Ad Widget

தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? :மெத்தியூஸ்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிடிய பிடியெடுப்புக்கள் மற்றும் ரன் அவுட்டுக்களை தவறவிட்டமையே தோல்விக்கு முக்கிய காரணம் என இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.

200 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டு பிடியெடுப்புக்களை எடுத்து களத் தடுப்பை சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தால் கூட இப்போட்டியில் வெற்றி பெற்று இருக்கலாம்.

ஆனால் 236 ஓட்டங்களை பெற்ற போதும் பாகிஸ்தான் அணி 162 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதேவேளை முக்கியமான தருணங்களில் பிடியெடுப்புக்கள் நழுவவிடப்பட்டன. இறுதியாக தவறவிடப்பட்ட இரு பிடியெடுப்புக்களே இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

இப்போட்டியில் நாணய சுழற்சி என்பது முக்கியமான ஒன்றாக காணப்படவில்லை.

மூன்றாவதாக களமிறங்கும் வீரர் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தனது துடுப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு மூன்றாவதாக களமிறங்கும் வீரருக்கு உள்ளது.

எதிர்காலத்தில் மூன்றாம் நிலை வீரராக யாரை களமிறங்குவது என்பது தொடர்பாக தேர்வுக் குழுவுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

இளம் வீரர்களை கொண்ட எமது அணி இத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்றே கூறலாம்.

தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் சுலபமாக வெற்றிக்கொள்ளவில்லை. மிகவும் போராட்டத்திற்கு மத்தியிலேயே வெற்றியடைந்தனர். எதிர்அணிக்கு வெற்றி இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் போராடும் நிலையில் வீரர்கள் தமது திறமையை வெளிப்படுத்தினர்.

இந்த மனநிலையுடன் எதிர்காலத்திலும் செயற்பட்டால் போட்டிகளில் இலகுவாக வெற்றி பெறமுடியும்.

மேலும் தற்போது அணியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என நான் நினைக்கவில்லை என்றார்.

Related Posts