தமிழரசுக் கட்சிக்கு எதிராக தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்: கஜேந்திரகுமார்

வடமாகாண முதலமைச்சரைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசுக் கட்சி செயற்படுவதனைத் தடுக்க, தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

முதலமைச்சர் சி.வி.க்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்: மாவை

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து தமிழரசுக் கட்சியை புறக்கணித்து வருகின்ற நிலையில், முதல்வருக்கு எதிரான மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மாகாண அமைச்சர்களினால் நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வடக்கு...
Ad Widget

பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு?

பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. குறித்த திருத்தம் தொடர்பாக பரிந்துரைகளை முன் வைக்குமாறு நிதியமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. பஸ் கட்டணங்களில் திருத்தம் செய்வது சம்பந்தமான தேசிய கொள்கைக்கு அமைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 01ம் திகதி கட்டணங்களில் திருத்தம்...

தமிழ்மக்கள் பேரவையின் அவசர ஒன்றுகூடல்

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பிலும், மக்கள் முதல்வர் விக்னேஸ்வரன் ஐயாவின் கொள்கைகளை தொடர்ந்தும் கொண்டுசெல்வது குறித்துமான மக்கள் கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இடம் : 65, அம்மன் வீதி , நல்லூர் - வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு முன் செல்லும் வீதி காலம் : இன்று...

அடுத்த முதலமைச்சர் தொடர்பில் என்னால் முடிவெடுக்க முடியாது : ஆளுநரிடம் மாவை

“அடுத்த முதலமைச்சர் தெரிவு தொடர்பில் கட்சியின் தலைவரான என்னால் முடிவுகளை எடுக்க முடியாது. கட்சியின் செயலாளரே அம்முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிடம் தெரிவித்துள்ளேன் என, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே...

தமிழ் தேசிய உணர்வினை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் சாகடிக்கின்றனர்: சர்வேஸ்கரன்

தமிழ்த் தேசிய உணர்வினை சாகடிக்கின்ற செயலினை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி குற்றஞ்சாட்டப்பட்ட வடக்கு அமைச்சர்கள் இருவரை பதவி விலகுமாறு பணித்தமை மற்றும் இருவருக்கு கட்டாய விடுமுறை வழங்கியமை தொடர்பாக, முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளுநரிடம் 22 உறுப்பினர்கள் ஒப்பமிட்டு கடிதமொன்றை...

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல்!

வடக்கு மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வடக்கு முதல்வருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரிடம் வடக்கு ஆளுநர் இவ் அறிவுறுத்தலை முன்வைத்துள்ளார். வடக்கின் அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இருவர்...

முதலமைச்சருக்கு எதிராக கையெழுத்திட்டவர்கள் இவர்கள்தான்!

வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றக் கோரி நேற்றைய தினம் (புதன்கிழமை) ஆளுநர் ரெஜினால்ட் குரேயிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. அந்தவகையில், வட. மாகாண சபையின் ஆளும் தரப்பினை சேர்ந்த தமிழரசு கட்சியின் 15 உறுப்பினர்களும், ஏனைய கட்சிகளை சேர்ந்த 7 பேரும் மேற்படி முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில்...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகனும் கனடாவில் கொலை!

கனடாவின் கேல்கரியில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பு சந்திரபாபு(வயது 56) மற்றும் அவரது மகன் சந்திரபாபு பிரியந்தன்(வயது 25) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கேல்கரியின் Panorama Hills பகுதியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை(10/6/2017) காலை 5.15 மணியளவில்...

யாழில் தொடரும் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர் வியாபார நிலையமொன்றின் மீது வாள்களை கொண்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த மூவரும் தாக்குதல் நடாத்திய சம்பவமானது அருகில் இருந்த மற்றுமொரு வியாபார நிலைய கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது… நேற்று மாலை யாழ்ப்பாணம்...

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்றய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பில் முதலில் ஈடுபட்டது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும்...

தரம் 7 புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயனத் தாளில் அச்சடிப்பு: மீளப் பெறுமாறு வலியுறுத்தல்!

தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகம் விஷ இரசாயனத் தாளில் அச்சிடப்பட்டுள்ளதுடன், அது மாணவர்களின் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கவல்லது எனவும், அவ்வாறு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட தரம் 7 புவியியல் புத்தகத்தை மீளப் பெறுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. தொழில்சார் நிபு­ணர்­களின் கேட்போர் கூடத்தில் நேற்று...

வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்த சிலரே முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்காக எதிர்க்கட்சி...

259 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைப்பட்டதாரிகள் 259 பேருக்கு நேற்று(புதன்கிழமை) ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாகாணசபை தவிசாளர் சந்திரதாச கலபதி, பிரதம செயலாளர் சரத் அபய...

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.க்கு எதிராக ஆளுநரிடம் கடிதம்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றுவதற்கான கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் நேற்று இரவு கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக்...

100 சதங்களை விளாசி புதிய மைல்கல்லை எட்டினார் குமார் சங்கக்கார!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளை தேடிதந்த அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, முதல் தர மற்றும் ஏ தர போட்டிகளில் 100 சதங்களை விளாசி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற குமார் சங்கக்கார, தற்போது முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும், வெளிநாட்டு...

சப்ராஷ் அஹமட்டுக்கு அபராதத்துடன் எச்சரிக்கை!

வெற்றி வாய்ப்பு இலங்கை அணியின் பக்கம் இருந்த போதும் தனது நிதானமான துடுப்பாட்டத்தால் பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்த பாகிஸ்தான் அணித் தலைவருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு ஐ.சி.சி.யினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியின் போது பந்து வீசுவதற்கு ஒரு மணித் தியாலம் தாமதப்படுத்திய குற்றத்திற்காகவே சப்ராஷ் அஹமட்டுக்கு போட்டி...

தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? :மெத்தியூஸ்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிடிய பிடியெடுப்புக்கள் மற்றும் ரன் அவுட்டுக்களை தவறவிட்டமையே தோல்விக்கு முக்கிய காரணம் என இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார். 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டு பிடியெடுப்புக்களை எடுத்து களத் தடுப்பை சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தால் கூட இப்போட்டியில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால்...

சிறுவனுக்கு மரண தண்டனை; ஜனாதிபதியிடம் கேட்கப் பணிப்பு

சிறுவனாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலை தொடர்பில், அச்சிறுவனுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து, சரியான தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரும்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது. சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகத்துக்கே, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு, திங்கட்கிழமை (12) பணித்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால், தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புத் தொடர்பான, மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்தியபோதே,...

கர்ப்­பிணி கொலை: சாட்சியாளரிடம் பேரம் பேசியமை குறித்து விசாரிக்க உத்தரவு

ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் அடையாள அணிவகுப்பின் போது, தம்மை அடையாளம் காட்டாதிருக்க, சந்தேகநபர்கள், சாட்சியாளரிடம் பேரம் பேசியமை தொடர்பில், விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் கண்கண்ட சாட்சியமாக உள்ள வாய் பேச முடியாத சிறுவன் தம்மை அடையாளம்...
Loading posts...

All posts loaded

No more posts