- Sunday
- June 14th, 2026
இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் திலகரட்ன தில்ஷானை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கொன்றிற்கு தில்ஷான் முன்னிலையாகாத காரணத்தால் கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவால் இந்த உத்தரவு வௌியிடப்பட்டுள்ளது.வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதி நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் ,...
மக்களின் உரித்துக்களுக்கான – உரிமைக்கான போராட்டங்கள் என்றும் வெற்றி பெற வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களைத் தேடுகின்ற நீண்ட – நெடிய போராட்டத்தை, கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்கின்றனர். அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்கள் நடத்தும் கடையடைப்புப் போராட்டத்துக்கு நாம் எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம். இவ்வாறு அகில இலங்கை அரச பொது...
நாடாளாவிய ரீதியில் உள்ள தமிழ், சிங்கள அரச பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் தவணைக்கான விடுமுறை கடந்த 5ஆம் திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிலையில், பாடசாலை சுற்றுச்...
தமிழர் தாயக பிரதேசத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி நாளைமறுதினம் (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள போராட்டமானது, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈரக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கங்களின் அழைப்பின்பேரில் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ள இப் போராட்டம் தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு கருத்துத்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். அவர் தற்போது `சபாஷ் நாயுடு' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர, சிக்கலில் இருந்த `விஸ்வரூபம்' படத்தின் இரண்டாவது பாகத்தை வெளியிடவும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார். இப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகும் திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இயக்குநர் பிரியதர்ஷனின் உதவியாளரும், 'நடிகவேல்' எம் ஆர் ராதாவின் பேரனுமான அறிமுக இயக்குநர் ஹைக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. இப்படத்தில் ஜீவா - ஸ்ரீதிவ்யா - சூரி முன்னணி...
இந்தி நடிகர் அக்ஷய் குமார் ‘ருஸ்டம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச்சென்றார். அவர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்த நிலையில், அக்ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது சரியல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது. இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க...
ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வருடத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபடக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார். கட்சியைச் சேர்ந்த யாராவது வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபடுவதாக இருந்தால், தன்னிடம் எழுத்து மூலம் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கட்சித்தலைமையகத்தில் இடம்பெற்ற ஐ.தே.கட்சியின்...
எதிர்வரும் 27 ஆம் திகதி கடையடைப்பு செய்யப்பட மாட்டாது எனவும் வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முடிவு எடுத்துள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி எதிர்வரும் 27ஆம் திகதி பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி நேற்று (திங்கட்கிழமை)...
ஊர்காவற்றுறை பகுதியில் வீட்டில் தனித்திருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து விசிறி, வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபரை, எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான், நேற்று உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த சந்தேக நபர், அங்கு தனித்து இருந்த 18 வயதுடைய...
போத்தல்களில் பெற்றோல் விற்ற இருவருக்கு மல்லாகம் நீதவான், தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, திங்கட்கிழமை (24) தீர்ப்பளித்தார். பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவானோர் எரிபொருளைப் பெற்றுக் கொண்டனர்....
முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் 189 ஏக்கர் விஸ்தீரனமான தனியார் காணிகள் நிதிஒதுக்கீடுகள் கிடைத்ததன் பின்னர், 6 வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா உறுதி அளித்துள்ளார். அதேபோல், முள்ளிக்குளம் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளை, தேசிய காணி விடுவிப்பதற்கான நடைமுறையின் கீழ் விடுவிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர...
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள வலஸ்முல்ல கல்வி வலயம் 84.70 சதவீதத்தை பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தை 82.79 சதவீதம் பெற்று கண்டி கல்விவலயமும், 79.74 சதவீதத்தை பெற்று மூன்றாமிடத்தை மாத்தறை மாவட்டத்தில் உள்ள முலட்டியன கல்வி வலயமும் தனதாக்கிக் கொண்டுள்ளது. வெளியான...
அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ”நொக் அவுட்” முறையிலான கால்பந்து சுற்றுப் போட்டியை, அக்கினிச் சிறகுகள் அமைப்பு, கிளிநொச்சியில் நடத்திவருகிறது. இதில், வடக்கு, கிழக்கிலுள்ள விளையாட்டு சங்கங்கள் பங்குபற்றுகின்றன. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினத்தை அடிப்படையாக கொண்டே, இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே18...
வடக்கு, கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரிடமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் இடம்பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சிறுவர் இராஜாங்க...
பட்டதாரிகளின் பங்களிப்பு எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக அவசியமானது என்பதனை உணர்ந்து மிக விரைவில் வேலைவாய்ப்பினை வழங்க வேண்டியது அரசினதும், வடமாகாண சபையினதும் தார்மீக பொறுப்பு என சர்வமத குழுவின் தலைவர் வண பிதா. ஜெயக்குமார் அடிகளார் வலியுறுத்தியுள்ளார். கடந்த 58 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக சர்வமத...
கனியவள கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்த பணிநிறுத்தப் போராட்டத்தை நிறுத்துவதற்கு தொழிற்சங்க ஓன்றியம் தீர்மானித்துள்ளது. நேற்று (24) மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, துறைசார் அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில், தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனியவள மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்தார். திருகோணமலையில்...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்ததாகவும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள்...
வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் அலுவலகங்கள் யாவற்றிலும் பிளாஸ்ரிக் பைகளை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழி இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் 82ஆவது அமர்வின்போது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 47ஆம் இலக்க இலங்கை தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் 20 மைக்குரோன்கள் அல்லது அதற்குக் குறைவான...
நேற்று , 24/04/17 அன்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் பேரவை இணைத்தலைவர் இருதய வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் அவர்கள் ஆற்றிய உரை.. தமிழர்களின் வரலாற்றுரீதியான தாயக நிலத்தின் தலைமை நகரமானதும், இந்த இந்து சமுத்திரத்தின் பூகோள அரசியற் போட்டியின் ஒரு கேந்திரமுக்கியத்துவம் உடைய ஒரு மையப்புள்ளியாகவும் அமைந்ததுமான இந்த...
Loading posts...
All posts loaded
No more posts
