Ad Widget

பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை

புதிய அரசியல் அமைப்பில் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, புதிய அரசியல் அமைப்பில் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பின் அடிப்படையில் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாயிரமாக வரையறுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு மாதக் கொடுப்பனவாக 15000 ரூபா வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts