித்திருக்கிறது ஏனைய பிரதேசங்களில் வழமையை விட 3 செல்சியஸ் அதிகளவிலாக வெப்பநிலை நிலவுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் தற்சமயம் 37 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மேலும் 3 செல்சியசினால்...
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் இதுவரை முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கக்கூடாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு,...
இலங்கை, மலேரியா அற்ற நாடு என உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டாலும் மலேரியா அச்சுறுத்தல் தொடர்ந்து இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகின்றது. இந்த ஆண்டு இதுவரை 18 மலேரியா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக மலேரியா தினம் நேற்று ஏப்ரல் 25ம் தேதி அனுசரிக்கப்படுகின்ற நிலையில், இந்த தகவலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும்...
தமிழ் சினிமா எம் ஜி ஆர், சிவாஜி என்கிற இரு ஆளுமைகள் நடித்துக் கொண்டிருந்த போது தங்களுக்கென்று ரசிகர் மன்றங்கள் வைத்திருந்தார்கள். அதைத் தாண்டி தங்களுக்கு பாராட்டு விழா நடத்தவோ, பட்டங்கள் வேண்டியோ மத்திய மாநில அரசுகளிடம் மனு கொடுத்ததில்லை. இதற்காக திரையுலகின் சங்கங்கள், அமைப்புகளை தங்கள் வசதிக்கு வளைத்துக் கொண்டதுமில்லை. வாரக் கடைசியில் சொந்த...
Loading posts...
All posts loaded
No more posts
