கிளிநொச்சியில் புகையிரதம் தாமதம்! பயணிகள் சிரமம்!

இன்று (19) அதிகாலை ஐந்து நாற்பத்தைந்து மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட கடுகதி புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்பொழுது மாடு இறந்ததுடன் புகையிரதத்தின் முன்பகுதியில் (Baffer) பகுதியில் சேதம் ஏற்ப்பட்டமையால் புகையிரத்ததை நகர்த்துவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது. அதனை பின்னர்...

பொலிஸாரின் தலையீட்டை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதல், பொலிஸாரின் தலையீட்டை அடுத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அத்தோடு, ஆர்ப்பாட்டக்காரர்களும் கலைந்து சென்றுள்ளனர். கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள வடக்கு மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை மீள இணைத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியே வவுனியாவில் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு வந்த இளைஞர் குழுவொன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கைகலப்பும் ஏற்பட்டது....
Ad Widget

வடக்கு அமைச்சர்கள் விவகாரம் மீள் பரிசீலனை

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவரை தொடர்ந்து பணியில் அமர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக, தான் நடவடிக்கை எடுப்பதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ். ஆயருடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபையில் வெடித்துள்ள பிரச்சினையை...

வடமாகாண முதலமைச்சருடன் சமயத்தலைவர்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

வடக்கு மாகாண சபையில் பாரிய சர்ச்சைகள் மேலெழுந்துள்ள நிலையில், யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் நல்லை ஆதீனம் ஆகியோர் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு அம்சமாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வனுடன் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் தற்போது முக்கிய சந்திப்பொன்று நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு விவகாரம் தொடர்பான தமது நிலைப்பாடு...

வவுனியா ஆர்ப்பாட்டத்தில் மோதல்: பொலிஸார் குவிப்பு

ஊழல் மோசடி குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கு ஆதரவாக வவுனியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் குறித்த ஆர்ப்பாட்டத்தில், இளைஞர் குழுவொன்று திடீரென பிரவேசித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கலைந்துசெல்லுமாறு கோரி கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அப்பிரதேசத்தில் பெருமளவு...

இந்தியாவை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் ரோஹித்,கோலி, டோனி உள்ளிட்டோர் துடுப்பெடுத்தாட்டத்தில் அசத்த தவறியமையால் இந்திய அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது. பகர் ஜமான் சதம் அடிக்க, பாகிஸ்தான் அணி முதல் முறையாக கிண்ணத்தினை கைப்பெற்றியது. லண்டன் ஒவல் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில்,கிரிக்கெட் விளையாட்டு உலகின் ‘பரம எதிரிகள்’ என கூறப்படும் இந்தியா, பாகிஸ்தான்...

குருதி நன்கொடை விவகாரம்: ‘தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது’

“இலங்கையில் இரத்த தானம் வழங்குவதில் சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாணத்தைக் கொண்டுவர நாம் முயற்சிக்கின்ற வேளையில், ஆங்கில ஊடகம் ஒன்று, தவறான செய்தியை வெளியிட்டுள்ளது” என, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (17) யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு...

தர்மபுரத்தில் கொள்ளை; கொள்ளை கோஷ்டி கைது

தர்மபுரம் கல்லாறு பகுதியில், கடந்த 11ஆம் திகதி அதிகாலை 60 பவுன் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஐவரை, தர்மபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, ஒருதொகை நகைகள், ஒருதொகை பணம், மூன்று வாள்கள் மற்றும் கொள்ளை அடித்த பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...

விக்னேஸ்வரனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து கோரியுள்ளது

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து கோரியுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனினால் எழுத்து மூலமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் அண்மையில் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் எடுத்த தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது எதிர்ப்பு போக்கை வௌியிட்டுள்ளது. குறித்த...

தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது பாதுகாப்பு, தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டி – தும்பர போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மற்றும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அடங்கிய குழுவினர்...

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்து இயங்க முடிவு?

வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறாவிட்டால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியன நாடாளுமன்றத்திலும் தனித்து இயங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகின்றது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சி சார்பில்...

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் அனுமதி!

கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்கள், இம்மாதம் 20ம் திகதி உள்வாங்கப்படவுள்ளதாக ஆசிரியர் கல்விப் பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடளாவிய ரீதியில் உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரத்து 303 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்த விடயம்...

கிளிநொச்சியில் விபத்து இரு இளைஞர்கள் அவசர சிகிச்சை பிரிவில்

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு இளைஞனின் கால் முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது டிப்போ சந்தியில் இருந்து கனகபுரம் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் அம்பாள் குள வீதியில் இருந்து கனகபுரம்...

நாணயத்தாள்களை சேதப்படுத்தினால் தண்டனை: மத்திய வங்கி

இலங்கையில் புழக்கத்திலிருக்கும் நாணயத்தாள்களை சேதப்படுத்துதல், அதில் மாற்றங்களை செய்தல், மற்றும் சிதைத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு நாணயத்தாளை சேதப்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் தண்டப்பணம் விதிக்கப்படும் அளவிற்கு சட்டத்தில் இடமிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த செயற்பாட்டை நிறுத்திக்கொள்ளுமாறும், அவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ள நாணயத்தாளை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக மாற்றிக்கொள்ளுமாறும்...

சவூதியிலிருந்து நாட்டுக்குவர தயாராகும் 3 ஆயிரத்து 500 இலங்கையர்கள்!

சவூதி அரேபியாவில் சட்டவிராதேமாக தங்கியிருக்கும் சுமார் 3 ஆயிரத்து 500 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. தொழிலுக்காக சவூதிக்கு சென்று அவர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களே அங்கிருந்து இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் ஜூன் 25ஆம்...

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று மின்சார விநியோகத்தடை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக, மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று காலை 8.30 முதல் மாலை 5.30 வரை இந்த மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில்...

இலட்சியத்தின்பால் ஒன்றுபட்டு ஆயிரமாய் அணிதிரண்ட எமது மக்களுக்கு நன்றிகள்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்பதிலும், தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பதிலும், ஊழலற்ற நிர்வாகத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்பதிலும், இராணுவ வெளியேற்றப்படல் வேண்டும், சிங்கள பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கின்ற விடயங்களில் உறுதியாக செயற்படும் வடக்குமாகாண...

நேற்றய போராட்டம் வெற்றி ! : ஒத்துழைத்த அனைவருக்கும் தமிழ் மக்கள் பேரவை நன்றி தெரிவிப்பு

முதலமைச்சரின் நிலைப்பாடுகளிற்கெதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ள்ப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளுக்கு,எதிர்ப்புதெரிவித்தும் ,முதலமைச்சரின் கோட்பாடுகளுக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியும் நேற்று நடைபெற்ற கடையடைப்பிற்கு எமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளை தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துக்கொள்கிறது. காலநெருக்கடி மிகுந்த சூழலில், மிகக்குறுகிய முன்னறிவித்தலின் மத்தியிலும், தாமாக முன்வந்து ஆதரவு வெளிக்காட்டிய...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடலில் இறங்கி போராட்டம்!

தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (வியாழக்கிழமை) திருகோணமலையில் கடலில் இறங்கி வித்தியாசமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல்...

தமிழரசுக் கட்சியுடன் சம்பந்தன் அவசர கலந்துரையாடல்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அவரை பதவி விலக்குவதற்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதுகுறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கிற்கு விரைந்துள்ளார். தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சம்பந்தன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பதிலாக...
Loading posts...

All posts loaded

No more posts