Ad Widget

எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்ததாகவும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோட்டார் சைக்கிளிற்கு 300 ரூபாய்க்கு மேல் பெற்றோல் நிரப்புவதை நிறுத்திவருவதாகவும், கார்கள் உள்ளிட்ட வாகனங்களிற்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் வழங்கப்பட்டுவருகின்றது.

மேலும் மன்னார் நகரில் மூன்று எரிபொருள் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளபோதும் தனியார் ஒருவரின் எரிபொருள் விற்பனை நிலையத்தில் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஏனைய இரு எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் எரிபொருட்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts