- Monday
- May 18th, 2026
வவுனியா – புளியங்குளம் இந்துக்கல்லூரி அருகாமையில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் இந்த சிலையை திறந்துவைத்தார். குறித்த திருவள்ளுவர் சிலையை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் அமைப்பில் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதன்போது, புதிய அரசியல் அமைப்பில் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். புதிய அரசியல் அமைப்பின்...
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணங்களை 6.28 சதவீதமாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது குறைந்தபட்ச பேருந்து கட்டணமாக உள்ள 9 ரூபா, ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது....
கந்தளாய் - பேரமடுவ பிரதேசத்தில் 10 வயது மாணவி மீது வீதியில் வைத்து ஊசி ஏற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.குறித்த மாணவி கடந்த 17 ஆம் திகதி மேலதிக வகுப்பொன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய வேளை உந்துருளியில் பின்தொடர்ந்து வந்த இருவர் இவ்வாறு அவர் மீது ஊசியை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.உந்துளியில்...
இம்மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதாகவும், இதனால், ஏற்படும் வெள்ளம் மற்றும் மண் சரிவு என்பவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற, முன் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபா தெரிவித்துள்ளார். இந்த தயார்படுத்தல்,...
உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன ஒருமனதாக தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய...
அமெரிக்காவில் 17 வயதுடைய நப்ரா ஹுசைன் என்ற முஸ்லிம் மாணவியொருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பள்ளிவாசலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேஸ் போல் மட்டையினால் பலமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய மார்ட்டின் டொரஸ் எனும் இளைஞனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்...
கடன் அட்டைகளுக்காக அறவிடப்படுகின்ற வட்டி வீதத்தினை, மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கையினை வணிக வங்கி மேற்கொண்டுள்ளது. இதனால் வருடாந்தம் நூற்றுக்கு 24 வீதமாக்கப்பட்டிருந்த வட்டி வீதம், எதிர்வரும் ஜீலை முதலாம் திகதி முதல் 28 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.
தொடருந்துடன் ஆபத்தான வகையில் செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே கட்டளை சட்டத்துக்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள் இவ்வாறு ஆபத்தான செல்பி புகைப்படங்கள் எடுக்க கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புகைப்படங்கள் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான...
வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்துள்ளார்.தொலைபேசி ஊடாக அவர் இதனைக் கூறியதாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் அந்த கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.மாகாண அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை...
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று காலை 8.30 முதல் மாலை 6.00 மணிவரை மின்சார விநியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தின், மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை,...
விசாரணை குழுவுக்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளதாக வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , விசாரணை அறிக்கையில் எந்தவெரு இடத்திலும் வடக்கு விவசாய அமைச்சர் ஊழல் மோசடி செய்தார் என்றோ இலஞ்சம்...
முன்னணி அணிகளுக்கு அதிக அளவில் போட்டிகள் இருப்பதால் அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த இருபதுக்கு - 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகள் குறைந்த நேரத்தில் முடிந்து விடுவதாலும், அதிக அளவில்...
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக, கடந்த வியாழக்கிழமை கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, நேற்று (19) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது. வடமாகாண சபையைச் சேர்ந்த அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்த நால்வரில் இருவரை, அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யுமாறும், இருவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,...
தனியார் வைத்தியசாலைகள் , இரசாயன கூடங்களில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை மற்றும் டெங்கு இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணம் நேற்று முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் வேண்டுகோளுக்கமைவாக நேற்று முதல் குறைக்கப்படுகின்றது. இதற்கமைவாக தனியார்வைத்தியசாலைகளில் முழுஅளவிலான இரத்த பரிசோதனைகளுக்கு 250 ரூபா ( Full...
வடக்கு முதலமைச்சருக்கு தமது ஆதரவை வழங்குவதாக புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையை கருத்தில் கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபையின் முதல்வராக சீ.வீ விக்னேஸ்வரன் இருக்க வேண்டும் . அவருக்கு எதிராக தழிழரசு கட்சி...
தற்கொலை செய்து கொள்வதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதனை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சிறுவர்கள் உட்பட இளைஞர்கள் ரயிலில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்வது தொடர்பில்...
தமிழ் மக்களால் ஏகபிரதிநிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார். வடக்கு மாகாணசபையில் எற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,’ ஒரு மாகாண...
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களுக்கும் விதிக்கப்பட்ட கட்டாய விடுமுறையை வலியுறுத்த மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்து ஒரு மாதகால கட்டாய விடுமுறையையே தான் வலியுறுத்த மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள...
‘என்னை பதவி கவிழ்ப்பதற்கான சூழ்ச்சித் திட்டம் கொழும்பிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது’ என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை அவரது ஆதரவாளர்கள் சிலர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலிருந்தே தம்மை பதவி கவிழ்க்க சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் யார்...
Loading posts...
All posts loaded
No more posts
