தமிழரசுக் கட்சியுடன் சம்பந்தன் அவசர கலந்துரையாடல்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அவரை பதவி விலக்குவதற்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதுகுறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கிற்கு விரைந்துள்ளார்.

தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சம்பந்தன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பதிலாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், தீர்க்கமான முடிவை எட்டும் வகையில் சம்பந்தன் இக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலமைச்சரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராக தமிழரசுக் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts