Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதை அனுமதிக்க முடியாது: வியாளேந்திரன்

தமிழ் மக்களால் ஏகபிரதிநிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபையில் எற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,’

ஒரு மாகாண சபைக்குள்ளே இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டுக்கொண்டு ஒரு மாகாண சபையை கொண்டு நடத்துவதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் என்றால் எப்படி இவர்கள் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேச முடியுமென்று தென்னிலங்கையில் இருந்து எத்தனையோ ஊடகங்களும் இணையத்தளங்களும் கேலித்தனமாக பேசுகின்ற நிலைமைக்கு வடக்கு மாகாணசபை நிலவரம் சென்றிருப்பது தமிழ் மக்களுக்கு பாதிப்பையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

எங்களுடைய கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியை பொறுத்தமட்டில் எங்களுடைய வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கு சார்பாகவே கையொப்பமிட்டிருக்கின்றார்கள். எந்தவிதத்திலும் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் ஏகபிரதிநிதியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துபோக வேண்டும் என பலர் தென்னிலங்கையிலும் வடக்குகிழக்கிலும் முழு இலங்கையிலும் பலர் வேலை செய்துகொண்டிருக்கையில் இன்று ஏற்பட்டிருக்கின்ற வடமாகாணசபை விவகாரம் அவர்களுக்கு ஒரு பெரிய வழியை திறந்துவிட்டதாக இருக்கன்றது. இதை ஒரு பெரும் அவமானமான விடயமாகவே நான் கருதுகின்றேன்.’ என்றார்

Related Posts