Ad Widget

புதிய முறையில் உள்ளூராட்சி தேர்தல்: அரசாங்கம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன ஒருமனதாக தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related Posts