தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்தால் ஆதிக்கத்தினை கைப்பற்ற முடியும் : முதலமைச்சர் சீ.வி

தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை செலுத்தினால், பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொலிஸ் சேவைக்காக 500 விண்ணப்பங்கள் உள்ளன. அவற்றில் இணைந்துகொள்வதற்கு எமது தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஸ்ட பிரதிப்...

நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று இடம்பெறும். டெங்கு ஒழிப்புக்கான வேலைத்திட்டத்திற்கு மக்கள் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். டெங்கு நோய் தாக்கம் பற்றி மக்களுக்கு விளக்கம் அறிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இலவச சுகாதார சேவையை மக்களுக்கு...
Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீளாய்வு செய்ய உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட உத்தரவை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பணித்துள்ளது. அதன்படி வழக்கு கோவையை மீளாய்விற்கு வவுனியா மேல் நீதிமன்றிற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வண.பிதா. எழில்ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் நடத்தப்படவிருந்த நினைவு தின நிகழ்வை...

பருத்தித்துறையில் மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு!

பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் மேலதிக துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கு மீனவ குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது தொழில் பாதிக்கப்படுமெனவும் மாற்று இடத்தில் துறைமுகத்தினை அமைப்பதற்கான இடத்தினை தெரிவு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர். துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கடற்றொழில் அமைச்சு மற்றும் துறைமுக அபிவிருத்தி திணைக்களம் உட்பட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்...

வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக இலவச இணைய வசதி விரைவில்: பிரதமர்

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அனைவருக்கும் இலவச இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வை-பை (wi-fi) வழங்கும் செயற்றிட்டத்தில் தாமதங்கள் ஏற்பட்டாலும், அளித்த வாக்குறுதிக்கு அமைய விரைவில் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை அடுத்த மாதம் 8ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 3 இலட்சத்து 15 ஆயிரத்து 27 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலையில், இதில் 2 இலட்சத்து 37...

நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் முறைகள்பற்றி ஆராய ஐங்கரநேசன் தலைமையில் விசேட குழு

நெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்துள்ளார். நெடுந்தீவில் அண்மையில் வரட்சி காரணமாகக் குதிரைகள் இறந்துள்ளன என்ற செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்தே முதலமைச்சரால் இந்த விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தலைமையிலான இக்குழுவில் மாகாணசபை உறுப்பினர்கள் விந்தன்...

யாழ். திண்மக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு கிட்டியது!

யாழ்.மாவட்ட பிரதேச சபைகளில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை கீரிமலைப் பகுதியில் கொட்டும் வகையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோருக்கு இடையே நேற்று (வியாழக்கிழமை) குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் முன்னர் சீமெந்து தொழிற்சாலை...

வட. மாகாண வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வந்துள்ள அமெரிக்க நிறுவனம்

வட. மாகாணத்தில் காணப்படும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்க நிறுவனமொன்று முன்வந்துள்ளது. அதன்படி வடக்கு சூழலுக்கு ஏற்ற தரமான வீடுகளைப் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் வீட்டுத்திட்டத்தில் பங்கெடுக்கவுள்ளதாக அமெரிக்க வர்த்தக மற்றும் தொழில்நுட்ப சர்வதேச நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியான ரி.பரமானந்தன் ஆனந்த் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

சிம்பாவே, இலங்கை டெஸ்ட் போட்டி : தடுமாறுகிறது சிம்பாப்வே!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள சிம்பாவே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணித்தலைவர் கிறேம் கிறீமர் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சிஹாபா மற்றும் ஹமில்டன் மசகட்சா நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்தனர். எனினும் ரங்கன...

சின்னத்திரைக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு

2009 முதல் 2013 ஆண்டு வரைதமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியான நெடுந்தொடர்கள், அதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:- 2009-ம் ஆண்டு: 1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) - திருமதி செல்வம் 2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) - வசந்தம் 3. ஆண்டின் சிறந்த...

தமிழ் பற்றாளரும் நடிகருமான ஓவியர் வீரசந்தானம் காலமானார்

பீட்சா, கத்தி திரைப்படங்களில் நடித்தவரும் தமிழ் மொழிப்பற்றாளருமான ஓவியர் வீரசந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். தமிழ் மொழிப்பற்றாளரான வீரசந்தானம் சிறந்த ஓவியராக திகழ்ந்தார். ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, வழக்கமான...

இரண்டாவது இன்னிங்ஸ்க்கு தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அட்டகாச ஆட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள். கேப்டன் தோனி தவிர சுரேஷ்ரெய்னா, டுவைன்பிராவோ, அஸ்வின், மெக்குல்லம், ஸ்மித், ஜடேஜா என்று பல ஆல்ரவுண்டர்களுடன் வலுவான அணியாக...

இலங்கைத் தமிழர்கள் 10 பேர் திருச்சி சிறையில் உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரி இலங்கைத் தமிழர்கள் சிறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உரிய ஆவணங்களின்றி தமிழகம் வந்தது உள்பட பல்வேறு குற்றப்பிரிவு வழக்கின் கீழ் கைது செய்து சென்னை புழல் சிறையில்...

பிரபாகரனை தப்பிக்க செய்ததாக எழும் குற்றச்சாட்டுகள் வெறும் கட்டுக்கதை: ரொபேர்ட் ஓ பிளேக்

இலங்கை ஆயுதப் படையினரிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தப்பிக்கச் செய்வதற்கு உதவியதாக எம்மீதான குற்றச்சாட்டுகள் வெறும் கட்டுக்கதை என இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் இலங்கையர்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாரா குழுவொன்றுடனான கலந்துரையாடலின்போது இவ்வாறு தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்: சுமனரத்ன தேரர்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் காலத்தில் சிங்கள இனத்தை மிதித்து முன்னோக்கிச் செல்கின்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பௌத்த பிக்குகள்...

வட.மாகாண பாதுகாப்பு பிரிவில் தமிழ் இளைஞர்களை இணைக்க வேண்டும் : முதலமைச்சர்

வட. மாகாணத்தில் காணப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் தமிழ் இளைஞர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட. மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளுக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு யாழ். கைதடியில் அமைந்துள்ள வட. மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த...

யாழ். நகர சந்தைக்கட்டடத்தை விரைவாக அமைக்க வேண்டும் : வணிகர் கழகம் கோரிக்கை

1982 ஆம் ஆண்டு எரிக்கபட்ட யாழ் .நகர சந்தைக் கட்டடம், மீள அமைக்கப்படுவதை வரவேற்பதோடு, அதனை விரைவாக அமைத்துத் தர வேண்டும் என யாழ் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 1982ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்ட தினத்தில், மிகப் பழமை வாய்ந்ததும் யாழ்ப்பாண சரித்திரத்தில் அடையாளச் சின்னமாக இடம்பெற்ற நகர மத்தியில் அமைந்திருந்த...

ஊடகவியலாளருக்கு அழைப்பாணை: ‘பின்னணி என்ன’???

“யாழ். ஊடகவியலாளர் ஒருவருக்கு, குற்றப்புலனாய்வு துறையால் அனுப்பப்பட்ட அழைப்பாணையின் பின்னணி தொடர்பாக சிந்திக்கவேண்டியுள்ளது” என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில், நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “குற்றபுலனாய்வுத்துறையால் யாழ். ஊடகவியாளாலர் த.பிரதீபனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில், யாழ். ஊடகவியலாளர்...

யாழில் தனது புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட நடிகை ரம்பா

யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் தனது புகுந்த வீட்டையும் பார்வையிட்டார் தமது குடும்பத்துடன் நடிகை திருமதி ரம்பா இந்திரன். இவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துடன் சுதுமலை அம்மன் ஆலய பிரதம குருக்களுடன் சந்திப்பிலும் இவர்கள் கலந்து கொண்டனர். இது தான் திருமணம் செய்த பின்னர் முதற்தடவையான வருகையாக இருக்கின்றது....
Loading posts...

All posts loaded

No more posts